உங்க வீட்டு ரோஜா செடிகளில் பூச்சி தொல்லையா? இலைகளை சுருங்க செய்து, மொட்டுக்களை வளர விடாமல் செய்யக்கூடிய இந்த பூச்சியை எளிதாக வீட்டிலேயே எப்படி விரட்டுவது?

rose-aswini-aphids
- Advertisement -

ரோஜா செடி, மற்ற பூச்செடிகள், காய்கறி செடிகளில் கூட இந்த பூச்சிகள் தொந்தரவு அதிகமாக இருக்கும். பூச்சி தொந்தரவுக்கு செயற்கை மருந்துகளை தெளிக்காமல், நம் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி இவற்றை விரட்டி அடிப்பது? எறும்பு தொல்லை, கொசு தொல்லை, பூச்சிகள் தொல்லைகளில் இருந்து ரோஜா செடி மற்றும் மற்ற செடிகளை எப்படி பாதுகாப்பது? என்கிற பயனுள்ள தோட்ட குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா செடி, பூச்செடிகளில் இருக்கக்கூடிய இந்த பூச்சிகள் கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களில் இருக்கும். இதனை அஸ்வினி பூச்சி என்று கூறுவார்கள். இந்த பூச்சி பல வகையான செடிகளில் பெரிய பிரச்சினையாக வந்து சேர்கிறது. ரோஜா செடிகளின் மொட்டுக்களில் அதிகமாக அமர்ந்திருந்தால் மொட்டுக்கள் மலராமல் செத்து மடிந்து விடும். அதுமட்டுமல்லாமல் செடிகளின் இலைகளில் தாக்குதல்களை ஏற்படுத்தி, இலை சுருக்குதல் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் புதிய இலைகள் துளிர்க்காமல் செடி அப்படியே வீணாக போய்விடும். இந்த பூச்சிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி விரட்டி அடிப்பது?

- Advertisement -

முதலில் பத்திலிருந்து பதினைந்து கிராம்புகளை எடுத்து மிக்ஸி அல்லது அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த பவுடர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இருந்தால் போதும். இந்த பவுடரை ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். கொதித்து சூடு இல்லாமல் ஆறியதும் சுத்தமாக வடித்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கிராம்பு தண்ணீரை அஸ்வினி பூச்சி அல்லது மற்ற பூச்சிகள், கொசுக்கள், எறும்புகள் இருக்கும் இடங்களில் மட்டும் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் ஸ்பிரே செய்ய வேண்டாம். இப்படி ஸ்பிரே செய்தால் கொஞ்ச நேரத்தில் அனைத்து பூச்சிகளும் செத்து மடிந்து விடும். எறும்புகளும் ஓடிவிடும், கொசு தொல்லை இருக்காது. கிராம்பு தண்ணீர் மட்டும் அல்லாமல் வேறு ஒரு வழியும் உண்டு. செடிகள் வளர்ப்பவர்கள் பெரும்பாலும் வேப்பெண்ணையை கையில் வைத்திருப்பார்கள்.

- Advertisement -

வேப்பெண்ணெய் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து இதனுடன் ஏதாவது ஒரு ஷாம்பூ ஒரு ஸ்பூன் சேர்த்து ஒரு பவுலில் சிறிதளவு அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். ஷாம்பூ சேர்க்கும் போது தான் வேப்ப எண்ணெய் நன்கு கலக்கும். இல்லை என்றால் மேலே மிதக்க ஆரம்பிக்கும். இப்போது இந்த லிக்விடை ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீருடன் சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே ஸ்ப்ரே செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
பன்னீர் ரோஜா செடி எல்லா காலத்திலும் கொத்துக் கொத்தாக பூத்து குலுங்க, இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க போதும். பூக்காத பன்னீர் ரோஜா செடியில் கூட கை வலிக்க பூ பறிப்பீங்க.

காலையில் எழுந்ததும் எல்லா வகையான செடிகளுக்கும் இதனை ஸ்ப்ரே செய்துவிடலாம். குறிப்பாக மொட்டுகளில் கொத்தாக அமர்ந்திருக்கும் இந்த அஸ்வினி பூச்சிகளை எளிதாக கொல்ல, இதுவே சிறந்த வழியாக இருக்கிறது. இதனால் பூச்சிகள் மடிந்து செத்துவிடும். மீண்டும் வரவும் செய்யாது. இலை சுருங்கிய நிலையில் இருந்தாலும், இல்லை பாதிக்கப்பட்டிருந்தால் அந்த இலைகளை வெட்டி வீசி விடுங்கள். பிறகு மீண்டும் புதிய இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். மொட்டுக்களும் நன்கு மலர்ந்து விரிய ஆரம்பிக்கும்.

- Advertisement -