நீங்க ஒரு பிரின்சஸ் போல பார்ப்பதற்கு எப்போதும் அழகாக இருக்கலாம். இதிலிருந்து ஒவ்வொரு சொட்டு எண்ணெயை  முகத்தில் போடும்போதும் உங்களுக்கு ஒவ்வொரு வயது குறையும்.

face13
- Advertisement -

வயதான தோற்றம் ஏற்படுவது என்பது எல்லோருக்கும் இயற்கைதான். இந்த வயதான தோற்றத்தை அப்படியே எல்லோராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இயற்கை தன் வேலையை கட்டாயம் செய்யும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வயதான தோற்றத்தை தள்ளி போட, முகச்சுருக்கத்தை குறைக்க முகச்சுருக்கம் வராமல் இருக்க ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான இந்த குறிப்புக்கு அத்தனை பவர். இந்த எண்ணெயில் ஒவ்வொரு சொட்டை எடுத்து உங்களுடைய முகத்தை தேய்த்து மசாஜ் செய்யக்கூடிய ஒவ்வொரு நாளும் கண்கூடாக வித்தியாசத்தை பார்க்க முடியும். வாங்க அந்த அருமையான ரெமிடியை நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆலிவ் ஆயில் 100ml, தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், கிரீன் டீ ஒரு டேபிள் ஸ்பூன். எந்த பிராண்ட் கிரீன் டீ வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு லிப்டன் கிரீன் டீ என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா. அந்த மாதிரி பிராண்ட் ஆக விற்க்ககூடிய ஒரு கிரீன் டீ பேக்கை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சின்ன துணி பையில் போட்டு வைத்திருப்பார்கள் அல்லவா. அதை வெட்டி உள்ளே இருக்கும் டீ தூளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கிரீன் டீ பேக் போதும். இப்போது ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், அரிசி மாவு, கிரீன் டீ, நான்கு பொருட்களும் மொத்தமாக சேர்ந்த கலவை கிண்ணத்தில் தயாராக உள்ளது. இதை டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் சுடுதண்ணியை ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்கின்ற தண்ணீரில் இந்த எண்ணெய் பாத்திரத்தை வைத்து சூடு செய்ய வேண்டும். 5 லிருந்து 7 நிமிடங்கள் வரை எண்ணெய் சூடானால் போதும்.

பிறகு இந்த எண்ணெய் நன்றாக ஆறிய பின்பு ஒரு காட்டன் துணியில் ஊற்றி நன்றாக பிழிந்து வடிகட்டி தனியாக ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் பத்து நாட்கள் வரை நன்றாக இருக்கும். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை லேசாக தொட்டு உங்கள் முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து விடுங்கள். நிறைய எண்ணெய்யை எடுத்து முகத்தில் போடக்கூடாது. முகத்தில் போட்டதே தெரியாத அளவிற்கு போட்டு மசாஜ் செய்தால் இந்த எண்ணெயை அப்படியே உங்களுடைய சருமம் உறிஞ்சி எடுத்து கொள்ளும்.

- Advertisement -

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த மசாஜை முகத்தில் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுங்கள். பின்பு மறுநாள் காலை எழுந்து முகம் கழுவிக்கொள்ளுங்கள். தினமும் இந்த குறிப்பை பின்பற்றி வர உங்களுடைய முக சுருக்கத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். வயதான தோற்றத்தை தள்ளிப் போட இது ஒரு சுலபமான குறிப்பு. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நல்ல ரிசல்ட் கிடைத்தால் இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றிக் கொள்ளுங்கள். (இந்த குறிப்புக்கு நீங்கள் பயன்படுத்த போகும் எண்ணெய் சுத்தமான ஆர்கானிக் எண்ணெயாக இருக்கணும் பாத்துக்கோங்க.)

இதையும் படிக்கலாமே: உங்ககிட்ட இந்த ஒரு ஆயில் இருந்தாலே போதும். நீங்க தான் எப்போதும் பியூட்டி குயின்.

பின்குறிப்பு: எனக்கு ரொம்பவும் ஆயில் ஸ்கின் உள்ளது. ரொம்பவும் பிம்பிள் உள்ளது. இந்த எண்ணெயை முகத்தில் தடவினால் இன்னும் எண்ணெய் வழியாதா என்பவர்கள் இந்த எண்ணெயை முகத்தில் தடவி விட்டு ஒரு மணி நேரம் கழித்து பின்பு முகத்தை கழுவிக் கொள்ளலாம். உங்களுடைய பிம்பிள் கூட ஒரு சில நாட்களில் படிப்படியாக குறைய தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -