பைரவருக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால், உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கசப்பான கஷ்டங்களும் மாறி, இனிமையான வாழ்க்கை அமையும்.

bairavar vilakku valipadu
- Advertisement -

இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை. இன்பத்தில் மனம் மகிழும். துன்பத்தில் மனம் வருத்தப்படும். துன்பம் நேரும் பொழுது அனைத்து துன்பங்களும் ஒரு சேர வந்து நம்மை மிகவும் துயரப்படுத்தும். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த துன்பங்களை போக்குவதற்கு பைரவரை வழிபட வேண்டும். பைரவரை எப்படி வழிபட்டால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் போக்கி இன்பங்களை கொடுப்பார் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அஷ்டமி நாட்களில் பைரவரை வழிபடுவது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அப்படி அவரை வழிபடும் பொழுது பூசணிக்காயில் தீபம், தேங்காய் தீபம், மிளகு தீபம் என்று பல தீபங்களை ஏற்றி வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்வதால் நம்முடைய கஷ்டங்களை அவர் தீர்த்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது. இதே போல்தான் இந்த ஒரு தீபத்தை நாம் ஏற்றும்போது பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கசப்பான துன்பங்கள் அனைத்தும் விலகி விடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

கசப்பு என்றதும் நம் நினைவிற்கு வரும் முதல் பொருள் பாவக்காய் தான். அந்த கசப்பான பாவக்காயில் நாம் பைரவரை நினைத்து தீபம் ஏற்றினோம் என்றால் கசந்து போன நம் வாழ்க்கையும் இனிமையாக மாறிவிடும். இந்த தீபத்தை நாம் பைரவரின் சன்னதியில் மட்டும் தான் ஏற்ற வேண்டும். வீட்டில் ஏற்றக்கூடாது.

இந்த தீபத்தை நாம் ஏற்றுவதற்கு நமக்கு ஒரு பாவக்காய் இருந்தாலே போதும். பழுத்த பாவக்காயில் இந்த தீபம் ஏற்றுவதற்கு உபயோகப்படுத்தக் கூடாது. ஒரு பாவக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு அதை பாதியாக நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது உள்ளே இருக்கும் விதைகள் அனைத்தையும் நீக்கி விட வேண்டும். நான்கு பக்கமும் சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதில் நல்லெண்ணையை ஊற்ற வேண்டும். அடுத்ததாக ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 9 அல்லது 21 என்ற வீதத்தில் மிளகை போட்டு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை பாவக்காயில் வைத்து அதை திரியாக பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரை 8, 16 என்ற எண்ணிக்கையில் வலம் வர வேண்டும். அவருக்கு பிடித்தமான செவ்வரளி பூவை மாலையாக தொடுத்து அணிவிக்க வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு பைரவர் அஷ்டகம் படித்தோம் என்றால் நம் வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து எப்படி மீண்டோம் என்றே தெரியாமல் மீண்டு வர சக்தி வாய்ந்த இந்த தீபத்தை ஏற்றுங்கள். நிச்சயம் இனி கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் இந்த பாவக்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் நமக்கு இனிமையான வாழ்க்கை அமையும். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் எந்த வழிபாட்டையும் கடவுள் நிச்சயம் ஏற்று நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு நல்ல வழியை காட்டுவார் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு இந்த தீபத்தை ஏற்றி நன்மை அடைவோம்.

- Advertisement -