ஜோதிடம் : உங்களுக்கு புதன் திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

budhan-palangal

அனைத்தையும் அறிந்து கொள்வது அறிவு எனப்படும். மற்ற உயிர்கள் அனைத்தும் ஐந்தறிவிற்குள்ளாகவே அடங்கி விடுகின்றன. ஆனால் மனிதன் தனது மூளையை பயன்படுத்தி சிந்திக்கும் அறிவே ஆறாவது அறிவு எனப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு மனிதனுக்கு இத்தகைய அறிவாற்றலை தரும் கிரகமாக புதன் கிரகம் இருக்கிறது. அந்த புதன் கிரகத்தால் ஏற்படும் புதன் திசை காலத்தில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

ஒருவரின் ஜாதகத்தில் புதன் திசை 17 வருட காலம் நடக்கிறது. புதன் கிரகத்திற்குரிய ராசிகளான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருக்க பெற்றாலும் அல்லது ஜாதகத்தில் புதன் இருக்கும் வீட்டை சுப கிரகங்கள் பார்த்தாலும் புதன் திசை மிகுந்த நன்மையான பலன்களை அளிக்கும். முதல் 20 வயதிற்குள் ஒரு ஜாதகருக்கு புதன் திசை நடைபெரும் போது அந்த நபர் கல்வியில் மிக சிறப்பான நிலையினை அடைவார். சாதுர்யமான அறிவாற்றல் மிகுந்த பேச்சு திறன் உண்டாகும். புத்திசாலித்தனம், ஆராய்ச்சி மனப்பான்மை போன்றவை மேலோங்கும்.

நகைச்சுவை உணர்வு இந்த ஜாதகர்களுக்கு அதிகம் இருக்கும். வாழ்வில் எந்த ஒரு சூழ்நிலையிலும் யாருக்கும் பயப்படாமல் இருப்பார்கள். 20 வயதிற்கு மேல் 50 வயதிற்குள் புதன் திசை வரும் போது எந்தத் துறையிலும் நிபுணத்துவம் பெற்று பொருள், புகழ் ஆகியவற்றை சம்பாதிப்பர். வாணிபம், தகவல் தொழில்நுட்பம், கணித ஆசிரியர், விஞ்ஞான ஆய்வாளர், ஓவியம் நுண்கலைகள் போன்றவற்றை தொழிலாக செய்யும் அமைப்பு ஏற்படும்.

budhan

பலரும் கற்றுக்கொள்ள விரும்பும் ஜோதிட கலை ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். புதன் திசை நடக்கின்ற போது ஜோதிட கலை கற்று கொள்ளும் அமைப்பு பெரும்பாலானவருக்கு ஏற்படுகிறது. 50 வயதிற்கு மேல் ஒருவருக்கு புதன் திசை நடக்கின்ற போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, யோகம், தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல், வடக்கு திசையில் இருக்கும் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல் போன்ற அமைப்பு உண்டாகும். மேற்கூறிய புதன் திசை பலன்கள் புதன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் போதும், பாப கிரகங்களோடு சேராமலும் அல்லது அக்கிரகங்களின் பார்வை படாமல் இருந்தால் மட்டுமே ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினருக்குமான துதிகள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budha dasa palangal in Tamil. It is also called as Budhan bhagavan jothidam in Tamil or Budhan bhagavan palangal in Tamil or Jothidam budhan palangal in Tamil or Budhan thisai enna seiyum in Tamil.