அவரைச் செடியில் கொத்துக் கொத்தாக காய் பிடிக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க. அப்புறம் பாருங்க ஒரே செடியில் கிலோ கணக்குல காய் வைக்கும்.

avari sedi valarppu
- Advertisement -

தோட்டம் வைத்திருப்பவர்கள் காய்கறி செடிகள் வளர்க்க வேண்டும் என நினைத்தால் முதலில் அவரை செடியை தான் தேர்வு செய்வார்கள். அதில் எப்பொழுதும்காய் வைத்துக் கொண்டே இருக்கும். அதே நேரத்தில் சீக்கிரம் வளர்ந்து காய்க்கும். இப்போது இந்த வீட்டு தோட்டம் பதிவில் அவரைச் செடியில் அதிகம் காய் பிடிக்க சில டிப்ஸ் பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

அவரைச் செடியில் இரண்டு வகை உள்ளது. ஒன்று கொடிய அவரை மற்றொன்று செடி அவரை.கொடி அவரை நாம் முறையாக பந்தல் போட்டு வளர்த்தால் தான் அது படர்ந்து காய்கள் அதிகம் வைக்கும். செடி அவரைக்கு அது போன்று எதுவும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் குரோபேக்கில் வைப்பதாக இருந்தால் ஒரு குரோபேக்கில் ஒரு அவரைச் செடியை மட்டும் வைத்தால் போதும். இது நன்றாக படர்ந்து ஒரு செடியிலே அதிக காய்கள் வைக்கும். இடம் இல்லாதவர்கள் அதிக பட்சம் இரண்டு செடி வைக்கலாம் அதற்கு மேல் வைக்க கூடாது.

- Advertisement -

அவரைச் செடியை பொருத்த வரையில் நடவு செய்வதற்கு முன்பாக விதை நேர்த்தி கட்டாயமாக செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்ய உங்களிடம் உரங்கள் அல்லது பஞ்சகாவியா போன்றவை இருந்தால் அதில் ஊற வைத்து அதன் பின் உலர்த்தி நடலாம். இல்லாதவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் விதையை அரை மணி நேரம் வரை ஊற வைத்து அதன் பிறகு நிழலில் உலர்த்தி நடவு செய்தால் சீக்கிரம் செடிகள் முளைத்து வரும்.

இதற்கு மண் கலவையும் மிகவும் முக்கியம். இரண்டு பங்கு மண் ஒரு பங்கு உரம், ஒரு பங்கு தேங்காய் நார் உரம் அல்லது மணல் இவற்றுடன் கொஞ்சம் கடலை புண்ணாக்கையும் சேர்த்து நடவு செய்யும் போது செடிகள் நன்றாக வளருவதுடன் நோய் தாக்குதலில் இருந்து செடிகளை காப்பாற்றலாம்.

- Advertisement -

அவரைச் செடியை பொறுத்த வரை 45 நாட்களிலே முளைத்து பூ வைக்க ஆரம்பித்து விடும். எனவே செடி வைத்து 40வது நாட்களில் ஒரு பெருங்காய கட்டியை எடுத்து அவரை செடி வைத்திருக்கும் தொட்டியில் புதைத்து விட வேண்டும். இதன் மூலம் வேர் அழுகல் வராமல் தடுப்பதோடு செடிக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.

செடியில் பூ வைத்த பிறகு பூக்கள் உதிராமல் இருக்க பெருங்காயத் தூள் மோர் கலந்த கலவை நீரை உரமாக தெளித்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் செடி பூச்சித் தாக்குதல் எதுவும் இன்றி நன்றாக தழைத்து வளரும். இந்த அவரைச் செடியில் நிச்சயமாக அஸ்வினி பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே அவரையில் இரண்டு இலைகள் வந்த உடனே அதற்கு பூச்சிக் கொல்லி தெளிக்க வேண்டும். அதற்கு வேப்ப எண்ணை கரைசலை செடிக்கு தொடர்ந்து தெளித்து வர வேண்டும்.

- Advertisement -

அடுத்து செடிகளில் பூ வைத்து காய் காய்க்கும் பொழுது கட்டாயம் நாம் ஏதாவது ஒரு உரக்கரைசலை கொடுக்க வேண்டும். அதற்கு வேப்பம் புண்ணாக்கையும் கடலை புண்ணாக்கையும் ஊற வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி திப்பிகள் இல்லாமல் செடி வேர்ப்பகுதியில் ஊற்றி வர வேண்டும. திப்பிகளுடன் ஊற்றினால் அதற்கு புழுக்கள் வர ஆரம்பித்து விடும்.

அவரைச் செடியில் மாவு பூச்சி தாக்குதலும் கட்டாயமாக இருக்கும். இதனால் பூ உதிரும் இதற்காக நீங்கள் பெரிய அளவில் எதுவும் செய்யலாம் செய்ய வேண்டியது இல்லை. பூச்சி கொல்லிகள் இருந்தால் தெளிக்கலாம். அது இல்லை என்றால் சாம்பலை தொடர்ந்து செடிகளின் மேல் தூவி வரும் போது மாவு பூச்சி தாக்குதல் குறைந்து விடும்.

இதையும் படிக்கலாமே: நீங்க விதைக்கும் ஒவ்வொரு விதையும் முளைத்து வர ஒரு அருமையான ட்ரிக்ஸ் இருக்கு தெரியுமா?. இந்த ட்ரிக்ஸ் மட்டும் நீங்க தெரிஞ்சிக்கிட்டா தோட்டம் வைக்கிறதுல நீங்க தான் கில்லாடி.

செடியில் பூச்சி தாக்குதல் அதிகம் வைக்க முக்கிய காரணம் செடியில் பழுத்த காய்ந்த இலைகளை தான். இவைகளை உடனுக்குடன் எடுத்து விட வேண்டும். அது அப்படியே இருக்கும் பட்சத்தில் பூச்சி தாக்குதல்கள் அதிகமாகவே இருக்கும். அவரைச் செடி வைத்து அதிக அளவில் காய்த்து குலுங்க இந்த டிப்ஸ் அனைத்துமே உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -