இக்கட்டான கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் நாளை இந்த மிளகு தீபத்தை ஏற்ற மறக்காதீங்க.

sivan2
- Advertisement -

பொதுவாகவே கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால், தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது சிறப்பு என்பது பெரும்பாலும் நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். நாளை இந்த அஷ்டமி திதியோடு சேர்ந்து திருவாதிரை நட்சத்திரமும் வருகிறது. திருவாதிரை நட்சத்திரம் என்பது சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம். சிவபெருமானின் அவதாரமான, பைரவருக்கு உரிய அஷ்டமி திதியும் நாளைய தினம் சேர்ந்து வந்திருப்பதால், இந்த நாளை யாரும் தவற விடாதீங்க.

ரொம்பவும் பண பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருபவர்கள், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வருபவர்கள், கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருபவர்கள், நல்ல வேலை கிடைக்கவில்லை, தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் என்று இப்படி பணம் சம்பந்தப்பட்ட எந்த கோரிக்கையாக இருந்தாலும், அதை சரி செய்ய வேண்டுமென்றால் நாளைய தினம் பைரவரை எப்படி வழிபாடு செய்யலாம். எந்த நேரத்தில் பைரவர் கோவிலுக்கு சென்று, எப்படி விளக்கு போட்டுவது என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கடன் தீர்க்கும் அஷ்டமி திதி வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் பழமையான சிவன் கோவிலில் தான் மேற்கொள்ள வேண்டும். அந்த பழமையான சிவன் கோவில்களில் தான் பைரவரின் சன்னிதானம் தனியாக இருக்கும். பைரவருக்கு நாளைய தினம் சிறப்பு ஆராதனை அபிஷேகங்கள் நடக்கும். அந்த பூஜையில் கலந்துகொண்டு அவருக்கு அபிஷேகம் செய்யும்போது மனதார உங்களுடைய பிரச்சனைகளை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

நாளைய தினம் (6.10.2023) மாலை 6.30 முப்பது மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை இந்த விளக்கை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் கோவிலில் ஏற்றலாம். புதுசாக மிளகு வாங்கிக் கொள்ளவும். பயன்படுத்தாத சிவப்பு நிற துணியை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். அந்த சிவப்பு நிற துணியில் 27 மிளகுகளை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள். 27 மிளகும் உடையாமல், சப்பை மிளகுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

ஒரு மண் அகல் விளக்கில் தயார் செய்த இந்த முடிச்சை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த துணியை திரியாக திரித்து விளக்கு ஏற்றி விட வேண்டும். இந்த விளக்கு ஏற்றக்கூடிய வழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இதே போல விளக்கு சிவன் கோவில் வாசலிலேயே விற்கும். அதை வாங்கி ஏற்றினாலும் சரிதான்.

கூடுமானவரை உங்கள் கையால் புதுசாக மண் அகல் விளக்கு வாங்கி, புதுசாக மிளகு வாங்கி சிவப்பு நிற துணியில் நீங்களே அதை முடிச்சாக கட்டி விளக்கு ஏற்றுவது என்பது ரொம்ப நல்லது. இந்த முடிச்சை நீங்கள் வீட்டிலிருந்தும் தயார் செய்து எடுத்துச் செல்லலாம் தவறு கிடையாது.

- Advertisement -

கோவிலுக்கு சென்றும் இந்த முடிச்சை தயார் செய்து கொள்ளலாம் தவறு கிடையாது. ஆனால் இந்த விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் ஏற்றக்கூடாது. இந்த விளக்கை கோவிலில் பைரவரின் சன்னிதானத்திற்கு முன்பு ஏற்ற வேண்டும். சில கோவில்களில் பைரவரின் சன்னிதானத்திற்கு முன்பாகவே விளக்கு ஏற்ற அனுமதி இருக்காது.

ஒரு பக்கமாக விளக்கு ஏற்றுவதற்கு தனியாக இடம் இருக்கும். அங்கேயும் இந்த விளக்கை ஏற்றலாம். ஏற்றிய விளக்கை பைரவருக்கு முன்பாக கொண்டு போய் மூன்று முறை ஆரத்தி காண்பித்து விட்டு கொண்டு வந்து மீண்டும் அந்த விளக்கு ஏற்றக்கூடிய இடத்தில் வைத்துவிடுங்கள் தவறு ஒன்றும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: விநாயகரை எப்படி கும்பிட்டால் நினைத்தது உடனே நடக்கும்? இந்த சூட்சம ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மனம் உருகி பைரவரிடம் உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சொல்லி வேண்டுதல் வைத்தால், தீராத பண பிரச்சினைகளுக்கு கூடிய சீக்கிரம் விடிவு காலம் பிறக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் நாளைய தினம் திருவாதிரை நட்சத்திரத்தோடு அஷ்டமி திதி வந்திருப்பதால், இந்த நாளை யாரும் தவறவிடாமல் வழிபாடை மேற்கொண்டு, பலன் பெற வேண்டும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -