ஆரோக்கியம் தரும் பிள்ளையார் வழிபாடு

pillaiyar1
- Advertisement -

வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் இன்று மருந்து மாத்திரை சாப்பிட்டுவிட்டு தான் உணவை சாப்பிடுகின்றோம். தீராத நோய் பிரச்சனை. அப்படி என்னதான் இந்த கலியுகத்தில் பிரச்சனை இருக்கிறது என்றே தெரியவில்லை. சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வீண் விரைய செலவு.

ஹாஸ்பிடல் கொண்டு போய் கொட்டிக் கொடுப்பதில் தான் இன்றைய வருமானத்தில் பாதி செலவாகிறது. இந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

தீராத நோய் தீர்க்கும் விநாயகர் வழிபாடு

நவதானியங்கள் என்று இருக்கிறது அல்லவா. ஒன்பது தானியங்கள், ஒன்பது கிரகத்திற்கு உரியதாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நமக்கு வாழ்க்கையில் நோய்நொடி பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக இருப்பது இந்த ஒன்பது கிரகங்களின் வேலையாகத்தான் இருக்கும். கிரகங்களின் சூழலை பொருத்து தானே நம்முடைய வாழ்க்கையின் சூழல் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே இந்த கிரகங்களை, அதற்குப் பிடித்த தானியங்களை வைத்து, சரி கட்டி விட்டால் நம்முடைய வாழ்வில் நோய் நொடி பிரச்சனை இருக்காது.

எந்த கிரகத்தில் பிரச்சனை வந்தாலும் பிள்ளையாரை போய் கும்பிட்டிங்கன்னா, அந்த பிரச்சனையிலிருந்து சீக்கிரமாக வெளிவந்து விடலாம். பிள்ளையாருக்கு அப்படி ஒரு பவர் இருக்குது இல்லையா. அதற்காகத்தான் நாம் பிள்ளையாரை இப்போது வழிபாடு செய்யப் போகின்றோம். எப்படி தெரியுமா.

- Advertisement -

9 நவகிரகங்களுக்கு, 9 தானியங்கள் இருக்கிறது. அதை நீங்கள் அந்தந்த கிழமையில் சமைக்க வேண்டும். உதாரணத்திற்கு இப்போது கொண்டைக்கடலை என்றால் அது குருவுக்கு உரியது. அதை வியாழக்கிழமை அன்று சமைக்க வேண்டும். வியாழக்கிழமை ஒரு கைப்பிடி அளவு கொண்டை கடலையை உள்ளங்கைகளில் வைத்து மூடி கொள்ளுங்கள். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் அரச மரத்தடி பிள்ளையாரை வழிபாடு செய்யுங்கள்.

கையில் இருக்கும் கொண்டை கடலையோடு பிள்ளையாரை மூன்று முறை வலம் வந்து விடுங்கள். பிறகு இந்த கையில் இருக்கும் கொண்டை கடலையை வீட்டிற்கு கொண்டு வந்து மனைவியிடம் சமைப்பதற்காக கொடுத்து விடுங்கள். மனைவி கூட இதே போல கோவிலுக்கு போய் வேண்டுதல் வைத்து பரிகாரத்தை செய்துவிட்டு அவர்கள் கையாலே அந்த கொண்டை கடலையை எடுத்து போட்டு சமைக்கலாம் தவறு கிடையாது. அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

இதேபோல ஒன்பது கிரகங்களுக்கு உரிய, ஒன்பது தானியங்களை அனந்த குறிப்பிட்டுக் கிழமையில் சமைக்கும்போது பிள்ளையாருக்கு வழிபாடு செய்துவிட்டு, பிள்ளையாரிடம் நோய்நொடி தீர வேண்டும் என்று வேண்டுதல் செய்துவிட்டு அந்த தினத்துக்குரிய தானியத்தை சமைத்து சாப்பிடும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் பெருகும்.

நோய் நொடி தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. மாதத்தில் ஒன்பது நாட்கள் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். இதை பரிகாரமாக நினைத்து செய்ய வேண்டாம். சமைக்கும் போது கூடுதலாக ஒரு வேலையை செய்யப் போகிறீர்கள். அவ்வளவுதான். சரி ராகு கேதுவுக்கு நாட்கள் கிடையாதே என்ன செய்வது வாரத்தில் ஏதாவது ஒரு கிழமையில் ராகு கேதுக்கு உரிய தானியத்தை நீங்கள் சமைக்கலாம் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

அந்த தானியத்தை சமைக்கும்போது கவனமாக பிள்ளையாரை கும்பிட்டு வந்து சமைக்க வேண்டும். சரி இந்த தானியத்தை எடுத்துக்கொண்டு எங்களால் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை. என்ன செய்வது.

உங்க பூஜையறையில் ஒரு பிள்ளையார் இருப்பார் அல்லவா அவருக்கு முன்பு ஒரு கிண்ணத்தில், ஒரு கைப்பிடி அந்த குறிப்பிட்ட தானியத்தை போட்டு மனதார பிரார்த்தனை செய்து அந்த தானியத்தை எடுத்து சமைச்சுக்கோங்க நிச்சயம் உங்களுடைய குடும்பத்திற்கும் ஆரோக்கியம் கிடைக்கும். மருத்துவ செலவு குறையும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது நோய் வாய் பிரச்சனை இருந்தால் கூட அது கூடிய சீக்கிரத்தில் சரியாகிவிடும்.

சூரியன் – கோதுமை – ஞாயிற்றுக்கிழமை
சந்திரன் – அரிசி நெல் – திங்கட்கிழமை
செவ்வாய் – துவரை – செவ்வாய்க்கிழமை
புதன் – பச்சைப்பயிறு – புதன்கிழமை

குரு – கொண்டைக்கடலை – வியாழக்கிழமை
சுக்கிரன் – மொச்சை – வெள்ளிக்கிழமை
சனி – எள்ளு – சனிக்கிழமை

ராகு – உளுந்து(கருப்பு உளுந்து)
கேது – கொள்ளு

இதையும் படிக்கலாமே: பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க, பெற்றவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

மாதத்தில் 9 நாள் இதைப் பின்பற்றினால் உங்களுடைய குடும்பம் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும் ராகுவுக்கும் கேதுவுக்கும் உரிய பொருளை நீங்கள் மாலை நேரத்தில் கூட ஏதாவது பலகாரங்களாக செய்து சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு நாள் தவறு ஒன்றும் கிடையாது. மேலே சொன்ன இந்த ஆன்மீக பரிகாரம் உங்களுக்கு புரிந்ததா. முயற்சி செய்து பாருங்கள். பிள்ளையார் உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் ஆரோக்கியத்தை கொடுப்பார். மருத்துவ செலவை குறைப்பார். நோய் நொடியை தீர்த்து வைப்பார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -