மொழியை சொல்லிக் கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கடனும் தீருமா? ஜோதிட நூல் கூறும் ஆச்சரியமூட்டும் அதிசய தகவல்கள்!

teach-astro

கடன் தீர்வதற்கும் மொழியை சொல்லிக் கொடுப்பதற்கும் என்னங்க சம்பந்தம்? என்று கேட்பது புரிகிறது. இந்த ஒரு மொழியை கற்றுக் கொடுப்பதன் மூலம் கடன்கள் இருப்பவர்களுக்கு, கடன் இல்லாத வாழ்க்கை அமையும் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிட்டு கூறியுள்ளது. ஒருவர் தீராத கடனால் பாதிக்கப்படுகிறார் என்றால் அதற்கு அவர்களுடைய சுய ஜாதகத்தில் கிரகங்கள் நீசம் பெற்றிருப்பதும் காரணமாக அமைந்து விடுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தையும், லக்னாதிபதியும் அசுப கிரகங்கள் சூழ்ந்தால் அவர்கள் நிறைய கடன் பட்டிருப்பார்கள். இவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்? அந்த மொழி தான் என்ன? இதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

chandrashtama

பழைய ஜோதிட நூல்களில் தமிழைப் பயிற்று விற்பவர்களுக்கு தோஷங்கள் நீங்கும் என்று குறிப்புகள் உள்ளன. தமிழுக்கு உரிய கிரகம் சந்திரன். சந்திரன் உடலுக்கும், மனதுக்கும் உரியவரும் ஆவார். இதனால் தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பவர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் பலம் உண்டாகிறது. உடலும், மனமும் பலமாக இருந்தால் எதையும் இந்த உலகத்தில் சாதித்து விட முடியும்.

அதன் அடிப்படையில் தான் தமிழ் மொழியை கற்பித்தால், அவர்களுக்கு எப்பேர்பட்ட கடன்கள் இருந்தாலும் அவைகள் சுலபமாக அடைந்து விடும். ஏதாவது ஒரு வகையில் நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் மனோபலம் கூடும் என்று ஜோதிடம் கூறுகிறது.

tamil-language

தமிழ் மொழியை மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு இலவசமாக பாடங்களை கற்று கொடுப்பவர்களுக்கு கடன் தொல்லைகள் இருக்காது என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் லக்னாதிபதி பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது அந்த லக்னத்திற்கு உரிய லக்னாதிபதியின் கோவில்களுக்கு சென்று வழிபடுவதால், கடன் தொல்லைகள் நீங்கும். கடன் தொல்லைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே லக்னாதிபதி தான்.

- Advertisement -

ஒருவருடைய லக்னத்திற்கு அதிபதியாக இருப்பவரும், ஆறாம் இடத்தின் அதிபதியாக இருப்பவரும் சரியான நிலையில் இல்லாமல் இருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் தொல்லையை அனுபவிப்பார்கள் என்பது ஜோதிட விதி. ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என்றும் மென்மேலும் கடன் அவர்களை தொடர்ந்து கொண்டே இருக்கும். என்ன தான் அவர்கள் முன்னேற நினைத்தாலும் கடன்கள் தொடர்ந்து துரத்திக் கொண்டே தான் இருக்கும். இத்தகையவர்கள் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ விரும்பினால் சில பரிகாரங்களை செய்யலாம்.

astrology

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு வகையான தானியம் உரியதாக இருக்கும். உங்கள் பிரச்சினைக்குரிய கிரகத்தின் தானியங்களை அப்படியே தானம் செய்யலாம். அல்லது அதில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்களை கோவிலுக்கு சென்று பக்தர்களுக்கு தானம் செய்யலாம் இவ்வாறு செய்யும் பொழுது தோஷங்கள் நீங்கி கடன்கள் அடைவதற்குரிய வழிகளும் கிடைக்கப்பெறும். கடன் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்ததை இந்த சூழ்நிலையிலும் தானம் செய்து பாருங்கள். நிச்சயம் மாற்றம் தெரியும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இந்த இடத்தை தான் இந்த ராசிக்காரர்கள் அதிகம் செலவிட விரும்புவார்களாம்! இதுல உங்க ராசி எங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.