கல்யாண வீட்டு ‘பிரிஞ்சி சாதம்’ சுவையாக இருப்பதற்கு காரணம் இந்த ரகசியம் தானா. இந்த ஐடியாவை தெரிந்து கொண்டு நீங்களும் இதேபோல ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. பிரிஞ்சி சூப்பரா வரும்.

brinji
- Advertisement -

என்னதான் நம்முடைய வீட்டில் இந்த பிரிஞ்சி சாதத்தை செய்து சாப்பிட்டாலும், கல்யாண வீட்டில் சாப்பிட்ட திருப்தி மட்டும் கிடைக்கவே கிடைக்காது. அது என்ன கல்யாண வீட்டில் அப்படி ஒரு ரகசியத்தை அந்த பிரிஞ்சி சாதத்தில் சேர்த்திருப்பார்கள். எதுவும் இல்லைங்க. பின்னாடி சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி பிரிஞ்சி சாதம் சமைத்து பாருங்கள். உங்கள் வீட்டிலேயே கல்யாண வீட்டு பிரிஞ்சி சாப்பாடு கிடைக்கும்.

முதலில் 2 கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். 400 கிராம் அளவு பாசுமதி அரிசிக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும். அரிசியை நன்றாக கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து 1 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கின்ற தண்ணீரில் புதினா இலைகள் 1/2 கைப்பிடி அளவு, மல்லித்தழை 1/2 கைப்பிடி அளவு பச்சை மிளகாய் 2, உப்பு 1 ஸ்பூன், போட்டு விடுங்கள். அந்த தண்ணீரில் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். பாசுமதி அரிசி 70% வரை வெந்ததும் தண்ணீரை வடித்து, அரிசியை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசி அப்படியே இருக்கட்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை – 3, ஸ்டார் ஆனிஸ் – 3, பட்டை – 1, பச்சை மிளகாய் வெட்டியது(குறுக்கே கூறியது) – 5 போட்டு, நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பின்பு  நைஸாக நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் – 3, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் போட்டு, வெங்காயத்தை பிரவுன் நிற வரும் அளவிற்கு வதக்கி விட்டு, கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கிய பெரிய தக்காளி பழம் – 2, பீன்ஸ் – 50 கிராம் நறுக்கியது, கேரட் – 50 கிராம் நறுக்கியது, உருளைக்கிழங்கு – 3 தோல் சீவி நறுக்கியது, பச்சை பட்டாணி – 1 கைப்பிடி அளவு, உப்பு – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

2 நிமிடம் இந்த பொருட்கள் எல்லாம் எண்ணெயில் வதங்கி வந்தவுடன், தண்ணீரில் ஊற வைத்த மீல் மேக்கர் – 15, மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், சேர்த்து புதினா மல்லி தழை சேர்த்து – 1 கைப்பிடி போட்டு, தயிர் 100ml ஊற்றி நன்றாக எல்லா பொருட்களையும் கலந்து விடுங்கள். காய் வெங்காயம் தயிரிலிருந்து நன்றாக தண்ணீர் விட்டு காய் வதங்கி வரும்.

இறுதியாக இதில் 200ml அளவு தண்ணீரை விட்டு ஒரு மூடி போட்டு காயை 7 லிருந்து 8 நிமிடங்கள் நன்றாக வேக வைத்து விடுங்கள். அதன் பின்பு காய் வெந்ததும், இது ஒரு தொக்கு பதத்திற்கு தளதளவென நமக்கு கிடைத்திருக்கும். இதில் ஏற்கனவே 70% வேக வைத்திருக்கின்றோம் அல்லவா பாசுமதி அரிசியை கொட்டி பக்குவமாக மசாலாவை கலந்து ஒரு மூடி போட்டு விடுங்கள்.

அடுப்பில் ஒரு இரும்பு தோசை கல்லை வைத்து, நன்றாக சூடு செய்து, அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அந்த தோசை கல்லின் மேல் இந்த பிரிஞ்சி பாத்திரத்தை வைத்து, பாத்திரத்திற்கு மேலே ஒரு மூடி போட்டு, தட்டிற்குமேலே ஆவி போகாமல் இருக்க, ஒரு கல்லை வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் பிரியாணி அப்படியே தம் ஆகட்டும். அதன் பின்பு எடுத்து பிரியாணியை கலந்து பாருங்க. சூப்பரா இருக்கும். இதோட முடிஞ்சிடவில்லை. ஃபைனல் டச் ஒன்னு இருக்கு.

மூன்று பிரட் துண்டுகளை எடுத்து சின்னதாக வெட்டிக் கொள்ள வேண்டும். அந்த பிரட் துண்டுகளை எண்ணெயில் பொரித்து பொன்னிறமாக வறுத்து அதை அப்படியே இந்த பிரியாணியில் போட்டு கலந்து சுட சுட பரிமாறினால், வேற லெவல் டேஸ்ட் இருக்கும் பார்த்துக்கோங்க. இதே போல மெலே சொன்ன அளவுகளில் ஒரு முறை உங்க வீட்ல பிரியாணி ட்ரை பண்ணி பாருங்க. கல்யாண வீட்டு பிரிஞ்சி சாதம் உங்க வீட்ல.

- Advertisement -