நானும் சிவன் தான் என்று ஆணவம் பிடித்த தேங்காய் கதை தெரியுமா?

sivan-coconut
- Advertisement -

பக்தி திருவிளையாடல் கதைகள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த பயனுள்ள கருத்துகள் ஏராளமாக இருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனை நெறிபடுத்தும் வகையில் அமைந்திருக்கும். இவ்வகையில் ஆணவம் கொண்ட தேங்காய் எம்பெருமான் ஈசனிடமே கர்வமாக பேசி வாங்கி கட்டிய கதை தான் இது. ‘யாகவாராயினும் நாகாக்க’, என்ற வள்ளுவன் கூற்றை கடைபிடிக்க தவறியவர்கள் யாராக இருந்தாலும் இறுதியில் அவமானப்பட்டு தான் போக வேண்டி இருக்கும். அப்படி இவர்களுக்குள் என்ன தான் நடந்தது என்று பார்ப்போமா?

sivan

ஒரு முறை கைலாயத்தில் சபை கூடிய போது அங்கு இருந்த தேங்காய் நடப்பவற்றை எல்லாம் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டுமாய் இருந்தது. கூட்டம் கலைந்து அனைவரும் சென்றதும் ஆணவம் கொண்ட அந்த தேங்காய் சிவனை நோக்கி திரும்பி பார்த்து நானும் சிவன் தானே? என்றது. உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? நீயும் நானும் ஒன்று தான் என்று கர்வமாக கூறியது. இதை கேட்ட சிவ பெருமானுக்கு கோவம் வரவில்லை. தேங்காய் என்ன தான் சொல்ல வருகிறது பார்ப்போமே என்று உரையாடலை தொடர்ந்தார். முக்கண் உள்ள தேங்காய்க்கும், முக்கண் மூர்த்தியாகிய சிவனுக்கும் ஆணவ திருவிளையாடல் அரங்கேறியது.

- Advertisement -

தேங்காய் கூறியது:
நானும் உன்னை போல தேவர்களை காத்தருள்வதால் தானே எனக்கு தேங்காய் என்ற பெயரே வந்தது?

ஈசன் கூறியது:
ஓ! அப்படியா? என்று சிவன் தேங்காயிடம் ஏதும் தெரியாதது போல் கேட்டார். பின்னர் நான் ஆமையின் தகர்க்க முடியாத வலுவான ஓட்டை தரித்திருக்கிறேன் என்றார்.

- Advertisement -

தேங்காய் கூறியது:
நானும் தானே வலுவான ஓட்டை அணிந்திருக்கிறேன்? தேங்காய் ஓடு போல் கெட்டியாக இருக்கிறது என்பார்களே? நீர் அறிந்ததில்லையோ? என்று ஏளனமாக கேட்டது.

coconut

ஈசன் கூறியது:
சிவனும் விடுவாதாயில்லை. நான் என் உடல் முழுவதும் திருநீர் அணிந்து செக்க செவெளென காட்சி தருகிறேன் என்று வம்புக்கு இழுத்தார்.

- Advertisement -

தேங்காய் கூறியது:
நான் தான் எதுவும் பூசாமலேயே சிவந்து காணப்படுகின்றேனே? உன்னை போல திருநீர் தரித்து தான் நான் வெள்ளையாக வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாகவே நான் வெள்ளையாக தான் இருக்கின்றேன் என்று இருமாப்பொடு பதில் கொடுத்தது.

coconut-broken

ஈசன் கூறியது:
ஓகோ! அப்படியா? நான் புலி, யானை போன்ற கம்பீர விலங்குகளின் தோல்களால் ஆன ஆடையை உரித்திருக்கிறேன் என்றார் விடாமல் சிவனும்.

தேங்காய் கூறியது:
நான் மட்டும் என்ன? என் மீது இருந்த மட்டியை உரித்து தானே இங்கே அமர்ந்திருக்கிறேன் என்று கொலுப்பெடுத்து பேசிக்கொண்டே சென்றது தேங்காய்.

sivan

ஈசன் கூறியது:
நான் என்னுடன் கங்கையை கொண்டு இருக்கிறேனே? என்றார்.

தேங்காய் கூறியது:
அதை கேட்டதும் தேங்காய்க்கு சிரிப்பு வந்து விட்டது. நமட்டு சிரிப்புடன் என்னுள் இளநீர் உள்ளதே!! என்றது.

siva

ஈசன் கூறியது:
ஈசன் எனக்கு முக்கண் உள்ளது என்றார்.

தேங்காய் கூறியது:
எனக்கும் தான் முக்கண் உள்ளது என்றது தேங்காய்.

coconut 1

ஈசன் கூறியது:
நான் மறைகளின் முடியில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு தலையில் சடைக்குடுமி இருக்கிறது என்றார்.

தேங்காய் கூறியது:
பதிலுக்கு தேங்காயும் நானும் தான் தென்னையின் முடியில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு மட்டும் என்ன குடுமி இல்லையா? என்றது.

ஈசன் கூறியது:
இதற்கு மேல் தேங்காய்க்கு புத்தி வராது என்பதை அறிந்த ஈசன் ஆணவம் பிடித்த தேங்காயே உனக்கு எவ்வளவு திமிறு? கொஞ்சம் கூட பணிவே இல்லை. இனி உன்னை ஆலயங்களில் சிதறு தேங்காயாக உடைப்பார்கள் என்று சாபம் கொடுத்து விட்டார்.

இந்த நிகழ்விற்கு பிறகு தான் ஆலயங்களில் தேங்காய் சிதறும் படி உடைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். இன்றும் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது இளநீரை மட்டும் பயன்படுத்துவதில்லை. தேங்காய் மட்டும் உடைப்பார்கள். இது போன்ற திருவிளையாடல்கள் மூலம் மனிதர்களின் அகம்பாவம் ஒழிந்து நல்வாழ்வு கிடைக்க வழி கோளாக இருக்கும். ஆணவம், அகம்பாவம் மனிதனை நிர்மூலமாக்கி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
சனியின் பிடியில் இருப்பவரா நீங்கள்? அப்போ இத செய்ய மறக்காதீங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sivan thiruvilayadal stories in Tamil. Kadavul thiruvilaiyadal Tamil. Sivan thiruvilayadal kathaigal. Sivan thiruvilayadal Tamil. Coconut story in Tamil.

- Advertisement -