சூப்பரான ஈவினிங் டீ டைம்மை இன்னுமே சூப்பராக்க ஒரு கப் டீயோட மொறு மொறுன்னு கிரிஸ்பியான இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.

aval vadai
- Advertisement -

பலருக்கும் மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டு. இதற்கெனவே டீக்கடைக்கு சென்று ஸ்நாக்ஸுடன் டீ குடிக்கும் பழக்கம் இன்றும் பல பேருக்கு உண்டு. அப்படி நாம் எடுத்துக் கொள்ளும் ஸ்நாக்ஸ் பெரும்பாலும் வடை பஜ்ஜி போண்டா இப்படித் தான் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த வடை செய்ய முதலில் ஒரு கப் அவல் இதற்கு வெள்ளை அவல் அல்லது சிகப்பு அவல் இரண்டில் எதை வேண்டுமானாலும் எடுத்து ஒரே ஒரு நிமிடம் தண்ணீரில் ஊற வைத்த பிறகு எடுத்து பிழிந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து அதையும் இந்த அவலுடன் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் ஒரு சிறிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி அதை மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு அவலுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதற்கு கொஞ்சம் மசாலாக்களையும் சேர்க்க வேண்டும். அதற்கு கால் டீஸ்பூன் கரம் மசாலா, கால் டீஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் இவை எல்லாம் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

அடுத்து இதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து இன்னும் கொஞ்சம் நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். இவை இரண்டையும் சேர்க்கும் போது உள்ளே சாப்டாகவும் மேலே நல்ல கிரிஸ்பியாகவும் வரும்.

- Advertisement -

அடுத்து தயார் செய்து வைத்த மாவை எடுத்து சின்ன சின்ன வடை போல தட்டி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதிகம் மொறு மொறுப்புடன் வேண்டுமென்றால் மெலிதாக தட்டிக் கொள்ளுங்கள். கொஞ்சம் சாஃப்ட்டாக வர வேண்டும் என்றால் கொஞ்சம் தடியாக தட்டிக் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது இதை பொரிக்க அடுப்பில் பேன் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள். இதற்கு வடை பொரிக்கும் அளவு எண்ணெய் தேவை படாது. மீன் வறுப்பது போல பேனில் கொஞ்சம் கூடுதலாக எண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்த வடையை போட்டு ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: குமரகம் முட்டை கறி மசாலா சாப்பிட்டு இருக்கீங்களா? இதோடபேரை போலவே டேஸ்ட்டும் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இத மட்டும் செய்ஞ்சு பாருங்க சட்டியை துடைச்சு வச்சிடுவாங்க.

சுவையான இந்த அவல் வடை ஈவினிங் ஸ்டாக்ஸ்க்கு சூப்பராக இருக்கும். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அது மட்டும் இன்றி இது கிட்டத்தட்ட நாம் செய்யும் வடையை போலவே இருக்கும். பத்து நிமிடம் ஒதுக்கினாலே போதும் அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார் செய்து விடலாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -