அதிகாலையிலேயே திடீரென முழிப்பு வருகிறதா? இரவில் உறக்கம் திடீரென கலைவது அதிர்ஷ்டமாம் இது உங்களுக்கு தெரியுமா?

dream-sleep-cashrain
- Advertisement -

நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு எல்லோரும் இந்த காலத்தில் செல்வது கிடையாது. நூற்றுக்கு 90 சதவீதம் பேர் சரியான தூக்கமின்மையால் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்ல முடியாததன் பின்னணியில் இன்றைய நவீன நவநாகரீக உலகமும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வகையில் திடீரென அதிகாலையில் சிலருக்கு முழிப்பு வருவது எதனால்? இப்படி வருவது அதிர்ஷ்டமா? அது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சரியான ஆழ்ந்த உறக்கம் வர வேண்டும் என்றால் முதலில் நான்கு நிலைகளை கடந்து சென்று உறக்கம் கொள்ள வேண்டும். முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உறக்கத்தை எல்லோரும் எளிதாக கடந்து விடுவோம் ஆனால் நான்காம் நிலையை கடப்பது என்பது அரிதானது. நான்காம் நிலையில் தான் ஆழ்ந்த உறக்கம் ஒரு மனிதனுக்கு நிகழ்கிறது. இந்த நிகழ்வு நிகழ வேண்டும் என்றால் சரியான நேரத்திற்கு தூங்கி எழ வேண்டும்.

- Advertisement -

இரவு 10 மணிக்குள் தூங்கி 5 மணிக்கு எழுவது என்பது தான் ஒரு மனிதனுக்கு சராசரியான ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கக்கூடிய நேரமாகும் ஆனால் இந்த காலத்தில் இந்த நேரத்தில் நீங்கள் தூங்குகிறீர்களா? என்று கேட்டால் 90 சதவீதம் பேர் இல்லை என்று தான் பதில் அளிப்பார்கள். 10 மணிக்கு தூங்கும் பொழுது இரண்டு மணி முதல் 5 மணிக்குள் திடீரென முழிப்பு சிலருக்கு வருவது உண்டு. இந்த விழிப்பு அதிர்ஷ்டத்தை கொடுக்குமாம். இதை பிரம்ம முகூர்த்தம் என்றும் கூறுவார்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு திடீரென விழிப்பு வந்தால் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு சில விஷயங்களை கொடுக்கப் போகிறது என்று அர்த்தம்.

இந்த நேரத்தில் நீங்கள் திடீரென விழித்தால் உங்கள் மனதில் இருக்கும் ஆசைகளையும், லட்சியங்களையும், கனவுகளையும் பற்றி நீங்கள் உங்களுக்கு உள்ளேயே பேசிக் கொள்ள வேண்டும். நான் இதை சாதிக்க போகிறேன், நான் நினைத்தது நிச்சயமாக நடக்கும் என்கிற நேர்மறையான வார்த்தைகளை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டால், அது 200 சதவீதம் உண்மையிலேயே பலிக்கும் என்கிறது ஆன்மீகம்.

- Advertisement -

அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு நேரமாக இந்நேரம் கருதப்படுகிறது. ஆனால் அதிகாலையில் இது போல திடீரென விழிக்க வேண்டும் என்றால் சரியான நேரத்திற்கு நீங்கள் உறங்கவும் செய்திருக்க வேண்டும். அப்படி அல்லாமல் 12 மணிக்கு தூங்குவது, ஒரு மணிக்கு தூங்குவது என்று இருந்தால் அதிகாலையில் விழிப்பு வந்தாலும் ஒரு பயனும் கிடையாது என்பதையும் மறந்து விடக்கூடாது.

அதிகாலை விழிப்பு எந்த அளவிற்கு நன்மைகளை செய்யும்? என்பதை இதன் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். உங்களுடைய கனவுகளை நிறைவேற்றி தரக்கூடிய அற்புதமான வரத்தை கொடுக்கக் கூடிய இந்த நேரத்தில் விழித்து படித்தால் அது அப்படியே மனதில் பதியும் என்றும் கூறப்படுவது உண்டு. அதனால் தான் அதிகாலையில் எழுந்து படிக்க சொல்லுகிறார்கள். ஆனால் ஐந்து மணிக்கு, ஆறு மணிக்கு எழுந்து படித்தாலும், அப்படியே மனதில் பதிய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் இரவு 10 மணிக்குள் தூங்கி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் இந்த நேரத்தில் எழுந்தாலும் உங்களுக்கு தூக்கம் தான் வரும் படித்தது மனதில் பதியாது.

- Advertisement -