தேவதை போல அழகாக மாற, குப்பையில் தூக்கிப் போடும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே? இது முன்னவே தெரிந்திருந்தால் மாதம் ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சம் பிடித்திருக்கலாம்.

face18
- Advertisement -

முகம் அழகாக இருக்க வேண்டும். உதடு அழகாக இருக்க வேண்டும். கழுத்து அழகாக இருக்க வேண்டும். கை கால்கள் அழகாக இருக்க வேண்டும் என்று பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை பேசியல் செய்வது, கை கால்களுக்கு மெடிக்யூர், பெடிக்யூர் செய்வது உதடுகளில் அதிகப்படியான கிரீம்களை வாங்கி போடுவது என்று செயற்கையான பொருட்கள் நிறைய பயன்படுத்துவோம். ஆனால், அதில் வரக்கூடிய ரிசல்ட் பாதி என்றால், பக்க விளைவுகள் மீதி. இதற்காகும் செலவு அதற்கு மேல். செலவுகளை எல்லாம் குறைத்து மிக மிக எளிமையான முறையில் நம்மை நாமே அழகு படுத்திக் கொள்ள ஒரு அழகு குறிப்பு, இன்று இந்த பதிவின் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் குப்பையில் தூக்கி போடக்கூடிய இந்த ஒரு பொருளை வைத்து அழகாக தேவதை போல நீங்கள் உங்களை அழகுப்படுத்திக் கொள்ளலாம். அது என்ன குறிப்பு என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் அழகு குறிப்பு பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பீட்ரூட் தோல் அழகு குறிப்புகள்:
பீட்ரூட்டில் நிறைய அழகு குறிப்புகள் நமக்கு தெரியும். ஆனால் பீட்ரூட் தோல் சீவி அந்த தோலை குப்பையில் தூக்கி போடுகின்றோம். அதில் கூட நம்மை நாம் அழகு படுத்திக் கொள்ளலாம். ஆனால் பீட்ரூடிலிருந்து தோலை சீவிய உடனே இந்த அழகு குறிப்பை செய்ய வேண்டும். கொஞ்ச நேரம் அப்படியே விட்டு விட்டால் அதில் இருக்கும் சாறு அனைத்தும் டிரை ஆகிவிடும்.

பட்டுப் போல, ரோஜா இதழ் போல உதடுகள் தேவையா. கொஞ்சமாக அரிசி மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சீவிய பீட்ரூட் தோலை தொட்டு, உங்களுடைய உதடுகளை ரப் செய்ய வேண்டும். லேசாக ஜென்டில் ஆக ஸ்கிரப் செய்ய வேண்டும். பீட்ரூட் தோலை சீவி எடுத்தவுடன் உள்பக்கம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். அந்த இடத்தை இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் நீங்கி உதட்டை சுற்றி இருக்கும் கருவளையம் நீங்கி உங்களுடைய வாய் பகுதியே அழகாக மாறிவிடும். பிறகு நீங்கள் சிரித்தால் பார்ப்பவர்கள் எல்லோரும் மயங்கி விடுவார்கள். அத்தனை பேரழகு.

- Advertisement -

அடுத்து முக அழகிற்கு வருவோம். கொஞ்சமாக புளிக்காத கெட்டி தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த பீட்ரூட் தோலை தொட்டு, முகம் முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, பிறகு பத்து நிமிடம் முகத்தை அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். குறிப்பாக பீட்ரூட் காம்பு பகுதியை வெட்டி எடுக்கும் போது, அதை உங்கள் கையில் பிடித்துக் கொண்டு, வசதியாக மசாஜ் செய்யலாம். அந்த காம்பு பகுதியை குப்பையில் போடாமல், இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முகம் பேசியல் செய்தது போல அப்படியே பளபளப்பாக இருக்கும். குறிப்பாக டிரை ஸ்கின் உள்ளவர்கள் இதை கட்டாயம் முயற்சி செய்து பார்க்கவும்.

இதையும் படிக்கலாமே: கொத்து கொத்தா முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொய்யா இலை. இதை மட்டும் செய்தாலே கருகரு முடியை கஷ்டப்படாமல் கையில் தொட்டு பார்க்கலாம்.

அடுத்து ட்ரையாக சுருக்கமாக இருக்கும் கைகள் கால்களுக்கு வருவோம். கொஞ்சமாக தேன், கொஞ்சமாக தயிர், கொஞ்சமாக அரிசி மாவு, இந்த மூன்று பொருட்களையும் கலந்து பேஸ்ட் ஆக வைத்துக் கொள்ளுங்கள். பீட்ரூட் தோலில் இதை தடவி அப்படியே சுருக்கமான கைப்பகுதியிலும், கால் பகுதியிலும், பாதங்களிலும் மசாஜ் செய்து விடுங்கள். அவ்வளவுதான். ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு பத்து நிமிடங்கள் கழித்து அப்படியே மீண்டும் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால் வேற லெவல் ரிசல்ட் கிடைக்கும். இத்தனை நாளா எவ்வளவு பீட்ரூட் தோலை வீணாக்கி விட்டோமே, என்று சிந்திக்கும் அளவுக்கு இந்த அழகு குறிப்புகள் உங்களுக்கு பயன் கொடுக்கும். பிடித்தவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -