அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் முகத்தை பாதுகாக்க இப்படி பேஸ் பேக்கை இரவில் மட்டும் போட்டு விட்டாலே போதும். அவர்கள் முகம் என்றுமே பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

beetroot face pack
- Advertisement -

எப்போதும் பிரகாசமாக பௌர்ணமி நிலவு போல ஜொலிக்க வேண்டும் என்றுதான் அனைத்து பெண்களும் ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்படுவதால்தான் பல செயற்கையான முகக் கிரீம்களை வாங்கி பயன்படுத்தி அவர்களின் அழகை அவர்களே வீணாக்கிவிடுவார்கள். ஆரம்பத்தில் உபயோகப்படுத்தும் பொழுது நன்றாக தான் இருக்கும். ஆனால் அதையே தொடர்ந்து உபயோகப்படுத்தினால் அதனால் பக்க விளைவுகள் அதிகரிக்கும். இப்படி பக்க விளைவுகள் எதுவும் இன்றி இயற்கையான முறையில் முகத்தை ஜொலிக்க வைக்க கூடிய ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பளபளப்பாகவும், தங்கத்தைப் போல ஜொலிக்கவும், பௌர்ணமி நிலவு போல் முழு பிரகாசத்துடனும் முகம் இருந்தால் அதன் அழகே தனியாகத்தான் இருக்கும். இவை அனைத்தும் நமக்கு இயற்கையிலேயே கிடைக்கிறது. ஆனால் அதை நாம் உபயோகப்படுத்தாமல் அலட்சியம் செய்து விடுகிறோம் அவ்வாறு நாம் அலட்சியம் செய்யும் பொருட்களில் மிகவும் முக்கியமானது தான் பீட்ரூட்.

- Advertisement -

பீட்ரூட்டை நாம் சாப்பிட்டாலும் சரி அல்லது முகத்திற்கு உபயோகப்படுத்தினாலும் சரி அதனால் நமக்கு பல அற்புதமான பயன்கள் கிடைக்கின்றன பீட்ரூட்டில் ஆன்ட்டி ஏஜிங் இருப்பதால் விரைவிலேயே முதிர்ச்சி தன்மை அடைவதை அது தடுக்கிறது. மேலும் ஆன்ட்டி ஆக்சைடும், விட்டமின், மினரல் போன்றவை இருப்பதால் முகத்தை அது மிருதுவாகவும், வலுவலுப்பாகவும் வைக்க உதவுகிறது.

அடுத்த முக்கியமான பொருளாக இதற்கு நமக்கு தேவைப்படுவது மைசூர் பருப்பு. மைசூர் பருப்பில் இயற்கையிலேயே தோலை பாதுகாக்கும் அனைத்து காரணிகளும் இருக்கின்றன. மேலும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்குவதற்கு இது உதவுகிறது. முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்கி பிரகாசத்தை தரும் ஆற்றல் இதற்கு உள்ளது.

- Advertisement -

முதலில் அரை பீட்ரூட்டை தோல் உரித்து பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 2 1/2 ஸ்பூன் ரோஸ் வாட்டரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பீட்ரூட்டை வடிகட்டியில் வைத்து நன்றாக வடிகட்டி பீட்ரூட் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மைசூர் பருப்பை வெயிலில் நன்றாக காய வைத்து அதை ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து சல்லடையை கொண்டு சலித்து நைசான பவுடராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுதே ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு மைசூர் பருப்பு தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதை பேஸ்ட் ஆக மாற்றுவதற்கு தேவையான அளவு பீட்ரூட் சாறை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை நாம் இரவு படுக்க போவதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு முகத்தில் பூச வேண்டும். முகத்தில் பூசும் பொழுது மறக்காமல் கழுத்தில் பூசிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவை நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தையும் கழுத்தையும் நன்றாக கழுவி விடலாம். இந்த பேஸ்ட்டை உபயோகப்படுத்தினால் நம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும். தேவையற்ற எண்ணெய் பசையை தவிர்க்க உதவுகிறது. இதனால் முகம் என்றுமே பளபளப்பாக இருக்கும். மேலும் இதில் தோலை பாதிக்கக்கூடிய எந்த காரணிகளும் இல்லை என்பதால் வறண்ட சருமமும், எண்ணெய் பசை சருமமும் இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்தி பயன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: வலியே இல்லாமல் நிரந்தரமாக முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்க இந்த பேக்கை பயன்படுத்தி பாருங்கள். அதுவே உதிர்ந்துவிடும். மறுபடியும் திரும்ப முளைக்கவே முளைக்காது.

நல்ல பலனை தரக்கூடிய அதேசமயம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இந்த இரவு நேர பேஸ் பேக்கை அனைவரும் உபயோகித்து பயனடைவோம்.

- Advertisement -