திருஷ்டி தோஷம் நீங்க வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியது

mahalakshmi vasal
- Advertisement -

வீட்டில் அனைத்து சந்தோஷத்தையும் பெற்று தருவதற்கு முதலில் மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் நிச்சயமாக தேவை. அந்த கடாசத்தை நாம் பெற உதவக் கூடிய நாளெனில் அது வெள்ளிக்கிழமை தான். மற்ற தினங்களில் நாம் என்ன வழிபாடு செய்தாலும் இந்த நாளில் செய்யக் கூடிய வழிபாடுகளுக்கு என தனி சிறப்புகள் உண்டு.

அதிலும் மகாலட்சுமி தாயார் வழிபாடு சுக்கிர வழிபாடு போன்ற நம்முடைய செல்வ வளத்தை அதிகரிக்க கூடிய அனைத்து வழிபாடுகளையும் செய்ய உகந்த நாள் இந்த வெள்ளிக்கிழமை. ஆகையால் தான் வெள்ளிக்கிழமை வழிபாட்டை நம் முன்னோர்கள் தவறாது கடைப்பிடித்தார்கள். நாமும் இன்றளவு அதை கடைப்பிடித்து வருகிறோம்.

- Advertisement -

வழிபாட்டிற்கு எப்படி வெள்ளிக்கிழமை உகந்த நாளோ, அது போல வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை அகற்றவும் வெள்ளிக்கிழமை தான் உகந்த நாள். இத்தகை சிறப்பு வாய்ந்த இந்த கிழமையில் நம்முடைய வீட்டின் திருஷ்டி தோஷங்கள் நீங்கி தாயாரின் அருளைப் பெற எளிய ஒரு பரிகார முறை உண்டு. அதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

திருஷ்டி தோஷங்கள் நீங்க வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று மாலை வேலையில் தான் செய்ய வேண்டும். பொதுவாக வெள்ளிக்கிழமை காலை வேளையில் தெய்வ வழிபாடும் ல பரிகார முறைகள் மகாலட்சுமி தாயார் பூஜை போன்றவற்றை செய்வது சிறந்த பலன்களை தரும்.

- Advertisement -

அதே போல் வெள்ளிக்கிழமை மாலை வேலையில் கண் திருஷ்டி தோஷங்கள் நீங்கி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகார முறைகள் வழிபாடுகள் செய்வது சிறந்த பலனை தரும். இந்த பரிகாரத்தையும் வெள்ளிக்கிழமை மாலை வேளையிலே செய்யுங்கள்.

நம் வீடுகளில் காலை மாலை இருவேளையும் வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் இதை கட்டாயமாக செய்வார்கள். அப்படி கோலம் போட்ட பிறகு ஒரு சிறிய டம்ளரில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மஞ்சள் கொஞ்சமாக குங்குமம் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது உங்கள் வீட்டிற்கு வெளியே வாசலுக்கு சென்று விடுங்கள். நீங்கள் உங்கள் வீட்டின் பக்கம் முதுகை காட்டிக் கொண்டு தெருவாசல் பக்கம் பார்த்த பாரு நில்லுங்கள். உங்கள் கையில் இருக்கும் இந்த தண்ணீரை நீங்கள் கோலம் போடும் இடத்திலோ அல்லது போட்டிருக்கும் கோலத்தின் மீதோ ஊற்றி விடுங்கள். இந்த தண்ணீரை நீங்கள் வீட்டைப் பார்த்தவாறு நின்று உற்ற கூடாது. வீதியை பார்த்தவாறு நின்று தான் ஊற்ற வேண்டும்.

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள் தண்ணீர் கொஞ்சமாக கலந்து ஊற்றுங்கள். அதிகமாக கலந்து கோலத்தின் மீது ஊற்றி கோலம் கலந்து விடக் கூடாது. வெள்ளிக்கிழமையில் அப்படி ஊற்றி கோலத்தை கலைப்பது அபசகுணமாக கருதப்படும். இதையும் கவனத்தில் வைத்துக் கொண்டு மிக கொஞ்சமாக இந்த தண்ணீரை கலந்து ஊற்றுங்கள்.

அதன் பிறகு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீட்டில் விளக்கு ஏற்றுவது பூஜை செய்வது போன்றவற்றை தாராளமாக செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, தோஷங்கள், எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறுவதுடன் லட்சுமி தாயாரை வீட்டிற்குள் வர வைக்கும் ஒரு தாந்த்ரீக முறையாகவும் இது கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பங்குனி உத்திர வழிபாடு

இந்த ஒரு எளிய பரிகார முறையில் செய்வதன் மூலம் இத்தனை பலன்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -