அத்தி வரதர் தரிசனம் குறித்த காஞ்சிபுரம் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு இதோ

athi-varadhar

கோயில்களின் நகரமான காஞ்சிபுரம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருவிழா கோலம் பூண்ட ஒரு நகரமாக திகழ்கிறது. அதற்குக் காரணம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் விழாவாகும். அற்புதமான இந்த அத்தி வரதர் தரிசனம் வைபவத்தில் கலந்து கொண்டு அத்தி வரதரை தரிசிக்க நாடெங்கிலுமிருந்து தினமும் லட்சக் கணக்கில் மக்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் இருக்கின்றனர். நேற்றைய தினம் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம் குறித்து, மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அத்திவரதர் வைபவம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

athi varadhar

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தின் நேற்றைய தினத்தில் அத்தி வரதரை தரிசிப்பதற்கு வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆடி மாத வளர்பிறை அஷ்டமி தினமான நேற்று அத்திவரதர் மஞ்சள் பட்டாடை அணிந்து, தனது இரண்டு கைகள் மட்டும் தோள்களிலும் பச்சைக் கிளிகளை ஏந்தியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்தி வரதரின் இந்த அபூர்வ தரிசனத்தை பல லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

கடந்த ஒன்றேகால் மாதமாக நடைபெற்று வரும் காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் வைபோகம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தினந்தோறும் காஞ்சிபுரம் நகரத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். நேற்று மட்டுமே சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் செய்ய வந்ததாலும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் காஞ்சிபுரம் நகரமே சற்று திணறியது. மேலும் நேற்றைய தினம் வி.ஐ.பி தரிசன வழியிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் குறைந்தபட்சம் 3 முதல் 5 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்த பின்பே அத்தி வரதரை தரிசிக்கும் நிலை உண்டானது.

கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி வரை அத்தி வரதர் தரிசனம் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் இன்றைய தினம் வரை காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் செய்த வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை சேர்த்து மொத்தம் 70.2 லட்சம் பேர் காஞ்சிபுரம் வந்து அத்தி வரதரை தரிசித்திருப்பதாக கூறினார்.

- Advertisement -

ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்பட்டு, மீண்டும் பெருமாள் கோயிலின் குளத்தில் அத்திவரதர் சிலையை வைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் பக்தர்கள் யாரும் அத்தி வரதர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதரின் தரிசனத்தின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar collector in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar dharsan in Tamil or Athi varadhar koil thiruvizha in Tamil.