என்னது? இந்த சட்னி சாப்பிட்டால் நிறைய முடி வளருமா? ரொம்ப நாளைக்கு இளமையாக இருக்கலாமா? சூப்பரான பயோட்டின் சத்து நிறைந்த சட்னிங்க இது. மிஸ் பண்ணாதீங்க.

chutney1
- Advertisement -

பயோட்டின் சத்து நம்முடைய உடம்பில் தேவையான அளவு இருந்து விட்டாலே போதும். நம்முடைய முடி வளர்ச்சி அதிகரிக்கும். முகத்தில் சீக்கிரத்தில் சுருக்கம் விழாது. நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்கலாம். பயோடின் சத்து நிறைந்த லட்டு, ஹெல்த் டிரிங்க் நிறைய உள்ளது. இருப்பினும் நாம் எல்லோரும் சுலபமாக செய்து சாப்பிடும் படி பயோட்டின் சட்னி எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் ஒரு சிறிய பவுளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு – 8,  சூரியகாந்தி விதை – 1 டேபிள் ஸ்பூன், வெள்ளரி விதை – 1 டேபிள் ஸ்பூன், இந்த நான்கு பொருட்களையும் போட்டு ஒரு முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி, அந்த தண்ணீரை வடிகட்டி விடுங்கள். பிறகு சூடான தண்ணீரை இந்த பொருட்களில் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பருப்பு வகை எல்லாம் ஒரு மணி நேரம் ஊறியதும், பாதாம் பருப்பில் இருக்கும் தோலை மட்டும் நீக்கிவிட்டு, ஊற வைத்த இந்த நான்கு பொருட்களையும் மிக்ஸியில் போட்டு, இதோடு பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 4 இலைகள், சீரகம் – 1/4 கால் ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு, கொஞ்சமாக இந்த பருப்புகளை ஊற வைத்த தண்ணீரை ஊற்றி, சட்னி போல அரைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவைப்பட்டால் இதோடு – 2 துண்டு தேங்காய், பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன், வைத்தும் ருசியாக அரைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். அரைத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒருசிறிய தாளிப்பு கரண்டியில் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் தாளித்து, இந்த சட்னியில் கொட்டி தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி கரைத்து, இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இந்த பொருட்களை ஊறவைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடக்கூடாது. ஊறவைத்த தண்ணீரை ஊற்றி சட்னியை அரைத்துக் கொள்ளுங்கள். அப்போது எல்லா சத்தும் அதில் நிறைந்திருக்கும். பயோட்டின் சத்துக்கள் நிறைவாக இருக்கும். வேர்க்கடலை, பாதாம் பருப்பு, வெள்ளரி விதை, சூரியகாந்தி விதையை, நாம் உணவோடு சேர்த்துக் கொள்ளும்போது நம்முடைய உடல் ஆரோக்கியம் பெறும். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சட்னியை சாப்பிடலாம். ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்தச் சட்னியை சாப்பிடலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இந்த சட்னியை கொஞ்சமாக கொடுப்பது தவறு கிடையாது.

- Advertisement -