உங்கள் கைரேகையில் பளிச்சென தெரியும் 4 ரேகைகள் எதைக் குறிக்கிறது என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

கைரேகை சாஸ்திரம் என்பது இந்தியாவில் இருக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு கிளை சாஸ்திரமாக பார்க்கப்பட்டு வருகிறது. வால்மீகி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட கைரேகை சாஸ்திரம் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியதாக நம்பப்பட்டு வருகிறது. பல்வேறு கலாச்சாரத்தில், பல்வேறு விதமாக கைரேகை சாஸ்திரங்கள் கணிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் கைவிரல் ரேகை மற்றவர்களின் ரேகையோடு ஒருபோதும் ஒத்துப் போவதில்லை. ஒரு தனி மனிதனின் அடையாளமாக கைரேகை விளங்குவதால் கைரேகை ஜோதிடம் என்பது சிறப்பான ஒன்றாக இருந்து வருகிறது.

kai regai

கைரேகை ஜோதிடத்தை சரியாக கணிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே வருவது வருந்தக்கூடிய ஒரு விஷயம் ஆகும். முந்தைய காலத்தில் கைரேகை சாஸ்திரம், நாடி சாஸ்திரம் வைத்து எதிர்காலத்தை துல்லியமாக கணித்து கூறி விடுவார்கள். இப்போது ஆங்காங்கே தென்படும் ஒரு சிலரும் பணத்திற்காக எதையாவது கூறி வைக்கிறார்கள் அவ்வளவு தானே தவிர, கைரேகை ஜோதிடம் முற்றிலுமாக அழிந்து வருகிறது என்று கூறலாம்.

நம்முடைய கைரேகையில் நிறைய ரேகைகள் காணப்படும். மெல்லியதாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும், குட்டையாகவும் விதவிதமான வகைகளில் எண்ணற்ற ரேகைகள் காணப்பட்டாலும் நான்கு ரேகைகள் மட்டும் பளிச்சென தெரியும்படி அமைந்திருக்கும். அதிலும் ஒரு சிலருக்கு மூன்று ரேகைகள் தான் பளிச்சென்று இருக்கும். அவை எதை பற்றி குறிக்கிறது? அதை வைத்து நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்? என்பதை மேலோட்டமாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

kai-regai

மணிக்கட்டிலிருந்து கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வில் போன்று வளைந்து செல்லும் ரேகையை தான் ஆயுள்ரேகை என்பார்கள். ஆயுள் ரேகை அமைந்திருக்கும் நீளம், அடர்த்தி போன்றவற்றை வைத்து ஒருவரின் உடல் ஆரோக்கியம், ஆயுள், எதிர்காலம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். மணிக்கட்டு வரை நீண்டு காணப்பட்டால் அவர்களின் ஆயுள் அதிகமாக இருக்கும். சீராக இல்லாமல் இடையில் வளைந்து வளைந்து சென்றால் ஆரோக்கிய பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பார்கள்.

- Advertisement -

சுண்டு விரலுக்கு கீழே ஆரம்பித்து ஆள்காட்டி விரலை நோக்கி நீளமாக செல்லும் ரேகையை இருதய ரேகை என்பார்கள். இந்த ரேகை பலருக்கும் ஆள்காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் இடையில் பள்ளத்தில் சென்றுவிடும். அவ்வாறு அல்லாமல் ஆள்காட்டி விரலுக்கு மேலே சென்றால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். பள்ளத்தை நோக்கி செல்லாமல் மேட்டை நோக்கியபடி இருந்தால் புத்திசாலிகளாக இருப்பார்கள். பள்ளத்தை நோக்கி செல்பவர்களுக்கு பொறுமை என்பது இருக்காது. எதிலும் அவசரக்குடுக்கை போன்று நடந்து கொள்வார்கள்.

HEART REGAI

ஆயுள் ரேகையிலிருந்து பிரிந்து இருதய ரேகைக்கு நடுவில் செல்லும் ரேகையை தான் புத்தி ரேகை என்பார்கள். இந்த புத்தி ரேகை மணிக்கட்டை நோக்கி அப்படியே திரும்பி சென்றால் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். மணிக்கட்டை நோக்கி திரும்பாமல், சுக்கிர மேட்டை நோக்கினால் அறிவாற்றலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். எல்லோரையும் புரிந்து கொள்ளும் திறமை இவர்களிடம் இருக்கும். ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் ஒன்றாக இருப்பவர்களை விட தனித்தனியே பிரிந்து காணப்பட்டால் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.

puthi-regai

பொதுவாக இந்த மூன்று ரேகைகள் எல்லோரிடத்திலும் இருக்கும். நான்காவதாக விதிரேகை பளிச்சென்று சிலரது கைகளில் தென்படும். இந்த ரேகை மணிக்கட்டிலிருந்து இருதய ரேகைக்கும் புத்தி ரேகைக்கும் இடையில் நேராக செல்லும் படியாக இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அமைப்பில் இருக்கும். இந்த ரேகை செல்வத்தையும், வசதி வாய்ப்புகளையும் குறிக்கும். இது எந்த அளவிற்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கை வசதி இருக்கும். ஒரு சிலருக்கு இந்த ரேகையே இருக்காது. அவர்கள் வாழ்க்கையில் பெரும் போராட்டங்களை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

kai regai

இருதய ரேகை, ஆயுள் ரேகை, புத்தி ரேகை, விதி ரேகை இந்த நான்கு ரேகைகளும் சாதாரணமாக எல்லோருக்கும் பளிச்சென்று நன்றாக தெரியும். இவை நான்கும் கைரேகை சாஸ்திரத்தில் முக்கியமான ரேகைகளாக பார்க்கப்படுகிறது. இருதய ரேகைக்கும், சுண்டு விரலுக்கும் இடையில் சிறிய அளவில் செல்லும் ரேகை காதல் ரேகை என்பார்கள். இவை வாழ்க்கையில் காதலில் அவர்கள் கொண்ட ஆழமான உணர்வை எடுத்துரைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட ரேகைகள் இருந்தால் ஒன்றிற்கும் மேற்பட்ட காதல் வாய்க்கும் என்பார்கள். ஒரு சிலர் இதை குழந்தை ரேகை என்பார்கள். எத்தனை ரேகைகள் இருக்கிறதோ அத்தனை குழந்தைகள் பிறக்கும் என்பார்கள்.

இதையும் படிக்கலாமே
கை ரேகையை வைத்து உங்களின் வாழ்க்கை துணையுடைய குண நலன்களை தெரிந்து கொள்ளலாம்

இது போன்று மேலும் உங்களுக்குரிய கைரேகை சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.