டெய்லி இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? டக்குனு 5 நிமிஷத்துல செய்யக்கூடிய ‘பிரேக்பாஸ்ட்’ இப்படி செஞ்சு பாருங்க! எல்லோருக்கும் பிடிக்கும்.

bread-omlet

தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று அரைத்த மாவையே அரைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் இது போல புதுசாக ஏதாவது முயற்சி செய்யலாம். காலையில் எழுந்ததுமே நாம் சிற்றுண்டி சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். எப்பவுமே காலை உணவை மட்டும் தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலை உணவை தவிர்த்தால் உடலுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படும். காலை உணவில் சரிவிகித ஆரோக்கியம் மட்டும் நமக்கு கிடைத்து விட்டால் அன்றைய நாள் முழுவதும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து விட முடியும்.

bread-omlet1

இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் பிரெட் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். பொதுவாக பிரெட் ஆம்லெட் தவாவில் பிரட்டை வைத்து அதன் மேல் முட்டையை ஊற்றி செய்வது வழக்கம். அதை விட இதில் கொடுக்கப்பட்ட படி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். மிகவும் ருசியான சுவையை கொடுக்கும். பால், முட்டை, பிரெட் என்று மூன்றே பொருட்களின் அடிப்படையில் செய்யப்படும் இந்த வித்தியாசமான பிரெட் ஆம்லெட் காலை உணவை சிறப்பாக மாற்றித் தரும் என்பது மட்டும் உறுதியானது. இதில் இருக்கும் சத்துக்கள் மூலம் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். அத்தகைய இந்த பிரெட் ஆம்லெட் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பிரெட் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 4,
பிரட் துண்டுகள் – 4,
பால் – 50ml,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவிற்கு..

bread-omlet2

பிரெட் ஆம்லெட் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு சிறிய பௌலில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். முட்டைக்கு தேவையான அளவிற்கு உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கலந்து விடுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நீர்க்க முட்டையை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதிலில் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றிக் கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சிறிதளவு முட்டைக் கலவையை லேசாக ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது பிரட் ஸ்லைஸ்களை வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிரெட்டிற்கு மேலே மீதமிருக்கும் கலவையில் முக்கால்வாசி பங்கை ஊற்றிக் கொள்ளுங்கள். முழுவதும் ஊற்றி விடாதீர்கள், சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். முட்டையுடன் அந்த பிரட் நன்றாக ஊறி விட்டிருக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் தவா அல்லது தோசை கல் வைத்துக் கொள்ளுங்கள். தோசைக்கல் சூடாகியதும் அதில் சிறிதளவு வெண்ணெயை தடவி கொள்ளுங்கள்.

bread-omlet3

பின்னர் நீங்கள் ஊற வைத்த பிரட் துண்டுகளை வைத்து நன்கு வேகவிடவும். மீதமிருக்கும் முட்டை கலவையை பிரெட்டின் மேலே லேசாக ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தாங்க! ரொம்ப ரொம்ப சுலபமா அஞ்சு நிமிஷத்துல கடகடன்னு செஞ்சிடலாம். இதன் சுவையே அலாதியானதாக இருக்கும்.

bread-omlet4

குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும் பிரெட் ஆம்லெட்டை அடிக்கடி செய்து கொடுத்தால் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரட் ஆரோக்கியமானதாக இருக்க வீட் பிரட்(கோதுமை) வாங்கலாம். இதனை காலையில் மட்டும் அல்ல, விரும்பினால் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுத்த அனைவரையும் அசத்தலாம். சூடாக சாப்பிடும் பொழுது நான்கைந்து பிரெட்டுகள் கூட வயிற்றுக்குள் இறங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே
வெங்காயம் பூண்டு சேர்க்காத, இப்படி ஒரு சட்னியை எப்படி செய்வது? வித்தியாசமான, சுலபமான 2 நிமிடத்தில் சட்னி!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.