- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகொத்து கொத்தா முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொய்யா இலை. இதை மட்டும் செய்தாலே...

கொத்து கொத்தா முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொய்யா இலை. இதை மட்டும் செய்தாலே கருகரு முடியை கஷ்டப்படாமல் கையில் தொட்டு பார்க்கலாம்.

- Advertisement -

கரு கரு முடியை நம்முடைய கண்களால் பார்த்து விடமாட்டோமா, கையால் வருடி தர மாட்டோமா, என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. ஏனென்றால் தலை முடி உதிர்வு பிரச்சனை நாளுக்கு நாள் எல்லோருக்கும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் இளநரை பிரச்சனையில் இருந்து தப்பிப்பது இந்த காலத்தில் ரொம்ப ரொம்ப கஷ்டம். 20 வயதை கடந்தவர்களுக்கு கூட, இளநரை இருப்பது சகஜம் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட தலைமுடி பிரச்சனைகளை சரி செய்ய எளிமையான செலவில்லாத ஒரு அழகு குறிப்பு, கொய்யா இலையை பயன்படுத்தி ஹேர் டானிக் எப்படி தயார் செய்வது என்பதை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கொத்து கொத்தாக முடி கொட்டுவதை நிறுத்தும் கொய்யா இலை:
இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலை. 1 லிட்டர் அளவு தண்ணீர். அவ்வளவு தான். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொய்யா இலைகளை போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் கொய்யா இலையில் இருக்கும் சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி சூப்பராக தயாராகி இருக்கும். இந்த டானிக் நன்றாக ஆரட்டும். இந்த தண்ணீரை பார்ப்பதற்கு லேசாக சிவப்பு நிறத்தில் இருக்கும்.

- Advertisement -

இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் வேர்க்கால்களில் படும்படி ஸ்பிரே செய்து, பிறகு உங்களுடைய விரல்களை தலைமுடிக்கு உள்ளே விட்டு மசாஜ் செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு காட்டன் பஞ்சில் இந்த தண்ணீரைத் தொட்டு தலை முடியை பாகம் பாகங்களாக பிரித்து வேர் கால்களில் படும்படி அந்த இடத்தில் எல்லாம் இந்த டானிக்கை போடுங்கள். இந்த டானிக் வேர்கால்களில் பட்டால் உங்களுடைய தலைமுடி உடனடியாக வலுபெறும். அதேசமயம் முடியை கருகருவென வளரச் செய்யும். வெள்ளை முடி வருவதை தவிர்க்கும். பிறகு 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

இந்த ஹேர் டானிக் நிச்சயமாக மீதி நிறைய இருக்கும். அதை தலை அலச குளிக்கின்ற தண்ணீரில் கலந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறு கிடையாது. வாரத்தில் இரண்டு நாள் இந்த குறிப்பை பின்பற்றி வர வேண்டும். மீதம் இருக்கும் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து கூட நாம் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம். இருப்பினும் கொய்யா இலை உங்களுக்கு சுலபமாக கிடைக்கும் என்றால், பிரஷ்ஷாக இந்த டானிக்கை அப்பப்போ தயார் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சில பேருக்கு கொய்யா இலை அவ்வளவு சுலபமாக கிடைக்காது. அப்படி இருக்கும்போது நாட்டு மருந்து கடைகளில் கொய்யா இலை பவுடர் கிடைக்கும். அதை வாங்கி கூட நீங்கள் இதே போல சுடுதண்ணியில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஹேர்ட்டானிக்காக பயன்படுத்தலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: உங்க முழு உடம்பும் தங்கம் போல ஜொலி ஜொலிக்க இந்த ஒரு எண்ணெய் இருந்தா போதும். வாழ்நாள் முழுவதும் அழகு தேவதையாக வலம் வர செலவே இல்லாத அருமையான அழகு குறிப்பு.

உடலில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிர்வு உங்களுக்கு ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு முதலில் நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் தான் கவனம் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் ஊட்டச்சத்து இல்லாதவர்கள் எவ்வளவு தான் ஹேர் பேக் போட்டாலும் 20% மட்டுமே பலன் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்