நீங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ப, எந்த நிற பூவைச் சூடிக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்? குறிப்பிட்ட சில தேதியில் பிறந்த பெண்கள், தலை சம்மந்தமாக சில தவறுகளை மட்டும் செய்யவே கூடாது.

flower-poo-rose

பொதுவாகவே பெண்கள் என்றால் எப்போதும் தலையில் பூ வைத்திருக்க வேண்டும். அது மங்களத்தைக் குறிக்கும். பெண்கள் தலையில் வாசனை பூவைச் சூடிக்கொண்டால், வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சத்தையும் தேடித்தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், குறிப்பாக எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த நிற பூவைச் சூடிக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று தெரிந்து கொண்டு, அந்த நிற பூவை, அதிகமாக சூடிக் கொள்ளும் பட்சத்தில், நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வேகமாக வீசும். பூ வைப்பதிலும், தலை சீவுவதிலும், சில தவறுகளை மட்டும், சில தேதியில் பிறந்த பெண்கள் செய்யக்கூடாது. அது என்ன தவறு? என்பதைப் பற்றியும், நீங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ப எந்த பூவை சூடிக் கொள்ளலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா?

Roja chedi

நீங்கள் 1 ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் ஒன்றாக இருந்தாலும், பிங்க் நிற ரோஜா பூவை சூடிக் கொள்ளலாம் அல்லது சிவப்பு நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம். ஆனால், ரோஜா பூவை எக்காரணத்தைக் கொண்டும் பக்கவாட்டில் வைக்கக் கூடாது. அதாவது, சைட் ரோஜா வைக்கக்கூடாது. தலைக்கு நடுப்பகுதியில் தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் 2ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 2 ஆக இருந்தாலும், மல்லிகைப்பூ, முல்லைப்பூ காட்டுமல்லி, இவைகளை சூடிக் கொள்ளலாம். மஞ்சள் நிற ரோஜாவை சூடிக் கொள்வது அதிர்ஷ்டத்தை தேடி தரும். இவர்களும் பக்கவாட்டில் ரோஜா பூ வைக்க கூடாது. குறிப்பாக பூவை தொங்க தொங்க வைக்கக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மூன்று மடிப்புகளாக மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

malligai poo

3ஆம் எண்ணில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 3ஆக இருந்தாலும், இவர்கள் ஆரஞ்சு நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம். கனகாம்பரம் பூ சூடிக் கொள்வது அதிர்ஷ்டத்தை தேடி தரும். இவர்களும் பக்கவாட்டில் ரோஜா பூக்களை வைக்கக்கூடாது.

- Advertisement -

4ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 4 ஆக இருந்தாலும், இவர்கள் பூவை முந்தைய நாள் வாங்கி வைத்து, அடுத்த நாள் சூடிக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும். எந்த வகை பூக்களை வேண்டுமென்றாலும் சூடிக் கொள்ளலாம்.

pengal-poo

5ஆம் எண்ணில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது பிறந்த தேதியின் கூட்டு எண் 5 ஆக இருந்தாலும், இவர்கள் கட்டாயம் வாசனை உள்ள பூக்களை மட்டும் தான் சூட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காகித பூக்கள், அதாவது ஆர்ட்டிஃபிஷியல் பூக்களை அழகுக்காக சூடிக் கொள்ள கூடாது. இவர்கள் கட்டாயம் பூக்களை தொங்க தொங்க வைத்து கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

6ஆம் எண்ணில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 6 ஆக இருந்தாலும், மல்லிகை பூ சூடிக் கொள்ளலாம். அதிர்ஷ்டம் உண்டாகும். வெள்ளை நிற ரோஜாவை சூடுவது அதிர்ஷ்டம் உண்டாகும். இவர்கள் கட்டாயம் பக்கவாட்டில் ரோஜாப்பூவை வைத்துக்கொள்ளக் கூடாது. நேராகத்தான் தலையில் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் கனவில் உங்களை நீங்களே! இப்படியெல்லாம் பார்த்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

7ஆம் எண்ணில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 7 ஆக இருந்தாலும் கதம்ப பூ வைத்துக்கொள்வது அதிகப்படியான அதிர்ஷ்டத்தை தேடி தரும். குறிப்பாக ஏழு வண்ணகளில் பூக்களை சேகரித்து, ஒன்றாக தொடுத்து உங்கள் தலையில் வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தேடி தரும். முடியாதவர்கள் பலவண்ண நூல்களைக் கூட பூவுக்கு இடையே வைத்து கட்டி தலையில் வைத்துக் கொள்ளலாம்.

8ஆம் எண்ணில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 8 ஆக இருந்தாலும் மல்லிகை பூ சூடுவது அதிர்ஷ்டத்தை தேடி தரும். எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சைட்(கோண வகிடு) வகிடு எடுத்து தலை வாருவது அதிர்ஷ்டத்தை தேடி தரும்.

mallipoo

9 ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 9ஆக இருந்தாலும், பிங்க் நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம் அல்லது சிவப்பு நிற ரோஜாவை சூடிக் கொள்வது அதிர்ஷ்டத்தை தேடி தரும். இவர்கள் கட்டாயம் சவுரி முடியை வைத்துக் கொள்ளவே கூடாது. எக்காரணத்தைக் கொண்டும், ஒன்பதாம் தேதியில் பிறந்தவர்கள், சவுரி முடி வைக்கும் தவறை மட்டும் செய்யாதீர்கள். தேவையில்லாத பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் சவுரி வைப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே
“S” என்ற முதல் எழுத்தில், உங்கள் பெயர் ஆரம்பித்தால், உங்களுடைய குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்.

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Lucky flower by date of birth in Tamil. What is my birth date flower. Birth date birth flower. My birth date flower. Birth flower by date.