அருப்புக்கோட்டையில் முருகன் கண் திறந்த காட்சி தற்போது இணையத்தில் அதிவேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது. இதோ அந்த பதிவு உங்களுக்காக!

aruppukottai-murugan-eye

சார்வரி வருடம் கார்த்திகை மாதம் 18ஆம் தேதியான நேற்று அருப்புக்கோட்டை என்கிற ஊரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்றில் பக்தர்களுக்கு முருகன் கண் திறந்தது போன்ற காட்சி தென் பட்டிருக்கிறது. உடனே அக்காட்சியை பதிவு செய்த பக்தர்கள் அதனை இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இப்போது வேகமாக பரவி வரும் அந்த வீடியோ காட்சியை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

aruppukottai-murugan-eye1

சாதாரணமாக இது போன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. இது உண்மையா? பொய்யா? என்கிற ஆராய்ச்சியும் ஒரு பக்கம் நிலவிக் கொண்டிருக்கிறது. 2020இல் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் 2021இல் மீண்டும் தொடருமா? என்கிற அச்சம் மக்களிடையே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

எந்த காலத்திலும் இல்லாத ஒரு வருடமாக 2020 மக்களுக்கு நீங்காத நினைவுகளை கொடுத்து விட்டது. இந்த வரிசையில் அடுத்து வரும் 2021 என்னவெல்லாம் செய்யப் போகிறது? என்கிற பதற்றம் நிலவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அருப்புக்கோட்டையில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

murugan1

வேகமாக வைரலாகி கொண்டிருக்கும் இந்த வீடியோ காட்சி மிகவும் தெளிவாக இருப்பதை நம்மால் காண முடிகிறது. அங்கு பேசிக் கொண்டிருக்கும் பக்தர்களின் குரல்களும் அந்த பதிவில் தெளிவாக கேட்க முடிகிறது. இதில் இருக்கும் உண்மை தன்மையை ஒரு புறம் விமர்சித்தாலும், கடவுள் மேல் பக்தி கொண்ட மக்கள் இன்னொரு புறம் இதனை தெய்வீக லீலையாக கருதி வியப்பாகவே பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

இது போன்ற சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் வரும் பேரழிவுகளில் இருந்து பாதுகாக்கக் கோரி இறுதியில் இறைவனிடமே நாம் சரண் அடைகிறோம். இயற்கைக்கு முன்னால் எதுவும் நிற்காது என்பதை பலமுறை மக்களுக்கு இயற்கை எச்சரித்து வருகிறது. இதற்கிடையில் கடவுள் கண் திறப்பது, கடவுள் சிலைகளில் இருந்து ரத்தம் வருவது, கண்ணீர் வருவது போன்ற வீடியோ பதிவுகள் இணையத்தில் சர்ச்சைக்கு அடிக்கடி உட்படுகிறது.

murugan-silai-abishegam

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவில் நீங்கள் காணப் போவது இதே போன்ற அருப்புக்கோட்டையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை தான். இதில் முருகன் சிலை முழுவதும் விபூதியால் பூசப்பட்டிருந்தது தெளிவாகிறது. ஒரு சிலர் இதனை சிலையில் இருக்கும் எண்ணெய் மற்றும் விபூதியின் பிரதிபலிப்பே முருகன் கண் திறப்பது போன்ற காட்சியை உண்டாக்கியுள்ளது என்று கூறி வருகிறார்கள். எது எப்படியோ! வருகின்ற 2021 மக்களுக்கு நல்ல வருடமாக இருக்க அந்த முருகனையே பிரார்த்திப்போம்.

இதோ உங்களுக்கான அந்த வீடியோ பதிவு:

இதையும் படிக்கலாமே
இந்த மந்திரத்தை சொல்லி இந்த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்குமா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.