காலை உணவாக இடியாப்பம் செய்யும் முறை

idiyapam-compressed

வழக்கமான டிபன் வகைகளான இட்லி, தோசை மற்றும் பூரி போன்றவற்றை சாப்பிட்டு வரும் நாம் சற்று மாறுதலாக அவ்வப்போது சுவைப்பதுதான் இந்த இடியாப்பம். இதனை வீட்டில் எப்படி சமைப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

idiyapam_1-compressed

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

இடியாப்பம் மாவு – 1.5 கப்
உப்பு – தேவையான அளவு

இடியாப்பம் செய்முறை:

முதலில் ஒரு பவுலில் இடியாப்பமாவினை கொட்டி அதனுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நன்றாக கொதிக்க வைத்த வெந்நீர் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து ஒரு கரண்டி மூலம் கலந்து கொள்ளவும்.

idiyapam_2-compressed

பிறகு கைவைத்து அந்த மாவினை நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை இடியாப்ப அச்சில் போட்டு பிறகு ஒரு இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில் இந்த இடியாப்ப அச்சின் மூலம் புழியவும்.

idiyapam_3-compressed

பிறகு இட்லி பாத்திரத்தை மூடி 6 முதல் 7 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான இடியாப்பம் தயார்.

idiyapam_4-compressed

சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
இனிப்பான லட்டு செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Idiyaappam recipe in Tamil. It is also called as Idiyaappam seimurai or Idiyaappam seivathu eppadi in Tamil or Idiyaappam preparation in Tamil.