இது மட்டும் தெரிஞ்சா இனி வாழைப்பழ தோலை நீங்க சாப்பிட்டுவிட்டு குப்பையில் போடவே மாட்டீங்க! வாழைப்பழ தோலில் இவ்வளவு செய்ய முடியுமா?

banana-peel-rose-plant
- Advertisement -

எல்லோருமே வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை குப்பையில் தான் தூக்கி போடுவோம், ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் இனி வாழைப்பழத்தை யாருமே சாப்பிட்டுவிட்டு, அதன் தோலை தூக்கி போடவே மாட்டாங்க! அந்த அளவிற்கு பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடிய இந்த வாழைப்பழ தோல் எதற்கு பயன்படுகிறது? என்பதை தான் இந்த தோட்டுக்குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வாழைப்பழத்தில் அதிக அளவிலான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது. இதன் சத்துக்கள் அதனுடைய தோலிலும் நிரம்பி இருக்கும். இதனால் தோலை வீணாக்காமல் அதை தோட்டத்திற்கு பயன்படுத்தினால் உங்களுடைய பூச்செடிகள் மற்றும் பழ வகையான செடிகள் செழிப்பாக வளரும். நான்கு வகைகளில் இந்த வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம்.

- Advertisement -

குறிப்பு 1:
வாழைப்பழத் தோலை முதலில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இதனை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு பக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் அப்படியே விட்டு விடுங்கள். இடையிடையே குச்சி போன்ற ஏதாவது ஒன்றை போட்டு கிண்டி விடுங்கள் போதும். இதனை வடிகட்டி எடுத்து இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து வந்தால், செடிகளின் வேர்களுக்கு நல்ல ஒரு வளர்ச்சியூக்கியாக இருக்கும். அஸ்வினி பூச்சிகளையும் அழிக்கக் கூடிய சத்து அதில் நிறைந்து உள்ளது. இதனுடன் முட்டை ஓட்டு தூள் மற்றும் எப்சம் சால்ட் சேர்த்தால் நல்ல ஒரு உரமாக இருக்கும்.

குறிப்பு 2:
வாழைப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை நன்கு மொர மொறவென்று ஆகும்படி சூரிய ஒளியில் போட்டு காய வைக்க வேண்டும். வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து, அதை பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பவுடரை நீங்கள் எல்லா வகையான தொட்டிகளிலும், மண் கலவையில் சேர்த்து கலந்து விட வேண்டும், இதனால் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கும்.

- Advertisement -

குறிப்பு 3:
வாழைப்பழ தோலை நேரடியாகவும் நீங்கள் மண்ணில் புதைத்து வைக்கலாம் ஆனால் இப்படி புதைக்கும் பொழுது செடியின் வேர்களை இவை தொடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மண்ணில் புதைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அது சிதைய ஆரம்பிக்கும், இதனால் உண்டாக கூடிய சத்துக்கள் மண்ணில் கலந்து, வேர்களுக்கு செல்லும். வேர் நன்கு பலமாகி செடிகளும் செழிக்கும்.

இதையும் படிக்கலாமே:
ரோஜாப்பூ ஒரே கிளையில் கொத்து கொத்தாக பூக்க இதை விட செலவில்லாத பெஸ்ட் உரம் வீட்டில் இருக்கவே முடியாது!

குறிப்பு 4:
வாழைப்பழ தோலுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து பத்திலிருந்து பதினைந்து நாட்கள் வரை நுண்ணுயிரிகளை பெருக்க செய்ய வேண்டும். ஒரு மண் பானையில் இவற்றை போட்டு நன்கு கலந்து வைத்து விட வேண்டும். பின்னர் மேலே ஒரு ஈர துணியை மூடி வையுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை லேசாக கலந்து விட்டால் போதும். 15 நாட்களில் நல்ல ஒரு ஊட்டச்சத்துள்ள நுண்ணுயிரிகள் இதில் பெருகி, உரமாகி இருக்கும். இந்த உரத்தை நீங்கள் 5 லிருந்து 10 லிட்டர் தண்ணீர் வரை தாராளமாக சேர்த்து நன்கு கலந்து உங்களுடைய எல்லா வகையான செடிகளுக்கும் ஒரு மக் வீதம் கொடுக்கலாம். இதனால் செடிகளின் வேர் நன்கு பலமாகும், பூக்கள் உதிராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. பழ வகையான செடிகளில் பூக்களாகவே உதிர்ந்து விடுவதையும், இது தடுத்து பழங்களாக மாற்ற உதவி செய்யும்.

- Advertisement -