கலியுக கடவுள் பைரவருக்கு ஏற்ற வேண்டிய முக்கிய தீபங்களும், அதனால் கிடைக்கக்கூடிய பலன்களும் என்னென்ன? தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆவலாக உள்ளதா?

bairavar
- Advertisement -

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படும் கால பைரவருக்கு வேண்டிய வரங்களை எந்த பாரபட்சமும் பார்க்காமல் கொடுக்கும் அற்புத சக்தி உண்டு. ஈசனை போலவே நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்று யோசிக்காமல் தனக்காக தன்னை நினைந்து மனம் உருகி வழிபடுபவர்களுக்கு கேட்ட வரத்தை கேட்டபடியே அள்ளிக் கொடுத்து விடுவார். கால பைரவர் வீற்றிருக்கும் கோவில்களில் நடை அடைக்கப்படும் பொழுது சாவியை அவரிடம் வைத்து வழிபட்ட பிறகு நடை அடைப்பது உண்டு.

barani-deepam

எந்த விதமான பயமும் நம்மை நெருங்காமல் இருக்க கால பைரவரை வழிபடுவது சிறப்பாக இருக்கும். இத்தகைய மகிமைகள் வாய்ந்த காலபைரவருக்கு குறிப்பிட்ட சில தீபங்களை ஏற்றி அதன் மூலம் கிடைக்கக் கூடிய பலன்களையும் பக்தர்கள் அனுபவித்து வருகின்றனர். அவருக்கு உகந்த தீபங்கள் எவை? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கிப் பயணியுங்கள்!

- Advertisement -

கால பைரவருக்கு பொதுவாக மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். கடன் தொல்லைகள் தீர 27 மிளகுகளை மூட்டையாக கட்டி சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது போல ஏற்றி வழிபடுவது வழக்கம். அந்த வகையில் என்னென்ன தீபங்களை பைரவருக்கு ஏற்றி வழிபட சிறப்புப் பலன்களை நம்மால் பெற முடியும்? என்னும் ரகசியத்தை அறிந்து கொள்வோம்.

எந்த ஒரு செயலிலும் காரிய தடை அகல பைரவருக்கு குரு ஓரையில் வியாழன் கிழமையில் தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம். வியாழன் கிழமையில் வரும் குரு ஹோரை பைரவருக்கு உகந்த ஓரையாக கருதப்படுகிறது. தேங்காயை இரண்டாக உடைத்து அதில் இருக்கும் நீரை கீழே ஊற்றி விட்டு பின் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் சிகப்பு நிற திரியைப் போட்டு பைரவர் முன் தீபம் ஏற்றி பைரவர் கவசம் படித்து வழிபட்டு வந்தால் எந்த ஒரு காரியமும் ஜெயமாகும். சுப காரியங்கள், நல்ல காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் தடைகளை தகர்த்து எறிய இந்த வழிபாடு மிக சிறந்ததாக அமையும்.

- Advertisement -

உடலில் ஒருவிதமான அசதி, பித்து பிடித்தது போல் இருப்பது, பில்லி, சூனியம், ஏவல், போன்ற தீய சக்திகளால் ஆட் கொண்டவர்கள், எதிர்மறை எண்ணங்களை கொண்டவர்கள் அதிலிருந்து விடுபட பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பாகும். வெண்பூசணியை இரண்டாக உடைத்து அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு ஒரு பகுதியில் சுத்தமான நல்லெண்ணெயையும், இன்னொரு பகுதியில் பசு நெய்யையும் ஊற்றி வெள்ளை திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி இருக்கும் பூசணியில் சிகப்பு நிற துணியில் மிளகு திரி போட்டுத் தீபம் ஏற்றலாம். பசு நெய் இருக்கும் பூசணியில் வெள்ளைத் துணியில் மிளகுகளை கட்டி திரியாக்கி தீபம் ஏற்றலாம். இந்த தீபத்தை தொழில் மற்றும் வியாபார விருத்திக்காக ஏற்றி வழிபடுவது வழக்கம்.

poosani-deepam

குடும்பத்தில் நிம்மதியின்மை, வியாபார வளர்ச்சி, தொழில் மந்தம் நீங்க, நல்ல வேலை கிடைக்க வேண்டியவர்கள், வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன்களை பெற விரும்புபவர்கள் பைரவருக்கு வியாழன் கிழமையில் புதிய அகல் விளக்கு ஒன்றின் அடியில் புனுகு சாற்றி அதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் ஜவ்வாது தூவி வெள்ளை பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றி வழிபடலாம்.

bairavar

இப்படி அவருக்கு ஏற்றும் ஒவ்வொரு தீபத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. வியாழன் கிழமை குரு ஹோரை, வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்கள் பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். எனவே உங்களுடைய வேண்டுதல்களை இந்த நாட்களில் வைத்து அதன் பலன்களையும் முழுமையாக அனுபவித்துக் கொள்ளலாம்.

- Advertisement -