- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅற்புத யோகம் தரும் கார்த்திகை ஒன்று

அற்புத யோகம் தரும் கார்த்திகை ஒன்று

- Advertisement -

ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு விதமான சிறப்புகளை பெற்றதாக திகழ்கிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. கார்த்திகை மாதம் என்பது விரதத்திற்கு பெயர் போன மாதமாக திகழ்கிறது. பலரும் ஐயப்பனை நினைத்து சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். இன்னும் சிலரோ முருகப்பெருமானுக்கு மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். அந்த மாதத்தில் தான் கார்த்திகை தீபமும் வருகிறது.

அதேசமயம் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் சிவன் பார்வதியை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை என்பது உண்டாகும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகை மாதத்தின் முதல் நாள் அன்று நாம் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

அற்புத யோகம் தரும் கார்த்திகை ஒன்று

ஐப்பசி மாதம் என்பது துலாஸ்நானம் செய்ய வேண்டிய மாதம் என்று கூறி கேள்விப்பட்டிருப்போம். ஒரு வேளை ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் செய்ய இயலாதவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி அருகில் இருக்கக்கூடிய ஆறு, கடல், குளம் போன்ற ஏதாவது ஒரு நீர் நிலையில் குளிக்க வேண்டும். இப்படி குளிப்பதன் மூலமும் துலாஸ்நானம் செய்வதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அருகில் ஆறு, குளம், கடல் இல்லை என்பவர்கள் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து குளிக்கின்ற தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை கலந்து குளிப்பதன் மூலம் இந்த பலனை பெற முடியும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு முதலில் சென்று விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். அடுத்ததாக முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். கடைசியாக பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். இவர்கள் மூவரையும் ஒரே ஆலயத்தில் வழிபாடு செய்யாமல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இருக்கக்கூடிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வதே நிறைந்த பலனை தரும்.

- Advertisement -

இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு “ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா” என்னும் மந்திரத்தை 333 முறை கூறவேண்டும். யார் ஒருவர் இந்த முறையில் குளித்துவிட்டு வழிபாடுகளை செய்து மந்திரத்தை கூறுகிறார்களோ அவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு யோகங்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து தெய்வங்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நிறைவான செல்வத்துடன் வெற்றிகளை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:வேலை கிடைக்க துவரை பரிகாரம்

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி இந்த முறையில் யார் ஒருவர் முழு மனதுடன் முழு நம்பிக்கையுடன் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நன்மைகள் தேடி வரும் யோகங்கள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்