அதிர்ஷ்டத்தை பெற வெள்ளிக்கிழமை வாங்க வேண்டிய பொருள்

mahalashmi10
- Advertisement -

வெள்ளிக்கிழமை வாங்குவதற்கு மங்களகரமான பொருட்களை பட்டியலில் எடுத்தால் ஏராளமான பொருட்கள் உண்டு. அந்த வரிசையில் இன்று நாம் ஒரு புது பொருளை சேர்க்கப் போகின்றோம். உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமை என்றால் கல் உப்பு, மஞ்சள் தூள், மல்லிகைப்பூ, துவரம் பருப்பு, இப்படிப்பட்ட பொருட்களை வாங்கினால் நல்லது என்று சொல்லுவார்கள்.

ஆனால் இந்த வெள்ளிக்கிழமையில் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய இந்த ஒரு பொருளை வாங்கினாலும் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். அது என்ன பொருள் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வெள்ளிக்கிழமை வாங்க வேண்டிய பொருள்

துடைப்பம் தாங்க அந்த பொருள். துடைப்பத்தை வெள்ளிக்கிழமை வாங்குவதா என்று சில பேருக்கு சந்தேகம் வரலாம். துடைப்பத்தை வெள்ளிக்கிழமை வாங்கினால் அது மகாலட்சுமி அம்சத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும். துடைப்பமும் ஒரு மகாலட்சுமி ஸ்வரூபம் தான். துடைப்பம் இல்லை என்றால் நம் வீட்டை கூட்டி சுத்தம் செய்ய முடியுமா. ஆக துடைப்பத்தை யாரும் அலட்சியமாக நினைக்கக் கூடாது. அடுத்தவர்களை பார்த்து துடைப்பம் பிஞ்சு விடும்.

விளக்குமாறால் அடிப்பேன். அப்படி என்ற வார்த்தைகளை எல்லாம் வீட்டில் இருக்கும் பெண்கள் பயன்படுத்தக்கூடாது. அது வீட்டில் பணக்கஷ்டத்தை கொடுத்து விடும். உங்களுடைய வீட்டில் கூடுமானவரை துடைப்பத்தை படுக்க போட்டு வைக்காதீங்க. அப்படி துடைப்பத்தை படுக்க வைத்திருக்க கூடிய வீட்டில் எல்லா விஷயங்களும் படித்து விடும்.

- Advertisement -

பண வரவும் படுத்து விடும் என்ற ஒரு நம்பிக்கையும் நம்மிடத்தில் இருந்து வருகிறது. இந்த துடைப்பத்தை யாரும் செருப்போடு சேர்த்து வைக்கக் கூடாது. சில பேர் வீடுகளில் செருப்பு வைக்கும் இடத்தில் தான் துடைப்பம் இருக்கும். அப்படி செய்யாதீங்க. துடைப்பத்தை தனியாக ஒரு இடத்தில் வச்சு பாருங்க. நிச்சயமாக குடும்பத்தில் நல்லது நடக்கும்.

சிக்கனப்படுத்துகிறேன் என்று சொல்லி ரொம்பவும் தேய்ந்து போன துடைப்பத்தை வைத்து நிலை வாசல் கூட்டுவது, பாத்ரூம் கழுவுவது போன்ற தவறை செய்யக்கூடாது. சில பேர் வீட்டிற்குள் பயன்படுத்தும் துடைப்பம் ரொம்பவும் தேய்ந்து போய் விட்டது என்றால் நிலை வாசல் கூட்ட அந்த துடைப்பத்தை போட்டு விடுவார்கள். அந்த துடைப்பம் நம்முடைய முழங்கை அளவு கூட இருக்காது.

- Advertisement -

குனிந்து கஷ்டப்பட்டு வாசலை பறக்கு பறக்கு என கூட்டுவார்கள். இது ரொம்ப ரொம்ப தவறு. கூட்டும் போது ஒரு சவுண்ட் வரும் பாருங்க. ஊரே திரும்பி பார்க்கும். இது போன்ற தவறை நீங்க பண்ணாதீங்க. வாசல் கூட்ட புதுசாக ஒரு நல்ல துடைப்பம் வாங்கி வைப்பது தான் நல்லது. கோவிலை சுத்தப்படுத்துவதற்கு துடைப்பம் வாங்கி தானம் கொடுப்பது நன்மையை கொடுக்கும்.

அதேபோல நீங்கள் பயன்படுத்திய பழைய துடைப்பத்தை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கக் கூடாது. தேய்ந்து போன துடைப்பம் தானே என்று எடுத்து வீதியில் போட்டால், அதை கொண்டு போய் இன்னொருவர் பயன்படுத்துவார்கள். இப்படி உங்க வீட்டு துடைப்பம் அடுத்த வீடுகளுக்கு சென்றால், உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சமே அடுத்தவர்களுக்கு சென்றதாக அர்த்தம்.

இதையும் படிக்கலாமே: வாராகி அருள் பெற தீப வழிபாடு

ஆகவே பழைய பயன்படுத்த முடியாத தேய்ந்து போன துடைப்பத்தை யார் கைகளுக்கும் படாமல் தூரமாக கொண்டு போய் குப்பையில் போட்டுவிட்டு வரவும். இல்லை என்றால் நெருப்பில் போட்டு கொளுத்தி விடுங்கள். தவறு கிடையாது நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -