இரவில் தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்து தூங்கினால், உடலில் ஏற்படும் அதிசய சக்தி!

oil-in-naval1

பொதுவாகவே நம் உடல் சூடாகி விட்டது என்றால் நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக கருதப்படுவது தொப்புள் தான். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இந்த தொப்புள் பகுதியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, தொப்புளை சுற்றி ஒரு அங்குலம் வரை வட்ட வடிவில், மசாஜ் செய்வதன் மூலம் பல பிரச்சினைகள் தீருவதாக மருத்துவ குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. எந்த எண்ணெயை தொப்புளில் விட்டு, மசாஜ் செய்தால் என்ன பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

oil-in-naval

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இத்தனை பிரச்சனைகள் குணமாகுமா? என்ற ஆச்சர்யம் நம்மில் பல பேருக்கு இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதுதான் இந்த வைத்தியம். உடல் சூடு, கண் வறட்சி, மூட்டுவலி, சோம்பல், முழங்கால் வலி, சரும வறட்சி, தலைமுடி உதிர்தல், பாத வெடிப்பு, போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இந்த வைத்தியத்தை எந்த எண்ணெயில் செய்வது? எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வகையான பிரச்சனைக்கும், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக, தொப்புளில், அந்த குறிப்பிட்ட எண்ணையை 1/2 ஸ்பூன் அளவு விட்டு, வலப்புறமாகவும் இடப் புறமாகவும், வட்டவடிவில் லேசான முறையில் மசாஜ் செய்து வரவும்.

nallennai

நல்லெண்ணெய்:
உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும் குறைந்துவிடும்.

- Advertisement -

கடுகு எண்ணெய்:
கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும். உடல் நடுக்கம் குறையும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

neem oil 3-compressed

வேப்ப எண்ணெய்:
சரும பிரச்சனையான முகப்பரு, தேமல், சொறி, படை போன்ற பிரச்சனைக்கு வேப்ப எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்து வரவேண்டும். கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகளால் தோலில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் இந்த வேப்பெண்ணை சரிசெய்துவிடும்.

நெய்:
நெய்யை தொப்புளில் விட்டு தடவி வர முகத்தின் அழகு கூடும். உடல் வறட்சி தன்மை நீங்கும்.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்:
இந்த இரண்டு எண்ணையின் ஏதாவது ஒன்றை தொப்புளில் விட்டு தேய்த்துவர ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். குழந்தை இல்லாமல் தவித்து வரும் பெண்களுக்கு இது ஒரு நல்ல வைத்தியமாக இருக்கும். கூடிய விரைவிலேயே நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக கருச்சிதைவு இருக்கும் பெண்கள் தினம்தோறும் ஆலிவ் எண்ணையை தொப்புளை சுற்றி தடவிக்கொண்டு படுப்பது மிகவும் நல்லது. இதுதவிர, ஆலிவ் ஆயிலை தொப்புளில் தொடர்ந்து தேய்த்து வர, முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

castor oil

விளக்கெண்ணை:
விளக்கெண்ணையை தொப்புளில் தடவி வர மூட்டுவலி குணமடையும். உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்துமே வலிமை பெறும்.

இதையும் படிக்கலாமே
எப்படிப்பட்ட நெஞ்சு சளி, காய்ச்சல், இருமல் இருந்தாலும் ஒரே நாளில் தீரவேண்டுமா? பாட்டி வைத்தியம்.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Oil in belly button benefits. Oil in belly button. Uses of oil in navel. Oil in navel benefits.