வருடம் முழுக்க உங்க வீட்டு மல்லி செடி கூடை கூடையாய் பூக்களை கொடுக்க வாரம் 1 முறை இந்த தண்ணீரை ஊற்றி வாருங்கள் போதும்!

jasmine plant
- Advertisement -

கொத்துக் கொத்தாக மல்லி செடிகளில் பூக்கள் பூப்பதை பார்க்கும் பொழுதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதன் வாசம் வீட்டையே நறுமணம் மிக்கதாக மாற்றி, நம்மை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். இத்தகு மல்லிப்பூ செடியில் கூடை கூடையாய் பூக்களை வருடம் முழுவதும் அள்ளுவதற்கு நாம் சுலபமாக எந்த உரங்களை கொடுக்க இருக்கிறோம்? என்பதைத் தான் இந்த தோட்டக்குறிப்பு தகவல்களின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மல்லி பூ செடி நன்கு திராட்சியாக பூச்சிகள் இல்லாமல் செழித்து வளர, அதற்கு தேவையான ஊட்டசத்தை கண்டிப்பாக கொடுத்து ஆக வேண்டும். இல்லையென்றால் பூக்கள் அவலவாக பூக்காது, எளிதாக வாடி விடவும் கூடும். நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய முக்கியமான சில பொருட்களை வைத்தே மல்லி செடிக்கு தேவையான ஊட்டச்சத்து உரத்தை தயார் செய்யலாம். இதை லிக்விட் வடிவில் தான் நாம் கொடுக்கப் போகிறோம்.

- Advertisement -

முதலில் நீங்கள் வாரம் ஒரு முறையாவது இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது பழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். இப்படி இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் போது தண்ணீரை கொஞ்சம் கூடுதலாக சேர்த்து ஊற வையுங்கள். இட்லி அரிசி, உளுந்து ஊறிய இந்த தண்ணீர் முக்கால் லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் அரை லிட்டர் அளவிற்கு அரிசி வடித்த கஞ்சி தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

புளித்த நீர்மோர் அரை லிட்டர் அளவிற்கு இரண்டு நாட்கள் வெளியில் வைத்திருந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பூச்சிகள் வராமல் இருக்க பெருங்காயத்தூள் அல்லது கட்டிகளை உடைத்து சேருங்கள். பின் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ள வாழைப்பழங்கள் சேர்க்க வேண்டும். பழுத்த சாப்பிட முடியாத வாழை பழங்களை கூட நீங்கள் இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். தோலுடன் அப்படியே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் ஒரு கப் அளவிற்கு சேர்க்க வேண்டும். வாழைப்பழத்துடன் இதனை பிசைந்தும் சேர்க்கலாம். இவைகளை ஒரு பிளாஸ்டிக் வாலி அல்லது ஏதாவது ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து காற்று போகும் படியாக ஒரு மெல்லிய துணியை மேலே வைத்து நூல் சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். ஏழு நாட்கள் வரை இதை அப்படியே வைக்க வேண்டும். ஏழு நாட்களுக்குள் இவை நன்கு புளித்து இதில் நுண்ணுயிரிகள் ஏராளமாக பெருக துவங்கும். இந்த உரம் நொதிக்க துவங்கும் பொழுது இதில் ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கும்.

இந்த ஏழு நாட்களில் இடையிடையே உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இரண்டிலிருந்து மூன்று முறையாவது துணியை பிரித்து அதன் உள் இருக்கும் கலவையை ஏதாவது ஒரு கரண்டி அல்லது மர குச்சியை பயன்படுத்தி கலந்து விட்டுக் கொள்ளுங்கள். மீண்டும் அதே போல இறுக்கமாக மூடி வைத்து விடுங்கள். இதுபோல செய்த பின்பு இந்த உரம் எட்டாவது நாளில் தயாராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்க வீட்டில் மல்லி செடி, ரோஜா செடி மற்ற பூச்செடிகளுக்கு பூச்சி தொந்தரவு இருக்கா? செலவில்லாமல் இயற்கையாக இதை செஞ்சு பாருங்க ஒரு பூச்சி கூட பூச்செடியை நெருங்காது!

20 லிட்டர் சாதாரண தண்ணீருடன் ஒரு லிட்டர் அளவிற்கு இந்த உரத்தை நாம் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். 10 லிட்டர் என்றால் அரை லிட்டர் இந்த உரத்தை கலந்தால் போதும். பின்னர் உங்கள் வீட்டில் இருக்கும் மல்லி செடி மற்றும் எல்லா வகையான பூச்செடிகளுக்கும் இந்த உரத்தை பயன்படுத்தலாம். பூச்செடிகள் மட்டுமல்லாமல், காய்கறி செடிகளுக்கும் கூட இதை பயன்படுத்துவதால் நிறைய காய்கறிகள் கொத்துக் கொத்தாக காய்க்க ஆரம்பிக்கும். பூக்களும் கூடை கூடையாக பூத்து தள்ளும்.

- Advertisement -