- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஒரே வாரத்தில் முகம் முழுமையான சிவப்பழகை பெற சீக்ரெட் டிப்ஸ்.

ஒரே வாரத்தில் முகம் முழுமையான சிவப்பழகை பெற சீக்ரெட் டிப்ஸ்.

- Advertisement -

முகம் அழகாகவும் பளிச் சென்று இருக்க வேண்டும் எனில் அதற்கென அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டில் அன்றாட பயன்படுத்தக் கூடிய பொருட்களிலே எண்ணற்ற பயன்கள் உண்டு. அவற்றில் சில பொருட்களை வைத்து தான் முகத்தை நிறமாக்கும் டிப்ஸை தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முகம் சிவப்பாக பாதாம் பேஸ் பேக்

முகம் சிகப்பாக மாற வேண்டும் என்றால் வெறும் நிறத்தை மட்டும் கூட்டினால் போதாது. முகத்தை சுற்றி இருக்கும் கரும்புள்ளிகள், கண்களை சுற்றி இருக்கும் கருவளையம், தோல் சுருக்கம் அனைத்தையும் சரி செய்தால் தான் முகம் நிறமானாலும் பார்க்க அழகாக இருக்கும்.

- Advertisement -

இந்தக் குறிப்பில் பயன்படுத்தப் போகும் பொருட்கள் இவை அனைத்தையும் சரி செய்யக் கூடியவை அது பாதாமும் தேனும் தான். பாதாமுக்கு பொதுவாகவே சருமத்தை இளமையாக வைத்திருக்கக் கூடிய தன்மை அதிகம். தேன் சருமத்தை இளமையாக முகச்சுருக்கத்தை சரிசெய்வதுடன் முதுமை தோற்றம் வராமல் தடுக்கும்.

இந்த பேக் தயாரிக்க பாதாமை அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். தினமும் ஒரு ஸ்பூன் பாதாம் பவுடர், ஒரு ஸ்பூன் தேன் இரண்டையும் ஒன்றாக குழைத்து முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு இதை முகத்தில் போட்டு ஐந்து நிமிடம் அப்படியே முகத்தில் விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு காய்ச்சாத பசும்பாலை எடுத்து அதைத் தொட்டு மசாஜ் செய்து கொடுத்த பிறகு ஐந்து நிமிடம் அதுவும் முகத்தில் ஐந்து நிமிடம் அப்படியே இருக்கட்டும். எது காய்ந்த பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள். முகத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்கள் இந்த பாதாம், தேனுடன் சிறிது எலுமிச்சை சாறையும் கலந்து தேய்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: முடி பட்டுப் போல மிளிர ஹேர் பேக்
இதை தினமும் பயன்படுத்தி வரும் போது ஒரே வாரத்தில் உங்கள் முக கருமை நீங்கி சிவப்பாவதுடன் வயதான தோற்றம் வருவதை தடுத்து கண்களை சுற்றி உள்ள சுருக்கம், கருவளையம் போன்ற முகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விடும். இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்