வாழ்நாள் முழுவதும் எந்த கடன் பிரச்சனையிலும் சிக்காமல், போதுமான அளவு செல்வத்தோடு வாழ இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்தால் போதும்.

bairva vazhipadu
- Advertisement -

படைத்தல், காத்தல், அழித்தல் என்கிற மூன்று செயல்களையும் செய்பவராக கருதப்படுபவர் சிவபெருமான். இதில் இந்த உலகில் அனைத்து உயிர்களையும், தர்மத்தையும் காக்கும் தொழிலை சிவபெருமானின் சார்பாக அவரின் அம்சமான ஸ்ரீ பைரவ மூர்த்தி செய்கிறார். மொத்தம் 64 வகையாக பைரவர்கள் இருப்பதாக சிவபுராணம் கூறுகிறது. இந்த 64 வகை பைரவர்களில், 8 வகை பைரவர்கள் மட்டுமே தற்காலத்தில் பக்தர்களால் அதிகம் வழிபாடு செய்யப்படுகின்றனர். நாம் விரும்பும் நற்பலன்கள் அனைத்தையும் வழங்கக் கூடிய ஆற்றல் கொண்டவரான பைரவ மூர்த்தி வழிபாடு குறித்த முக்கியத்துவம் வாய்ந்த பல குறிப்புகளை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

kalabairavar

பைரவ வழிபாடு இந்து மதத்தின் அங்கமான சைவ சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பழங்கால எகிப்திய நாகரீகத்தில் “அனுபிஸ்” எனப்படும் எகிப்திய கடவுள் பைரவரின் அம்சம் தான் என புராண ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் ஜைன மதத்திலும் பைரவ வழிபாடு செய்யப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய இந்து மற்றும் பௌத்த மதங்களின் தாக்கங்கள் ஏற்பட்ட சீனா, தாய்லாந்து, கொரியா, ஜப்பான் போன்ற கிழக்காசிய நாட்டு மக்கள் தங்களை தீய ஆற்றல்களிடமிருந்து காக்குமாறு இன்றளவும் பைரவ வழிபாடு செய்கின்றனர். நம் பாரத நாட்டில் மிக தொன்றுதொட்டே பைரவ வழிபாடு மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

பொதுவாக மாதத்தில் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்கள் பைரவமூர்த்தி வழிபாட்டிற்குரிய தினங்களாக இருக்கின்றன. கார்த்திகை மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி திதி பைரவரின் பிறந்த திதியாக கருதப்பட்டு, அன்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் மிக சிறப்பான வழிபாடு செய்யப்படுகிறது.

kaala bairavar

மேலும் தற்காலங்களில் பக்தர்களிடையே பைரவர் வழிபாடு மற்றும் பூஜை செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. பொதுவாக பைரவர் ஒரு உக்கிர தெய்வம் என கூறப்பட்டாலும் தன்னை பணிவாக வணங்கி, வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு அனைத்து இன்பங்களையும் வழங்கும் கருணை உள்ளம் கொண்ட தெய்வமாக விளங்குகிறார்.

- Advertisement -

வறுமை நிலையில் இருப்பவர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவர்கள், கடன் பிரச்சினைகளால் அதிகம் துன்பப்படுபவர்கள், வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, வளர்பிறை திங்கள், வெள்ளிக்கிழமைகள் திருவாதிரை நட்சத்திரம் போன்ற நாட்களில் தங்கள் பகுதியில் இருக்கும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சந்நிதிக்கு மாலைநேரத்தில் சென்று பைரவருக்கு தாமரை, வில்வம், தும்பை பூ போன்றவற்றின் மாலை அணிவித்து, வெல்லப் பாயசம், சம்பா அரிசியில் செய்யப்பட்ட சாதம், பால், தேன், செவ்வாழை பழம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி, ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் துதித்து வழிபாடு செய்து வர வீண் பண விரயங்கள், கடன் சுமை, வறுமை நிலை போன்றவை நீங்கி வளமான வாழ்க்கை உண்டாகும். வாழ்நாள் முழுவதும் இந்த வழிபாடு செய்பவர்கள் என்றும் வறிய நிலைக்கு செல்லாமல் சொர்ணாகர்ஷன பைரவர் காத்தருள்வார்.

swarna bairavar

பைரவமூர்த்தி பேய், பிசாசு, ராட்சச, பூதகணங்கள் போன்றவற்றை அடக்கி, தன் கட்டுப்பாட்டில் வைத்து அவற்றின் தலைவனாக விளங்குகிறார். எனவே நேரடி, மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், கண்திருஷ்டி, போட்டி – பொறாமைகள், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற மாந்திரீக, தாந்திரீக ரீதியிலான பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை வருகின்ற தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி, செவ்வரளி பூக்களை சமர்ப்பித்து, மிளகு சாதம் நைவேத்தியமாக வைத்து பைரவர் மூல மந்திரம் அல்லது பைரவர் அஷ்டகம் துதித்து வழிபாடு செய்தால் மேற்சொன்ன அனைத்து வகையான துஷ்ட சக்தி பாதிப்புகள், எதிர்ப்புகள் காணாமல் போய்விடும். இதன் பிறகு நீங்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் தடை, தாமதங்கள் ஏற்படாமல் சிறப்பான வெற்றி உண்டாக வழி வகை செய்வார் காக்கும் கடவுளான ஸ்ரீ பைரவ மூர்த்தி.

- Advertisement -