இந்தச் செடிகள் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் ஒருபோதும் நிம்மதி கெட்டுப் போகவே போகாது. வீட்டிற்குள் எந்த ஒரு துர் சக்தியாலும் நுழையவும் முடியாது.

family
- Advertisement -

குடும்ப சந்தோஷம், மன நிம்மதி இவைகளை எங்கு சென்றும் பணம் கொடுத்து நம்மால் வாங்க முடியாது. நாம்தான் சந்தோஷத்தையும் நிம்மதியையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாம் எல்லா விஷயங்களிலும் சரியாகத்தான் இருக்கின்றோம். ஆனால், குடும்பத்தில் நிம்மதி இல்லை. இதற்கு நாம் யாரையும் காரணம் காட்டி விட முடியாது. சில பேரின் சூழ்நிலை, குடும்பத்தில் நிம்மதியை சீர்குலைத்து விடும். எந்த சூழ்நிலையிலும் குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்றால், வசதி உள்ளவர்கள், வாய்ப்பு உள்ளவர்கள் பின் சொல்ல கூடிய இந்த குறிப்பையும் பின்பற்றி பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் வர வளர்க்க வேண்டிய மரங்கள் செடிகள்:
அதாவது பசுமை. எவ்வளவுதான் மனக்கசப்பு மன கஷ்டம் இருந்தாலும் பச்சை பசேல் என ஒரு வயல்வெளியை பார்க்கும்போது, செடி கொடிகளை பார்க்கும்போது மனது சாந்தமடையும். நீங்கள் சொந்த வீட்டில் வசித்தாலும் சரி, வாடகை வீட்டில் வசித்து வந்தாலும் சரி, உங்களுக்கு மரம் செடி கொடிகளை வளர்ப்பதற்கு வாய்ப்பு இருந்தால் இந்த குறிப்புகளை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக சின்ன சின்ன தொட்டியிலாவது பசுமை நிறைந்த செடிகளை வைத்து வளர்க்க வேண்டும். வீட்டிற்கு முன்பாக சின்ன சின்ன தொட்டியில் பால் வராத, முள் இல்லாத உங்கள் மனதிற்கு பிடித்த எந்த செடியையும் வைத்து வளர்க்கலாம். சின்ன சின்னதாக பார்க்கும்போதே நம்முடைய மனதைக் கவரும் எத்தனையோ செடிகள் இருக்கின்றது. அதை வாங்கி வீட்டு வாசலுக்கு முன்பு வளர்ப்பது நல்லது.

குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் நிலை வாசலுக்கு முன்பு ஒரு துளசி செடியை வளர்த்து வந்தால் வீட்டிற்குள் எந்த ஒரு துர் சக்தியாலும் நுழைய முடியாது. துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். வெள்ளி செவ்வாய் விளக்கு ஏற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் அந்த செடியை வாட விடக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சொந்த வீடு உள்ளவர்கள் வீட்டை சுற்றி இடவசதி உள்ளவர்கள் மேற்குப் பக்கத்தில் உயரமான மரம் வைத்து வளர்ப்பது வீட்டிற்கு செல்வ செழிப்பை அதிகரிக்கும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டின் மேற்கு பகுதியில் தென்னை மரம், பனைமரம், தேக்கு மரம் இப்படிப்பட்ட மரங்களை வைத்து வளர்த்து வந்தால் செல்வ செழிப்பு மேலும் மேலும் உயரம்.

மேற்கு பக்கம் இருக்கும் மரம் எந்த அளவுக்கு உயர வளர்கின்றதோ, அந்த அளவுக்கு உங்களுடைய வாழ்வும் வளம் பெறும். மேற்கு பக்கம் வைப்பதற்கு இடவசதி இல்லை என்றால், தெற்கு பக்கம் உயரமான மரங்கள் வைத்து வளர்க்கலாம். தவிர இப்படிப்பட்ட உயரமான மரங்களை ஒருபோதும் வடக்கு பக்கத்திலும் கிழக்கு பக்கத்திலும் வைக்கவே கூடாது.

- Advertisement -

அதேபோல வீட்டிற்கு முன்னாடி முருங்கை மரம் வளர்ப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் வீட்டிற்கு முன்பு முருங்கை மரம் இருந்தால் உங்களுடைய வீடும் செல்வ செழிப்பு, மனநிம்மதி பெறாது. உங்கள் வீட்டிற்கு எதிராக இருக்கும் வீடும் செல்வ செழிப்பை பெறாது. ஏனென்றால் எதிர் வீட்டுக்கு முன்னாடி இந்த முருங்கை மரம் இருக்கிறது அல்லவா அதனால். ஆகவே கூடுமானவரை முருங்கை மரத்தை வீட்டிற்கு முன் வைத்து வளர்க்காதீர்கள்.

வீட்டிற்கு இரண்டு ஓரங்கள் இருக்கும் அல்லவா, அந்த பக்க வாட்டில் வைத்து வளர்க்கலாம். இல்லையென்றால் வீட்டின் பின்பக்கம் வைத்து வளர்ப்பது சிறப்பு. வாரத்தில் இரண்டு நாள் அந்த முருங்கை கீரையை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது இன்னும் சிறப்பு. வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே: நம் வாழ்வில் இந்த ஒரு நாளில் மறக்காமல் தானம் செய்தால் கோடி கோடியாய் செல்வம் சேருமாம்! வரம் பல தரும் தானம் என்ன தானம்?

அதேபோல வீட்டிற்கு பின்பக்கம் வேப்பமரம், எலுமிச்சம் மரம் இப்படிப்பட்ட மரங்களை வளர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. இதிலிருந்து வீசக்கூடிய காற்றை நாம் சுவாசிக்கும் போதே நமக்கு இருக்கும் உடல் உபாதைகளில் பாதி குறைந்து விடும். மன அழுத்தம் நீங்கும். இவ்வளவுதாங்க. இந்த சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய வீட்டில் மன நிம்மதி கெட்டுப் போகாமல் சந்தோஷம் வருவதற்கு இந்த குறிப்புகள் கூட பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -