புதன் பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இன்னும் சில நாட்களில் சிறப்பான யோகம் தான்

budhan
- Advertisement -

ஒரு மனிதன் சமயோசித புத்திக்கும், பகுப்பாயும் அறிவாற்றலுக்கும் காரகத்துவம் கொண்ட புதன் பகவான் வருகின்ற ஜூன் மாதம் 7 ஆம் தேதி புதன்கிழமை இரவு 7.58 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார். பொதுவாக 12 ராசிகளுக்கும் இந்த புதன் பெயர்ச்சியால் பலன்கள் இருந்தாலும். இந்த 5 ராசியினர் மட்டும் புத பகவானின் அருட்கடாசத்தால் கூடுதலான நற்பலன்கள் பெறுகின்றனர். அந்த 5 ராசியினர் யார்? அவர்களுக்கான பலன்கள் என்ன? என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

- Advertisement -

rishabam

புத பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் பெயர்ச்சியாவதால் ரிஷப ராசியினருக்கு புதன் பகவானின் அருளால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக தொழில், வியாபார துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத லாபங்களை பெறுவார்கள். தடைப்பட்டிருந்த பணவரவு உங்களிடம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, கூடுதல் வருமானம் போன்ற பலன்களை பெறுவார்கள். பொருளாதார நிலை உயரும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்

- Advertisement -

Kadagam Rasi

இந்த ஜூன் மாதம் ஏற்படுகின்ற புதன் பெயர்ச்சியால் கடக ராசியினர் நிச்சயமான நற்பலன்களை பெறுகிறார்கள். குறிப்பாக வேலையில்லாமல் கஷ்டப்பட்டவர்கள் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள். காதல், திருமணம் முயற்சி போன்ற விடயங்களில் வெற்றி கிடைக்கும். இல்லற வாழ்வில் தம்பதிகள் இடையே அன்னியோன்யம் கூடும். தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் கூடுதலான லாபங்களை பெறுவார்கள்.

கன்னி

- Advertisement -

kanni

இந்த ஜூன் மாதத்தில் புத பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதால் புத பகவானுக்குரிய கன்னி ராசியினர் சிறப்பான நற்பலன்களை பெறுகின்றனர். இந்த பெயர்ச்சியால் தொழில், வியாபார ரீதியில் சிறப்பான முன்னேற்றங்கள் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு உயர்பதவியும், ஊதிய உயர்வும் கிடைக்கும். இருக்கின்ற வேலையை விடுத்து வேறு நல்ல வேலைக்கு செல்லும் யோகமும் உண்டாகும். பொருளாதார நிலையில் இருந்த கஷ்டங்கள் நீங்கி, செல்வம் பெருகும்.

மகரம்

magaram

செவ்வாய் பகவானின் உச்ச வீடான மகர ராசியினருக்கு இந்த புதன் பயிற்சியால் கூடுதலான நன்மைகள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் லாபங்கள் அதிகரிக்கும். வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்கள் நல்ல ஊதியத்துடன் கூடிய பணி வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள். அரசாங்க உத்தியோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

meenam

மீன ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியானது எதிர்பாராத நல்ல மாற்றங்களை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் பெறுவார்கள். சிலருக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைத்து நல்ல வருமானம் பெறுவார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் சிலருக்கு பணவரவு உண்டாகும்.

- Advertisement -