பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் மசால் செய்முறை

masal gravy ladies finger
- Advertisement -

பொதுவாகவே காய்கறிகள் என்றாலே குழந்தைகளுக்கு கொஞ்சம் அலர்ஜி தான். ஏன் பெரியவர்கள் கூட அசைவத்தை விரும்பி சாப்பிடுவது போல சைவத்தை சாப்பிடுவது கிடையாது. அதிலும் இந்த வெண்டைக்காய் என்றால் கேட்கவே வேண்டாம். அதன் வழவழப்பு தன்மையால் பெரும்பாலும் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்த காயை விரும்பி சாப்பிடுபவர்கள் சிலர் தான்.

அந்த வெண்டைக்காயில் பஞ்சாபி ஸ்டைலில் ஒரு மசால் கிரேவி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த கிரேவி சாதம் முதல் சப்பாத்தி வரை அனைத்திற்கும் நல்ல சைடு டிஷ் ஆக இருக்கும். சுவையும் அட்டகாசமாக இருப்பதோடு அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க அந்த மசால் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – 1/4 கிலோ,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி- 2
பச்சை மிளகாய் – 1,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத் தூள் -1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்,
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காவை கொஞ்சம் பெரிதாக நறுக்கி சேர்த்து அதன் வழவழப்பு தன்மை போகும் வரை வதக்கி விடுங்கள். அதன் பிறகு வெண்டைக்காய் நிறம் மாறும் போது இறக்கி தட்டில் கொட்டி ஆற விடுங்கள்.

- Advertisement -

இப்போது அதே பேனை மீண்டும் வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை அதில் ஊற்றி சீரகம் போட்டு பொறிந்த பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி விடுங்கள். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தக்காளியை மிக்ஸி ஜாரில் அரைத்து அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இவை அனைத்தும் நன்றாக வதங்கி பச்சை வாடை போகும் வரை காத்திருங்கள். இதன் பச்சை தன்மை போன பிறகு தயிர் சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சுண்டக்காய் துவையல் செய்முறை

கடைசியாக ஆற வைத்த வெண்டைக்காயை இந்த மசாலாவில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இந்த சமயத்தில் உப்பு சரியாக உள்ளதா என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தட்டு போட்டு ஐந்து நிமிடம் வரை வேக வைத்தால் போதும். வெண்டைக்காயில் எந்த மசாலாக்கள் அனைத்தும் இறங்கி அட்டகாசமான பஞ்சாபி ஸ்டைல் மசால் கிரேவி தயார்.

- Advertisement -