யாரும் அறிந்திராத இந்த 10 விஷயங்களை தெரிந்து வைத்திருந்தால்! நீங்களும் சமையல் கில்லாடி ஆகலாம் தெரியுமா?

home-tips-10
- Advertisement -

சமையல் என்பது மிகப் பெரிய கலை ஆகும். அந்த கலையில் எவ்வளவு கற்றுக் கொண்டாலும் அது கை அளவிற்கு தான் இருக்கும். ஆனால் கடல் அளவு இருக்கும் அக்கலையைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது தான் என்றாலும் அதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையலை போன்று தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும். அந்த வகையில் இந்த பத்து விஷயங்களை தெரிந்து வைத்திருந்தால் நீங்களும் ஆகலாம் சமையல் கில்லாடி! அதை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ant-erumbu

குறிப்பு 1:
வீடுகளில் அதிகமாக ஈ, எறும்புகள் நடமாட்டம் இருந்தால் உங்கள் வீட்டை துடைக்க பயன்படுத்தும் அந்த தண்ணீரை கொஞ்சம் வெதுவெதுப்பாக சுட வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கறிவேப்பிலையை போட்டு ஊற வைத்து பின்னர் துடைத்தால் அப்புறம் பாருங்கள்! ஒரு ஈ, எறும்பு கூட அண்டாது.

- Advertisement -

குறிப்பு 2:
நீங்கள் பாயாசம் செய்யும் பொழுது அதிகம் தண்ணீர் சேர்த்து நீர்த்துப் போய் இருந்தால் கொஞ்சம் வாழைப் பழத்தை தேன் சேர்த்து மிக்ஸியில் அடித்து பாயசத்துடன் சேர்த்து பாருங்கள், பாயாசம் கெட்டியாக அதீத சுவையுடன் மாறிவிடும்.

wheat

குறிப்பு 3:
நீங்கள் சப்பாத்திக்கு கோதுமையை வீட்டில் அரைக்கும் பொழுது மாவை சலிப்பீர்கள் அல்லவா? அப்போது மீதமிருக்கும் மாவினுடைய திப்பிகளை வீணாக தூக்கி எறியாமல் அடை மாவில் சேர்த்து அடை செய்தால் சுவையாக இருக்கும், ஆரோக்கியமும் பலப்படும்.

- Advertisement -

குறிப்பு 4:
ஆம்லெட் போடுபவர்கள் உப்பு, மிளகுத் தூள் தூவும் பொழுது கொஞ்சம் ஜீரக பொடியையும் சேர்த்து தூவி பாருங்கள், சுவை சூப்பராக இருக்கும்.

vinegar

குறிப்பு 5:
வாழைப்பூவை சமைக்கும் பொழுது அதனை நறுக்கும் சமயத்தில் ஏற்படும் கரையானது கைகளை விட்டு எளிதாக நீங்குவதில்லை. வாழைப்பூ கறை நீங்க கொஞ்சம் தண்ணீருடன் வினிகர் சேர்த்து கையை கழுவுங்கள், சுலபமாக நீங்கி விடும்.

- Advertisement -

குறிப்பு 6:
நீங்கள் துணி வைக்கும் அலமாரிகளில் பூச்சி தொந்தரவு ஏற்படாமல் இருக்க அந்த இடத்தில் ரசக்கற்பூரம் வைப்பது வழக்கம். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியும் காய்ந்த எலுமிச்சை தோல் மற்றும் ஆரஞ்சு தோல் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழ வகைகளின் தோல்களைக் காய வைத்து போட்டுப் பாருங்கள். ஒரு பூச்சி கூட வராது, அலமாரி முழுவதும் வாசனையாகவும் இருக்கும்.

orange-peel

குறிப்பு 7:
பயன்படுத்தாத பழைய அலுமினிய பாத்திரங்கள் நாளடைவில் அதன் பொலிவை இழந்து மங்கலாக கறுத்து காணப்படும் அத்தகைய பாத்திரங்களை கொஞ்சம் எலுமிச்சை சாறு பயன்படுத்தி துடைத்தால் போதும் பளிச்சென மின்னும்.

குறிப்பு 8:
கம்பளி உடைகளை பயன்படுத்துபவர்கள் அதை அடிக்கடி உபயோகப்படுத்துவது இல்லை எனவே அப்படியே வைத்திருந்தாள் நாளைடைவில் அதில் பூச்சிகள் அரிக்க ஆரம்பித்துவிடும். அந்த தொந்தரவில் இருந்து விடுபெற நீங்கள் கம்பளியை மடித்து வைக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் படிக்காரத் தூளைத் தூவி வைத்து விடுங்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் பூச்சிகள் அரிக்காமல் அப்படியே இருக்கும்.

kambali

குறிப்பு 9:
முகம் பார்க்க பயன்படுத்தும் கண்ணாடியானது நாளடைவில் அதன் பொலிவை இழந்து அழுக்கு படிந்து காணப்படும். இந்த அழுக்கை எளிதாக நீக்க ஒரு சுத்தமான வெள்ளைத் தாளை தண்ணீரில் நனைத்து நன்கு தண்ணீரை பிழிந்து விட்டு அதன் பிறகு துடைத்து பாருங்கள், எவ்வளவு அழுக்காக இருந்தாலும் சுத்தமாக நீங்கி கண்ணாடி புதிது போல பளிச்சிடும்.

குறிப்பு 10:
வெள்ளி கொலுசுகள் கறுத்துப் போய் இருந்தால் ஒரு டம்ளரில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் ஷாம்பூ ஊற்றி லேசாக தண்ணீர் தெளித்து நன்கு குலுக்கி அப்படியே ஒரு மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு லேசாக அழுத்தி தேய்த்தால் போதும் கொழுசு பளிச்சென மின்னும்.

- Advertisement -