பெண்களுக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்க பகவதி அம்மன் வழிபாடு.

bhagavathi amman
- Advertisement -

இந்த சமுதாயத்தில் என்னதான் ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்று கூறினாலும் இன்றளவும் பல பெண்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு குடும்பத்தில் இருக்கும் பிரச்சினையையும் சமாளித்துக் கொண்டு அதே சமயம் வேலையில் இருக்கும் பிரச்சினைகளையும் சமாளித்து வாழ்க்கையை நடத்திச் செல்லும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பகவதி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒருவித சக்தி இருக்கிறது என்று ஆன்மீகம் கூறுகிறது. பெண்ணை தெய்வமாக மதிக்க வேண்டும் என்றும் பல புராணங்களில் கூறப்பட்டு வருகிறது. குடும்பத்தை நடத்தும் குடும்பப் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அவர்களின் கணவரின் பிரச்சினை, பிள்ளைகளின் பிரச்சினை, வீட்டில் இருக்கும் மூத்தவர்களின் உடல்நலம் போன்ற அனைத்தையும் தங்கள் பிரச்சினையாக நினைத்துக் கொண்டு கவலைப்படுவார்கள் வேலைக்கு செல்பவர்களுக்கு இன்னும் ஒரு படி மேலே சென்று வேலையில் இருக்கும் பிரச்சனை என்று பிறரின் பிரச்சினைகளை தங்களின் பிரச்சினையாக எடுத்து வருத்தப்படும் பிறவியாக தான் பெண் திகழ்கிறாள்.

- Advertisement -

அப்படிப்பட்ட பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பகவதி அம்மனை வழிபட வேண்டும். இந்த வழிப்பாட்டிற்கு பகவதி அம்மனின் புகைப்படம் வேண்டும். ஒரு சுப முகூர்த்த நாளாக பார்த்து தேர்வு செய்து விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் பகவதி அம்மனின் புகைப்படத்தில் துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து பகவதி அம்மனுக்கு இரண்டு நீதிபங்களை ஏற்ற வேண்டும்.

மேலும் ஒரு புடவை, ஜாக்கெட்டு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல் போன்ற சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கும் பொருட்களை வாங்கி ஒரு தட்டில் வைத்து பகவதி அம்மனின் புகைப்படத்திற்கு கீழே வைத்து விட வேண்டும். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை பகவதி அம்மனுக்கு படைக்க வேண்டும். பிறகு “ஓம் பகவதி அம்மனே போற்றி” என்ற மந்திரத்தை 108 முறை கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அர்ச்சனை செய்த குங்குமத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் வைத்துக்கொண்டு அதே சமயம் அந்த குங்குமத்தை நிலை வாசலிலும் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் வழிபட வேண்டும். 48 வது நாள் வழிபாடு முடித்த பிறகு ஒரு சுமங்கலி பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பசியாற உணவளித்து பகவதி அம்மனின் படத்திற்கு கீழே வைத்திருக்கும் சுமங்கலி செட்டை எடுத்து கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய பரிகாரம்

இவ்வாறு செய்வதன் மூலம் நாம் எந்த பிரச்சினை தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து இந்த விரதத்தை மேற்கொள்கிறோமோ அந்த பிரச்சினையை பகவதி அம்மனே வந்து தீர்த்து வைப்பார்.

- Advertisement -