டேஸ்டியான நாவூறும் பாதுஷா வீட்டிலேயே இவ்வளவு ஈசியாக செய்யலாமா? இது தெரிஞ்சா இனி பேக்கரியில் வாங்க வேண்டிய அவசியமே இல்லையே!

badusha-recipe
- Advertisement -

இனிப்பு வகைகளில் அதிக இனிப்பு சுவையை கொடுக்காத ஒரு இனிப்பு பாதுஷா! இந்த பாதுஷாவை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. பேக்கரி கடைகளில் இதை வாங்காமல் வீட்டிலேயே ரொம்ப டேஸ்ட்டியாக ஆரோக்கியமாக பட்டன் டிசைனில் எப்படி செய்வது? இந்த பட்டன் பாதுஷா பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் ரொம்பவே ருசியாக இருக்கப் போகிறது. மிதமான இனிப்பு சுவையை ரசித்து விரும்பி உண்ணக்கூடிய வகையில் இந்த ஜூசியான பாதுஷா எப்படி எளிதாக வீட்டில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பட்டன் பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்:
தயிர் – 1 டேபிள் ஸ்பூன், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன், மைதா மாவு – ஒரு கப், நெய் – நாலு டேபிள் ஸ்பூன், சமையல் எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப. பாகு காய்ச்ச: சர்க்கரை – ஒரு கப், தண்ணீர் – 3/4 கப், ஏலக்காய் – 3, லெமன் ஜூஸ் – ஒரு ஸ்பூன், ஃபுட் கலர் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

பட்டன் பாதுஷா செய்முறை விளக்கம்:
முதலில் பாதுஷா செய்வதற்கு ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தயிரை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் பேக்கிங் சோடா அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் அரை டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இவை இரண்டும் வெவ்வேறான பொருட்கள் ஆகும், எனவே குழம்பி விட வேண்டாம். இதனுடன் ஒரு கப் அளவிற்கு மைதா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். மைதா மாவு சேர்த்ததும் அரை பின்ச் உப்பு போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு நன்கு குலாப் ஜாமூன் மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைய வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் பாகு காய்ச்சுவதற்கு ஒரு கப் அளவிற்கு சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெள்ளை சர்க்கரையை ஒரு பேனில் போட்டு, முக்கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்து சர்க்கரை பாகு ஆனதும், அதில் லெமன் சாறு மற்றும் தேவையான ஃபுட் கலர் சேர்த்து கலந்து விடுங்கள். வாசனைக்கு மூன்று ஏலகாய்களை சிறிது போல் தட்டி போடுங்கள். பின்னர் ஒரு கம்பி பதம் வர நன்கு காய்ச்சியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதை இரண்டு புறமும் நன்கு நடுப்புறத்தில் குழி போல அழுத்திக் கொள்ளுங்கள். இது போல எல்லா மாவையும் பட்டன் டிசைனில் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்த அதிலிருந்து பேனை வையுங்கள். அதில் தேவையான அளவுக்கு எண்ணெய் விட்டு நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
அட இந்த மாவில் கூடவா முறுக்கு சுடுவாங்க? சப்பாத்தி மாவு போல இந்த மாவை பிசைந்தால், சத்து நிறைந்த மொறு மொறு முறுக்கு 10 நிமிடத்தில் தயார்.

எண்ணெய் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பாதுஷாக்களை போட்டு சிவக்க பொன்னிறமாக இருபுறமும் வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் காய்ச்சிய சர்க்கரை பாகு சேர்த்து நன்கு ஊற விட வேண்டும். பாகு சர்க்கரை பாகு முழுமையாக உறிஞ்சியதும் நீங்கள் எடுத்து சுவைக்கலாம். ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கக் கூடிய இந்த பாதுஷா ரெசிபி பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் அருமையாகவே இருக்கப் போகிறது. நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -