எந்த திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா ?

deepam

வீட்டில் தீபம் ஏற்றுவது ஆன்மீக ரீதியாக ஒரு மிக சிறந்த விடயமாக கருதப்படுகிறது. அதே போல் தீபத்தில் போடப்படும் திரியை பொறுத்து அதற்கான பலன்களும் மாறுபடுகிறது. வாருங்கள் எந்த வகையான திரியை கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம்.

vilaku

பருத்திப் பஞ்சு
பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட திரியை கொண்டு தீபம் ஏற்றினால் குடும்பத்தில் பல நல்ல விடயங்கள் நடக்கும். இதனால் குடும்பம் சிறக்கும்.

வாழைத் தண்டின் நார்

vazhai thandu
வாழைத்தண்டு நாரை திரியாக திரித்து அதில் தீபம் ஏற்றினால் முன்னோர்களின் சாபங்கள் விலகும். அதோடு ஏதேனும் தெய்வக்குற்றங்கள் இருந்தால் அதுவும் விலகி வீட்டில் அமைதி உண்டாகும்.

தாமரைத்தண்டு நூல்

vilakku

தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் தீபம் ஏற்றுவதால் வீட்டில் செல்வம் நிலைக்கும். அதோடு முன்வினைப் பாவங்கள் நீங்கும்.

வெள்ளை எருக்கம்பட்டை
வெள்ளை எருக்கம்பட்டையை திரியாக திரித்து அதில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் செல்வம் பெருகும்.