பீட்ரூட் பர்பி செய்முறை

beetroot barfi
- Advertisement -

இன்றைய காலத்தில் குழந்தைகள் சில குறிப்பிட்ட காய்கறிகளை மட்டுமே விரும்பி சாப்பிடுகிறார்கள். பல காய்கறிகளை ஒதுக்கி விடுகிறார்கள். அப்படி ஒதுக்கக் கூடிய ஒரு காய்கறியாக திகழ்வதுதான் பீட்ரூட். இந்த பீட்ரூட்டை எப்படி செய்து கொடுத்தாலும் வேண்டாம் என்று ஒதுக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் எந்த முறையில் பர்பி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பீட்ரூட்டில் பல எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. ரத்தத்தை அதிக அளவு உற்பத்தி செய்ய உதவுகிறது. அல்சரை தடுக்க உதவுகிறது. சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உறுப்புகளில் இருக்கக்கூடிய நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1 கப்
  • சர்க்கரை – 1 1/2 கப்
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மிகவும் பொடியாக பீட்ரூட்டை துருவிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய்யை ஊற்ற வேண்டும். நெயில் நன்றாக உருகியதும் அதில் பீட்ரூட் மற்றும் தேங்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து வதக்க வேண்டும்.

பிறகு இதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி இரண்டையும் சேர்த்து கைவிடாமல் வதக்க வேண்டும். சர்க்கரை உருகிய பிறகு கைவிடாமல் குறைந்த தீயில் வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது பீட்ரூட் தேங்காய் விழுது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்துவிடும். இதை ஒரு ட்ரெயில் நெய்யை தடவி ஊற்றி ஒரே சரிசமமாக லெவல் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இது வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது கத்தியை பயன்படுத்தி நமக்கு விரும்பிய வடிவங்களில் நறுக்கி வைத்துக் கொள்ளலாம், மேலும் விருப்பம் இருப்பவர்கள் இதில் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பர்பிக்கு மேல் அலங்காரத்திற்காக வைத்துக் கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் நாட்டுச்சர்க்கரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

மிகவும் அருமையான எளிதில் செய்யக்கூடிய பீட்ரூட் பர்பி தயாராகி விட்டது. இதை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் அவர்கள் இதை விரும்பி இனிமேல் பீட்ரூட் வாங்கினால் இப்படி செய்து கொடுங்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இன்ஸ்டன்ட் தேங்காய் சட்னி செய்முறை

சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை ஏதாவது ஒரு ரூபத்தில் குழந்தைகளுக்கு தந்தால் தான் அந்த காய்கறிகளின் சத்துக்கள் குழந்தைகளை சென்றடையும் என்ற நோக்கத்தில் பீட்ரூட்டை வைத்து இந்த முறையில் செய்து பாருங்கள் கண்டிப்பான முறையில் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -