உங்க வீட்டில் மல்லி செடி, ரோஜா செடி மற்ற பூச்செடிகளுக்கு பூச்சி தொந்தரவு இருக்கா? செலவில்லாமல் இயற்கையாக இதை செஞ்சு பாருங்க ஒரு பூச்சி கூட பூச்செடியை நெருங்காது!

rose-and-jasmine
- Advertisement -

ரோஜா செடி, மல்லி செடி என்று விதவிதமான பூச்செடிகளை வளர்ப்பவர்கள், அதில் பூச்சி தொந்தரவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. ஒவ்வொரு பூச்செடியிலும், வித்தியாசமான பூச்சி வகைகள் வந்து குடி கொள்கின்றன. இவற்றை விரட்டி அடிப்பதற்கு பெரிதாக எதுவும் செலவு செய்யாமல், ரொம்ப ஈசியாக இதை செய்து பாருங்க! ஒரு பூச்சி கூட இனி உங்க பூச்செடியை நெருங்கவே செய்யாது. இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த தோட்ட குறிப்பு பதிவின் மூலம் இனி அறிந்து கொள்ள போகிறோம்.

வீட்டு தெருவில், ரோட்டோரங்களில் சர்வ சாதாரணமாக வளரக்கூடிய ஒரு மூலிகை செடி தான் குப்பைமேனி! இந்த குப்பைமேனி இலைகளை ஒரு கைப்பிடி அளவிற்கு பறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதே போல ஒரு கைப்பிடி அளவிற்கு வேப்பிலை இலை பிரஷ் ஆக பறித்து வையுங்கள்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஒரு கைப்பிடி அளவிற்கு குப்பைமேனி இலைகளையும், ஒரு கைப்பிடி அளவிற்கு வேப்பிலை இலைகளையும் நன்கு கழுவி சுத்தம் செய்து இதில் சேர்க்க வேண்டும். பின்னர் கடைசியாக நான்கைந்து பட்டை துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்கு கொதிக்க வைத்த பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். குளிர்ந்து ஆறியதும் ஒரு வடிகட்டியில் போட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். காலை வேலையில் அல்லது சூரியன் மறையும் நேரத்தில் மாலையில் இது போல எல்லா வகையான பூச்செடிகளுக்கும் ஸ்ப்ரே செய்ய வேண்டும். குறிப்பாக ரோஜா, மல்லி போன்ற செடிகளுக்கு இதை ஸ்ப்ரே செய்யும் பொழுது, ஒரு பூச்சி கூட அந்த செடிகளை அண்டாது பாதுகாக்கலாம்.

- Advertisement -

ஒருமுறை இதை செய்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது, பலன் இருக்காது. எனவே நான்கு நாட்களுக்கு ஒரு முறையாவது இதை தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும். இதனால் ஒரு மாதத்தில் நல்ல ஒரு ரிசல்ட்டை நீங்கள் காண முடியும். குப்பைமேனி, பட்டை, வேப்பிலை ஆகியவற்றில் இருக்கக்கூடிய கசப்புத் தன்மையும், நெடியும் பூச்சிகளுக்கு ஒவ்வாது, எனவே அந்த இடத்தை விட்டு அது நகர்ந்து ஓடிவிடும் அல்லது செத்து மடிந்து விடும்.

பூச்செடிகள் மட்டுமல்லாது காய்கறி செடிகள், பழ வகையான செடிகளில் கூட நீங்கள் இதனை பயன்படுத்தி பார்க்கலாம். மேலும் இதில் இயற்கையான பொருட்கள் மட்டுமே இருப்பதால் நல்ல ஒரு இயற்கை பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. செயற்கையாக பூச்சி விரட்டிகளை வாங்கி தெளித்து நம் செடிகளில் இருக்கக்கூடிய இயற்கை தன்மையை அழிப்பதை காட்டிலும், இது போல எளிய முறையில் இயற்கையான வழியில் தாவரங்களை பேணி பாதுகாப்பதால் அதனுடைய நன்மைகளை முழுமையாக நாம் அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே:
நர்சரியில் இருந்து ரோஜா செடி வாங்கி வந்தாலும் வளர மாட்டேங்குதா? இந்த குட்டி குட்டி டிப்ஸ் பாலோ பண்ணுங்க கண்டிப்பா வளரும்!

செயற்கை உரங்கள், செயற்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தும் பொழுது அதன் சத்துக்கள் குறைந்து விடுகிறது. சாப்பிடும் பொழுது ருசியும் இருப்பதில்லை, மணமும் இருப்பதில்லை எனவே உண்ணும் உணவு பொருட்களை விதைக்கும் பொழுது இயற்கை முறையில் விதைத்து இயற்கை பூச்சி கொல்லிகளை தெளிப்பது நல்லது.

- Advertisement -