உங்கள் ஜாதகத்தில் லக்னம் தரும் பலன்கள் என்ன தெரியுமா?

laknam

நமது முன்னோர்கள் கண்டுபிடித்த பல அற்புதமான கலைகளில் ஜோதிட சாஸ்திரமும் ஒன்றாகும் நாம் பிறந்த நேரத்தை கொண்டு, தற்போது வானில் இருக்கின்ற நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை அடிப்படையாக வைத்து நமது எதிர்காலத்தை கணிக்கும் ஒரு கலையாக ஜோதிட சாஸ்திரம் திகழ்கிறது. அத்தகைய ஜோதிடத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானோர் பிறந்த நேரத்தில் எழுதப்பட்ட ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு கூறப்படும் ஜோதிட கலையை அதிகம் விரும்புகின்றனர். பொதுவாக ஜாதகத்தில் மொத்தம் 12 வீடுகள் அல்லது ராசிகள் இருக்கின்றன அதில் லக்னம் எனப்படும் முதல் வீட்டு பலன்கள் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Nakshatra

குழந்தை பிறக்கும் நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியாகும். ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 12 லக்னம் ஒன்றன் பின் ஒன்றாக உதயமாகும். அதாவது 2 மணி நேரத்திற்கு ஒரு லக்னம் என கொள்ளலாம். சூாியனின் அமைவிடத்தினை அடிப்படையாக கொண்டு லக்னம் அறியபடுகிறது. அதாவது சித்திரை மாதம் சூாியன் 0 முதல் 30 டிகிாி வரை அதாவது மேஷம் ராசியில் இருப்பாா். அன்றைய தினம் சூாிய உதய நாழிகையிலிருந்து முதல் 2 மணி நேரம் மேஷம் லக்னமாகும். 8 மணி முதல் 10 மணி வரை ரிஷபம் லக்னம். அன்றைய தினம் 24 மணி நேரத்தை கணக்கிட்டால் மொத்தம் 12 லக்னம் வரும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஜாதகரின் உடல்வாகு, நிறம், பிறரை கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்கள், தலைப்பகுதி, புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாக இருக்கிறது.

jathagam astro

எந்த ஒரு விடயத்திலும் அடிப்படை உறுதியாக இருந்தால் மட்டுமே பிற அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதே போன்று பிறந்த ஜாதகத்தில் லக்னம் எனப்படும் முதல் வீடு பலமாக அமைந்தால் தான் வாழ்வில் சுகங்கள் அனைத்தும் அனுபவிக்கும் யோகம் மற்றும் நீண்ட ஆயுளையும் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வசதியான வீடு, பூமி லாபம் ஏற்பட உங்கள் ஜாதகத்தில் இவை இருக்க வேண்டும்.

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lagnam kattam in Tamil. It is also called as Lagnam in Tamil or Jathagam lagnam in Tamil or Jothidathil 12 veedugal in Tamil or Lagnam palangal in Tamil.