புதிய கோலத்தில் இன்று தரிசனம் தரும் அத்திவரதர். பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

athi-varadhar
- Advertisement -

தற்போது இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்கள் வந்து தரிசிக்கின்ற, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவாக அத்தி வரதர் வைபவம் இருக்கிறது. இதற்கு முன்பான அத்திவரதர் வைபவம் என்பது தமிழ்நாட்டு பக்தர்கள் மட்டுமே தெரிந்த ஒரு கோவில் விழாவாக இருந்தது. ஆனால் தற்போது தகவல் தொடர்பு வளர்ச்சியால் அற்புதமான இந்த அத்திவரதர் வைபவத்தை இந்திய நாடெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்ததோடு, அவர்கள் அனைவரும் புனித பூமியான காஞ்சிபுரத்தில் ஒரு மண்டலமான 48 நாட்கள் மட்டுமே காட்சி தரும் இந்த அத்தி வரதராஜ பெருமாளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் தினந்தோறும் காஞ்சிபுரம் நகரம் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் எந்நேரமும் பக்தர்களின் கூட்டத்தால் வரதராஜ பெருமாள் கோவில் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது.

varadharaja perumal

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 31 வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசனம் தந்தார். கடந்த 31 நாட்களில் சுமார் 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை சயன கோலத்தில் தரிசனம் செய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நின்ற நிலையில் அத்தி வரதர் தரிசனம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஜூலை 31 மாலை 5 மணியுடன் தரிசனம் நிறுத்தப்பட்டு அத்திவரதரை நின்ற கோலத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று அதிகாலை 5.25 மணிக்கு நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

athi vardhar

நின்ற நிலை அத்தி வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து நின்ற நிலையில் அத்தி வரதரை கண்குளிர தரிசனம் செய்தனர். மேலும் சயன கோலத்தில் அத்திவரதரை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் நின்ற கோலத்தில் தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஒரு நாளைக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

athi varadhar

இதையடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவம், கழிவறை வசதி உள்ளிட்டவை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் 6 இடங்களில் 10 ஆயிரதிற்கும் மேற்பட்ட பக்தர்கள் நிற்கும் வகையில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

people

கோவில் வளாகத்துக்குள் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் பட்சத்தில். திருப்பதி திருமலை கோயில் நடைமுறையை பின்பற்றி, பக்தர்கள் இந்த கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு பகுதி பகுதியாக பிரித்து அத்தி வரதர் தரிசனத்திற்கு அனுப்பப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது . மேலும் பக்தர்கள் தங்கியிருக்கும் கூடாரங்களை சுற்றி கழிவறைகள், குடிநீர் வசதி, 24 மணி நேர அன்னதான வசதி செய்யப்பட்டுள்ளது எனவும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பிற்கும் காவலர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
இந்த தினங்களில் அத்தி வரதர் தரிசனம் வேண்டாம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar standing position in Tamil. It is also called Athi varadhar in Tamil or Athi varadar dharisanam in Tamil or Athi varadhar vizha in Tamil.

- Advertisement -