உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்

budhan-bagawan

ஜாதகம் கணிப்பதற்கு மிகுந்த பொறுமையும் பலவற்றை ஆராயும் திறனும் அடிப்படை தேவைகளாக இருக்கின்றன. ஜாதகம் கணிக்கும் போது பலரும் தங்களுக்கு அதிர்ஷ்டங்கள் எப்போது, எப்படி, எந்த கிரகங்களால் ஏற்படும் என தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இதில் பலரும் சுப கிரகங்கள் மட்டுமே அதிக அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் தரும் என நினைக்கின்றனர். உண்மையை கூறுவதென்றால் ஜாதக கட்டங்களில் ஒவ்வொரு கட்டத்திலும், கிரகங்கள் நிற்கும் அமைப்பு, கிரகங்களின் கூட்டுச்சேர்க்கை, பார்வை, கிரகங்கள் நின்ற வீட்டிற்கு நட்பு, ஆட்சி, உச்சம் போன்ற பல விடயங்கள் அடிப்படையாக கொண்டு தான் அதிர்ஷ்ட வாய்ப்பு பற்றி கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் புதன் பகவான் எட்டாம் இட அதிபதி ஆகி, அவருடன் சுப கிரகங்கள் சேர்க்கை பெற்றால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

jathagam astro

ஒரு நபரின் ஜாதகத்தில் புதன் பகவான் 8 ஆம் வீட்டிற்கு அதிபதியாகி அந்த வீட்டில் சுப கிரகங்கள் ஏதேனும் இருக்கப் பெற்றால் அந்த ஜாதகர் தனது சிறந்த கல்வியறிவு மற்றும் பேச்சாற்றலால் திடீரென மக்களிடம் பிரபலமடைவார். மிகுதியான செல்வம் கிடைக்கப் பெறுவார். வாழ்வில் ஆடம்பர வசதிகள் ஏற்படத் துவங்கும். அந்த ஜாதகர் ஒரு சிறந்த கணித மேதையாகவும் விளங்குவார். எனவே இத்தகைய ஜாதக அமைப்பு கொண்ட ஒரு சிலர் புகழ்பெற்ற ஜோதிடர்களாக மாற வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இத்தகைய ஜாதக நிலை பெற்றவர்கள் திடீர் புனித தல யாத்திரைகளை மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். அதிலும் குறிப்பாக புதன் பகவான் அம்சம் கொண்ட விஷ்ணு கோயில்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். அதன்மூலம் மேன்மேலும் அதிர்ஷ்டங்கள் பெருகும். விலையுயர்ந்த நவீன மின்னணு சாதனங்களை வாங்கும் யோகம் ஏற்படும்.

budhan

மேலும் ஜாதகருக்கு காதல் போன்ற விவகாரங்களில் வெற்றி உண்டாகும். தாய் மாமன் வழியில் மிகச்சிறந்த அதிர்ஷ்டமும், யோகமும் ஏற்படக்கூடும். விவசாயம், பண்ணைத் தோட்டம் போன்ற தொழில்கள் ஏற்றம் தரும். வீட்டில் வெண்கலப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். இந்த ஜாதக அமைப்பு கொண்டு கலைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் புகழும், செல்வ வளமும் பெறுவார்கள்.

- Advertisement -

budhan

புத்தகம் வெளியீடு, பத்திரிக்கை துறை போன்றவற்றில் நல்ல லாபங்கள் கிடைக்கும். மக்களின் செல்வாக்கையும் பெற்றுத்தரும். எந்த ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகளுக்கும் அவர்களே எதிர்பாராத வகையான மிகுதியான லாபங்களையும், அதிர்ஷ்டங்களையும் தரக்கூடிய வகையான திருப்பங்கள் வியாபாரங்களில் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் லக்னம் தரும் பலன்கள் என்ன தெரியுமா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budhan graha adhirstam in Tamil. It is also called as Budhan yogam palan in Tamil or Budhan palangal in Tamil or Adhirstam in Tamil or Jothida palangal in Tamil or Jathaga palangal in Tamil.