ரோஜாப்பூ ஒரே கிளையில் கொத்து கொத்தாக பூக்க இதை விட செலவில்லாத பெஸ்ட் உரம் வீட்டில் இருக்கவே முடியாது!

rose-plant-tea-powder
- Advertisement -

ரோஜா பூ கிளையில் கொத்துக் கொத்தாக பூக்க நாம் செலவு செய்து அதிகமான விலைக்கு உரங்களை போட வேண்டிய அவசியமே இல்லை. நம் வீட்டில் எளிமையாக கிடைக்கக் கூடிய இந்த ஒரு பொருளில் சூப்பரான உரம் தயாரித்தால், ஒரே கிளையில் கூட கொத்து கொத்தாக பூக்கள் பூத்து தள்ளும். அப்படியான ஒரு உரம் என்ன? என்பதைத் தான் இந்த தோட்டக் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா பூ நல்ல ஒரு அடர்த்தியான நிறத்தை கொடுத்து, அடர்த்தியான அளவில் வளர பூக்கள், மொட்டுக்கள் என்று எதுவும் உதிர்ந்து விழாமல் இருக்க, இந்த சத்து இதற்கு தேவை. டேனிக் ஆசிட் எனப்படும் மூலக்கூறு தேயிலையில் அதிகம் நிறைந்துள்ளது. அதனால் தான் தேயிலை ஒரு சிறந்த உரமாக ரோஜா செடிகளுக்கு இதுவரை இருந்து வருகிறது.

- Advertisement -

தேயிலை, ரோஜா செடி மட்டும் அல்லாமல் மற்ற எல்லா வகையான பூச்செடிகளுக்கும் கூட நல்ல ஒரு மண்வளத்தை மேம்படுத்தி கொடுக்கிறது. மண் வளம் சிறந்து விளங்க கஃபைன் உதவியாக இருக்கிறது. காபி மற்றும் தேயிலையில் இருக்கக்கூடிய இந்த கஃபைன் மண்ணை வளமாக்குகிறது. இதனால் அதில் வளரக்கூடிய செடிகளும் செழிப்பாக வளர்கிறது.

மண்ணில் இருக்கக்கூடிய வளம் சிறப்பாக இருந்தால் தான் அதில் வளரக்கூடிய செடிகளும் செழிக்கும், எனவே முதலில் மண்ணை வளப்படுத்த வேண்டும். அதன் பிறகு செடிகளுக்கு தேவையான ஊட்டசத்தையும் சேர்த்தே அதற்கு அளிக்க வேண்டும். பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள உருளைக்கிழங்கு, ரோஜா செடிகளுக்கு நல்ல ஒரு உரமாக இருக்கிறது. எனவே முதலில் உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்து தேங்காய் துருவியில் போட்டு சீவி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதனுடன் ரெண்டு ஸ்பூன் தேயிலை தூள் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் ஐந்து நிமிடம் நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்து முற்றிலுமாக குளிர ஆற விட்டு விடுங்கள். நன்கு குளிர்ந்து ஆறியதும் இதனுடன் 10 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து எல்லா வகையான ரோஜா செடிகளுக்கும் நீங்கள் வேர் வழியாக மண்ணில் ஊற்றி விடலாம்.

நீங்கள் ஸ்ப்ரே செய்ய வேண்டும் என்றால் இதில் மிகக் குறைந்த அளவிற்கு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அதனுடன் தேவையான அளவிற்கு நன்கு தண்ணீர் கலந்து பின்னர் ஸ்பிரே செய்ய வேண்டும். மண்வழியாகவும், ஸ்பிரே செய்வதன் மூலமும் செடிகளுக்கு மொத்தமாக ஊட்டச்சத்து கிடைக்கிறது.

இதையும் படிக்கலாமே:
இதமான தூக்கம் வருவதற்கு, தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்வதற்கு சாப்பிட வேண்டிய ஒரு பொருள் என்ன? இதை சாப்பிட்டால் உடனே நல்லா தூக்கம் வருமா என்ன?

நாம் காலையில் தேநீர் போட பயன்படுத்தும் தேயிலை தூளில் சர்க்கரை சேர்த்து இருக்கக் கூடாது. சர்க்கரை சேர்க்கும் முன்னரே அந்த தேயிலை தூளையும் நீங்கள் எடுத்து வைத்து ரோஜா செடிகளுக்கு போட்டு வரலாம். தேயிலை சிறந்த ஒரு உரமாக ரோஜா செடிகளுக்கு இருந்து வருகிறது. அதை சரியான முறையில் இவ்வாறு கொடுக்கும் பொழுது வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும். ஒவ்வொரு கிளைகளும் கொத்து கொத்தாக ரோஜா மொட்டுக்கள் பூத்து தள்ளுவதற்கு, இந்த முறையில் நீங்கள் எளிமையாக உரம் கொடுத்து பாருங்கள். இதனை வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.

- Advertisement -