உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்

Arogya regai
- Advertisement -

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் தமிழ் மொழியின் புகழ் பெற்ற பழமொழிகளில் ஒன்று. ஒரு மனிதன் எத்தனை கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும் அவனது உடலில் வியாதிகள் இருந்தால், அவன் சம்பாதித்த செல்வம் அவன் வைத்திய செலவுகளில் கழியும். அப்படி ஒருவனுக்கு அவனது ஆரோக்கிய நிலையை பற்றியும், வேறு சில தன்மைகளை பற்றியும் கூறும் ரேகை தான் “ஆரோக்கிய ரேகை”. இந்த ரேகையை பற்றி சிறிது இங்கு தெரிந்து கொள்வோம்.

Arogya regai
ஆரோக்கிய ரேகை

இந்த ரேகை மனிதர்கள் எல்லோரின் கைகளிலும் காண முடியாத ஒரு ரேகை ஆகும். இந்த ஆரோக்கிய ரேகை ஒருவரின் உள்ளங்கையின் மணிக்கட்டு பகுதியிலிருந்து தொடங்கி, சுண்டு விரலின் அடிப்பகுதியை நோக்கி செல்வதாகும். ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ரேகை தெளிவாக இருக்கும். அதன் படம் மேலே உள்ளது.

- Advertisement -
  • ஆரோக்கிய ரேகை தெளிவாகவும், மற்ற ரேகைகள் பின்னல்கள் ஏதுமின்றி இருந்தால், அந்த நபர் சிறந்த உடலாரோக்கியம் மிக்க மனிதராக இருப்பார். மேலும் கல்வியிலும் பிற கலைகளிலும் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருப்பார். வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை பெறுவார்.
  • ஆரோக்கிய ரேகை சிதைந்து காணப்பட்டால் அவ்வப்போது சிறிய அளவில் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
  • ஆரோக்கிய ரேகை அழுத்தமாக இல்லாத பட்சத்தில் அந்த நபர் உடல் பலமின்றி இருப்பார். அடிக்கடி நோய்களால் பீடிக்கப்பட்டு அவதியுறுவார்.

Kai regai

  • இந்த ஆரோக்கிய ரேகை புத்தி ரேகையை தொட்டிருந்தால் நோய்கள் சுலபத்தில் பீடிக்காத உடலும், மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் கொண்டவராகவும் இருப்பார்.
  • இந்த ஆரோக்கிய ரேகையின் நடுவில் கருப்பு நிற புள்ளி ஏதேனும் தென்பட்டால் அந்த நபர் நெடுநாள் நோய் ஏதேனும் ஒன்றால் அவதிபடுவார் என்பதை காட்டுவதாகும்.
  • முன்பே கூறியது போல இந்த ரேகை ஒரு சிலருக்கே இருக்கும். இந்த ரேகை இல்லை என்றால் அதனால் பெரிதாக பாதிப்புகள் ஏதும் இல்லை.

இதையும் படிக்கலாமே:
வெளிநாடு சென்று கோடிகளில் சம்பாதிக்கும் யோகம் உங்கள் கைரேகையில் உண்டா பாப்போம்?

கைரேகை ஜோதிடம் பற்றிய மேலும் பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்..

- Advertisement -