குமரகம் முட்டை கறி மசாலா சாப்பிட்டு இருக்கீங்களா? இதோடபேரை போலவே டேஸ்ட்டும் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இத மட்டும் செய்ஞ்சு பாருங்க சட்டியை துடைச்சு வச்சிடுவாங்க.

egg gravy
- Advertisement -

பொதுவாகவே முட்டை வைத்து கிரேவி, தொக்கு என பலவகை ரெசிபிகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் முட்டையை வைத்து ஒரு வித்தியாசமான சுவையில் குமரகம் முட்டை கறி மசாலா எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த குமரகம் கேரளாவில் உள்ள கிராமம் இங்கு செய்யும் இந்த ரெசிபி மிகவும் பிரபலம். அதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து போகிறோம்.

செய்முறை

இந்த கிரேவி செய்வதற்கு முதலில் ஆறு முட்டையை வேக வைத்து தோல் உரித்து இரண்டாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பழுத்த தக்காளியும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி ஆறு, பல் பூண்டு அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இப்போது இந்த மசாலா கறி செய்ய ஆரம்பித்து விடலாம். அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு 1 ஸ்பூன் சோம்பு, 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு என அனைத்தையும் சேர்த்த பிறகு டீஸ்பூன் உப்பை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு தக்காளி கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி விடுங்கள்.

வெங்காயம், தக்காளி இரண்டும் வதக்கிய பிறகு 1 ஸ்பூன் மிளகாய்த் தூள், 1 டீஸ்பூன், தனியாத் தூள், 1/2 ஸ்பூன் உப்பு, 1/2 ஸ்பூன் கறி மசாலா, 1/2 ஸ்பூன் காரப் பொடி இது இல்லை என்றால் சில்லி பிளாக்சும் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அடுப்பை சிம்மில் வைத்து வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் அரை முடி தேங்காய் அரைத்து கெட்டியான முதல் பால் எடுத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் தேங்காயில் தண்ணீர் ஊற்றி இரண்டாவது பால் எடுத்து அந்தப் பாலை வெங்காயம் தக்காளி மசாலா கலந்தது ஊற்றி கொதிக்க விடுங்கள். இதை ஐந்து நிமிடம் கொதித்த பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்த முட்டையை இதில் சேர்த்து எடுத்து வைத்த முதல் பாலையும் ஊற்றி நன்றாக கலந்து மூடி போட்டு ஐந்து நிமிடம் கழித்து கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: குக்கரில் மூனே விசில் விட்டால் போதும் அட்டகாசமான உருளைக்கிழங்கு குருமா ரெடி. இதுக்கு முன்னாடி கறிக் குருமாவே தோத்து போயிடும். சப்பாத்தி பூரி இட்லி தோசை எத செஞ்சாலும் இந்த குருமா வச்சு அசத்துங்க.

அருமையான சுவையில் குமரகம் முட்டை கறி மசாலா தயார் இந்த மசாலா கிரேவி ரொம்பவும் வித்தியாசமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இதை இட்லி தோசை என அனைத்து டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். இது மட்டும் இன்றி தேங்காய் பால் சாதம் கீரை சென்ற வெரைட்டி ரைஸ்க்களுடன் சாப்பிட இன்னுமே அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -