ஈசி தூசியா சுலபமாக சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சூப்பர் ரெசிபி தான் இது. கருப்பு சென்னா ட்ரை மசாலா ரெசிபி. சப்பாத்தி, தோசை, பூரி இவைகளுக்கெல்லாம் இது சூப்பரான சைடிஷ். ஒருவேளை உணவை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மிகவும் சுவையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ரெசிபியை மறக்காம ட்ரை பண்ணி பாருங்க. ஹாஸ்டல்ல தங்கி இருக்கிறவங்க பேச்சுலர்ஸ்க்கு இந்த ரெசிபி நிச்சயம் கை கொடுக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.
செய்முறை
100 கிராம் அளவு கருப்பு கொண்டை கடலையை, முந்தைய நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊர வைத்த கொண்டை கடலையை கொஞ்சம் முளை கட்டினால் கூட இன்னும் கொஞ்சம் ஆரோக்கியம் தான். அது உங்களுடைய விருப்பம். ஊற வைத்த கொண்டை கடலையை உப்பு போட்டு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வேகவைத்த கொண்டை கடலை, அந்த தண்ணீர் இரண்டுமே நமக்கு தேவைப்படும். ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் சீவி கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி தனியாக அதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு சின்ன பவுலில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், சீரகத்தூள் 1/2 ஸ்பூன், ட்ரை மேங்கோ பவுடர்(ஆம்ச்சூர் பவுடர்) 1/2 ஸ்பூன், இந்த பொடியை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை கட்டிகள் இல்லாமல் கரைத்து அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கொஞ்சமாக கடுகு, சீரகம், போட்டு தாளித்து கருவேப்பிலை ஒரு கொத்து போட்டு பவுலில் கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை இதில் ஊற்றி விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இந்த கரைசலை ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக வதக்குங்கள். இதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது அரைத்த பெரிய தக்காளி பழம் 1, இதில் ஊற்றி உப்பு தேவையான அளவு போட்டு, மீண்டும் நன்றாக வதக்குங்கள். தக்காளியை ஊற்றிய பின்பு நான்கிலிருந்து ஐந்து நிமிடம் அந்த விழுதை நன்றாக வதக்கி விடவும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு.
தக்காளியின் பச்சை வாடை நீங்கி மீண்டும் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது வேக வைத்திருக்கும் கருப்பு கொண்டை கடலையையும், வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் இதில் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். இறுதியாக கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர் இருக்கும் அல்லவா அதை எடுத்து இந்த மசாலாவில் ஊற்றி, 1 பச்சை மிளகாய் போட்டு நன்றாக கலந்து விட்டு, கொஞ்சம் செமி கிரவியாக வந்தவுடன் இதில் கொத்தமல்லி தழைகளை தூவி ருசித்துப்பாருங்கள். ஆகா சூப்பரா இருக்குங்க. (தேவை என்றால் இந்த மசாலாவை மொத்தமும் ட்ரை செய்து கொள்ளலாம். அடுப்பை சிம்மில் வைத்து விட்டால், எல்லா தண்ணீரும் சுண்டி மசாலா டிரை ஆகும். செமி கிரேவி தேவை என்றால் கொஞ்சம் தளதளவென இறக்கிக் கொள்ளுங்கள்.)
இதையும் படிக்கலாமே: இட்லி, தோசை, குழி பணியாரம், பொங்கல், இதற்கெல்லாம் தொட்டு சாப்பிட அருமையான உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் ஒரு சட்னி அரைக்கலாம் வாங்க.
சாதாரணமா நம்ம வீட்ல செய்யற சப்பாத்தி பூரிக்கு சைட் டிஷ்ஷா இதை ஒரு முறை கட்டாயம் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாக்கணும். வீட்டில் இருப்பவர்கள் அப்படி பாராட்டுவார்கள். அது மட்டும் இல்லை. இது உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ரெசிபி.