மூக்கின் மேலே இருக்கும் இந்த கரும்புள்ளிகளை வரவிடாமல் தடுக்க வீட்டில் இருந்தபடியே ஒரு அழகு குறிப்பு.

face3
- Advertisement -

ஆங்கிலத்தில் இதை blackhead whitehead என்று சொல்லுவார்கள். என்னதான் முகம் அழகாக இருந்தாலும், மூக்கின் மேல் பகுதி இப்படி கரும்புள்ளிகளால் மறைக்கப்பட்டிருந்தால் அது முழுமையான அழகை கொடுக்காது. இதை செயற்கையான முறையில் ரிமூவ் செய்ய நிறைய வழிகள் உள்ளது. ஆனால் அதெல்லாம் எந்த அளவுக்கு நம்முடைய சருமத்திற்கு நல்லது என்று தெரியவில்லை.

இயற்கையான முறையில் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு மாஸ்க் உள்ளது. அதை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய முகம் பளபளப்பாக இருக்கும். பிளாக்கெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் பிரச்சனை அதிகமாக இருக்காது. முகத்தில் இந்த பேக்கை போடுவதோடு சேர்த்து, உங்களுடைய வயிற்றுப் பகுதியையும் நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வயிற்றுக்குள் தேவையில்லாத கழிவுகள் தேங்கி இருந்தால், அதை நம்முடைய சருமம் இப்படித்தான் வெளிப்படுத்தும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே வாரத்திற்கு ஒரு நாள் சீரக தண்ணீர் குடிப்பது, வெந்தய தண்ணீர் குடிப்பது வயிற்றை சுத்தம் செய்யக்கூடிய விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் வயிறு சுத்தமாகும் போது தான் சருமமும் சுத்தமாக இருக்கும். சரி இப்போது இந்த கரும்புள்ளிகளை நீக்க என்ன அழகு குறிப்பை பின்பற்றலாம் என்பதை பற்றி பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மூக்கின் மேலே இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க

இந்த பேக் தயார் செய்ய ஒரு பழுத்த வாழைப்பழம், முல்தானிமெட்டிப் பவுடர் இந்த இரண்டு பொருட்களும் தேவை. மிக்சி ஜாரில் பழுத்த வாழைப்பழத்தை போட்டு முல்தானி மெட்டி பவுடர் 2 ஸ்பூன் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டினால் சூப்பரான கிரீமியான பேஸ் பைக் கிடைத்துவிடும். இதை சுத்தமாக இருக்கும் உங்கள் முகத்தில் அப்ளை செய்து விடுங்கள்.

10 நிமிடம் கழித்து முகத்தில் காய்ந்திருக்கும் பேக்கை ஈரம் செய்துவிட்டு வட்ட வடிவில் மசாஜ் செய்து தர வேண்டும். குறிப்பாக நெற்றி பகுதி மூக்குப்பகுதி தாடை பகுதி, மூக்குகளின் இரண்டு ஓரத்தில் இருக்கக்கூடிய பகுதியில் எல்லாம் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு முகத்தை சுத்தமாக கழுவி விட்டு கொஞ்சமாக ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே செய்து கொள்ளவும். அடுத்தபடியாக முகத்தை மாய்சர்ரைசர் செய்யணும்.

- Advertisement -

உங்களுடைய முகத்திற்கு எந்த ஜெல் செட் ஆகுமோ அதை நன்றாக அப்ளை செய்து கொள்ளவும். அலோவேரா ஜெல் அல்லது சேஃப்ரான் ஜெல், இப்படி உங்க முகத்துக்கு எந்த மாய்சரைசர் செட் ஆகுமோ அதை நீங்கள் அப்ளை செய்து கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாள் இப்படி செய்து வர முகத்தில் கரும்புள்ளிகள் வராது.

உங்களுடைய வீட்டில் முல்தானி மெட்டி இல்லை என்றால் அதற்கு பதில் கடலை மாவு, பயத்த மாவு, பச்சைபயிறு மாவு, இப்படிப்பட்ட வேறு ஏதாவது மாவை கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். என்ன அழகு குறிப்பை பின்பற்றினாலும் சரி.

இதையும் படிக்கலாமே: முகத்தின் பொலிவை கெடுக்கக்கூடிய முகப்பருக்கள் நீங்க எளிமையான வீட்டு வைத்தியம்.

அதை மீறியும் உங்களுக்கு அதிகமாக பிளாக்கெட் ஒயிட்டெஸ் இருந்தால் உங்களுடைய வயிற்றுகுள் தேங்கி இருக்கும் கழிவுகள் தான் காரணம். இதற்கு நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகவும். மேலே சொன்ன இந்த அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -