இயற்கையை மறந்ததால் வந்த விளைவுகள் என்னென்ன தெரியுமா? உலக அழிவின் ஆரம்பம் இது தானா?

world-village

ஒரு சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த விஷயங்களை தொடர்ந்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது இருக்கும் நிலைமை தொடர்ந்தால் நடக்கப் போகும் விளைவுகளை யாராலும் தடுக்க முடியாது என்பதை எல்லோருமே அறிந்து தான் உள்ளனர். ஆனாலும் என்ன செய்ய முடியும்? என்கிற என்கிற அலட்சியப்போக்கு உலக அழிவின் ஆரம்பமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளும் இயற்கையானவை. அதில் கலக்கப்படாத செயற்கையால் பல உயிர்கள் மண்ணில் வாழ்ந்து வந்தது.

village

ஆனால் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயற்கை விஷயங்களால் பாதிக்கப்படப் போவது நாம் மட்டுமல்ல.. இன்ன பிற உயிரினங்களும் தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. அப்படி நாம் செய்யும் தவறுகளால் விளைந்தவை என்ன? என்பதை கொஞ்சமாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நாம் குளிக்க பயன்படுத்திக் கொண்டிருக்கும் சோப்பு என்கிற ரசாயன பொருள் நமக்கு எந்த பக்க விளைவுகளை ஏற்படுத்த விட்டாலும், நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையையும், உயிரினங்களையும் பாதிக்க வல்லது என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறோம்? கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அந்த காலத்தில் ஒரு மனிதன் குளித்தால் குளித்த தண்ணீர் மொத்தமும் சுற்றியுள்ள செடி, மரம், கொடி என அத்தனை வகை தாவரங்களுக்கும் பயன்படுபவையாக இருந்தன. ஆனால் இன்று நீங்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ போன்றவை ரசாயன மூலக்கூறுகளை உள்ளடக்கி உள்ளதால், நீங்கள் குளிக்கும் தண்ணீர் மொத்தமும் சாக்கடை ஆகிவிடுகிறது. அந்தத் தண்ணீர் எந்த மரத்திற்கும் போவதில்லை, எந்த உபயோகத்திற்கும் பயன்படுவதில்லை.

bathing

அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் முதல் தாய்மார்கள் வரை தலைக்கு தேய்க்க ஷாம்பூ பயன்படுத்தவில்லை. மாறாக சீயக்காய் என்கிற அரப்புத்தூள் பயன்படுத்தி தலையை அலசினார்கள். இந்த சீயக்காய் எனப்படும் அரப்புத்தூள் வெறும் கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, கொசுவை அழிக்கவும், மீன் மற்றும் தாவர வகைகளுக்கு உணவாகப் பயன்படவும் தான் உபயோகித்து வந்தார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

- Advertisement -

அரப்பு தூள் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த தூளை பயன்படுத்தி தலைக்கு அலசும் பொழுது தலைமுடிக்கும் பாதுகாப்பாக இருந்தது. கூந்தல் வளர்ச்சி அபரிமிதமாக இருந்து வந்தது. அது மட்டுமல்லாமல் அந்த அழுக்கை உண்பதற்கு மீன்களும் ஓடோடி வருமாம். இப்போது நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை சற்று யோசித்து பாருங்கள்! கூந்தல் வளர்ச்சிக்கு எதிராக தானே செயல்பட்டு வருகிறது? அதுமட்டுமல்லாமல் எந்த உயிர்களையும் காப்பாற்றா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அதன் ரசாயன தாக்கத்தினால் பல்லுயிர்கள் அழிந்து வருகின்றன.

seyakkai

துணி துவைப்பதற்கு சோப்பை பயன்படுத்தாமல் நம் முன்னோர்கள் வேப்பங்கொட்டையை உபயோகித்து செய்யப்பட்ட இயற்கை சோப்பை பயன்படுத்தி வந்தார்கள். இதனை நதிக்கரையில் மீன்கள் உண்பதற்கு ஓடி வருமாம். இதை ஷவரில் குளிக்கும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் செயற்கையை விட, இயற்கை பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணமாக அமைந்திருந்தது. அந்த உயிர்கள் சுழற்சியின் படி கொசுக்களை ஒழித்து இன்று வரும் நவீன நோய்களை அண்ட விடாமல் பாதுகாத்து வந்தது.

neem-powder

நாம் சாப்பிட்ட உணவு பாத்திரங்களை கழுவ இலுப்பை தூள் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி வந்தார்கள். இதனைக் கொண்டு பாத்திரம் கழுவினால் அதன் மூலம் உருவான குட்டையில் தவளைகள் வாழுமாம். இப்போது நவீன யுகத்தில் நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் தண்ணீர் நேரடியாக எங்கு செல்கிறது தெரியுமா? வீணாகி சாக்கடையாகிறது. ஒரு சிலரது வீட்டில் தாவரங்களுக்கு பாத்திரம் கழுவும் தண்ணீர் செல்லும் படியாக இணைப்பு கொடுத்து வைத்திருப்பார்கள். இது நல்லதொரு விஷயம் தான். ஆனால் அந்த தண்ணீரில் எந்த உயிரினமாவது வாழ முடியுமா? கொசுக்கள் வேண்டுமானால் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இதனால் சுற்றி இருப்பவர்களுக்கு டெங்கு போன்ற காய்ச்சல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

thattan-poochi

ஆனால் அந்த காலத்தில் நீரில் வாழ்ந்த தவளைகள் கொசுக்களை உண்டு மனிதனுக்கு வர இருந்த பேராபத்தை அன்றே தடுத்து நிறுத்தியது. இதற்கு எல்லாம் காரணம் அந்த கால மனிதன் செயற்கை தவிர்த்து இயற்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்தது மட்டுமே ஆகும். நவீன யுகத்தில் அழிந்து கொண்டிருக்கும் தட்டான்பூச்சி இனம் ஒரு நாளைக்கு 1000 கொசு முட்டைகளை தின்று தீர்த்துவிடும். இவைகளின் அழிவிற்கும் செயற்கை ரசாயனங்கள் தான் காரணமாக அமைந்துள்ளது. பயன்படுத்தும் பொருட்கள் முதல் சாப்பிடும் உணவு வரை அனைத்திலும் ரசாயனம் ஊடுருவியுள்ளது. இன்னுமும் விழித்துக் கொள்ளாவிடில் செயற்கை நம்மை அழித்துவிடும் என்பதைக் கூறி இப்பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.