என்ன! வெயில் காலத்தில் ரோஜா செடி வாடாமல் இருக்க கல்லு கொடுக்கணும்மா?. இது என்ன புதுசா இருக்கு. வெயிலின் தாக்குதலில் இருந்து ரோஜா செடியை காக்க இதோ சூப்பர் டிரிக்ஸ்.

rose plant maintance
- Advertisement -

ரோஜா செடிகளை பொருத்த வரையில் மழைக் காலங்களில் அதிக பராமரிப்பு தேவையில்லை. ஆனால் வெயில் காலங்களில் இதற்கு கொஞ்சம் அதிகமாகவே பராமரிப்பு தேவை படும். அதே நேரத்தில் தண்ணீர் ஊற்றும் முறையும் பக்குவமும் மிகவும் முக்கியம். இப்போது வீட்டுத் தோட்டம் குறித்த இந்த பதிவில் வெயில் காலத்தில் ரோஜா செடியை பராமரிப்பது பற்றி ஒரு சின்ன டிரிக்ஸ் தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த வெயில் காலத்தில் ரோஜா செடிக்கு தண்ணீர் ஊற்றும் முறை முக்கியம். ரோஜா செடியை பொருத்த வரையில் நல்ல வெயில் பாங்கான இடத்தில் வைத்தால் தான் அதில் பூக்கள் வைக்கும் வெயில் படாத இடத்தில் வைத்தால் பூக்கள் வைக்காது.

- Advertisement -

இந்தச் செடிக்கு வெயில் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு தண்ணீரும் முக்கியம். சில நேரங்களில் வெயில் காலம் என அதிகமாக தண்ணீர் ஊற்றி விடுவார்கள். இதனால் வேர்கள் அழுகி பூக்கள் வைக்காமல் போய் விடும். பல நேரங்களில் தண்ணீர் குறைவாக ஊற்றி மண் உலர்ந்து போய் விடும். இதனாலும் செடிகள் வாடி பூக்கள் வைக்காது.

இப்போது இருக்கும் அவசர காலக்கட்டத்தில் மண் காய்ந்திருக்கிறதா? ஈரமாக இருக்கிறதா? என பார்த்து பார்த்து தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருக்க முடியாது. அதற்கு இந்த ஒரு சிம்பிள் டெக்னிக்கை ட்ரை பண்ணுங்க. நீங்க இரண்டு நாள் வரை தண்ணீர் ஊற்ற மறந்து விட்டாலும் கூட செடிகள் வாடாமல் இருக்கும்.

- Advertisement -

ரோஜா செடி வைத்திருக்கும் தொட்டியில் மேலே சிறு சிறு கற்களை போட்டு மண் தெரியாத அளவிற்கு பரப்பி விடுங்கள். இதை காலை அல்லது மாலை அதாவது வெயில் வருவதற்கு முன்பு அல்லது வெயில் மறைந்து பிறகு இதை செய்ய வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி விட்டால் கல்லிலும் தண்ணீர் ஊறி இருக்கும். அது மட்டுமின்றி மண்ணில் ஊறிய தண்ணீரும் வெயிலில் சீக்கிரம் உறிஞ்சி காய்ந்து விடாமல் இருக்கும்.

இந்த முறையை நீங்கள் தொடர்ந்து பின்பற்றும் போது இரண்டு நாள் வரை தண்ணீர் ஊற்றாமல் விட்டாலும் கூட செடிகள் வீணாகாது. ஆனால் இந்த கல்லை போட்டு வைக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். வெயில் நேரத்தில் எந்த காரணத்தில் கொண்டும் தண்ணீர் ஊற்றி விட விடாது.

- Advertisement -

காலை வெயில் வருவதற்கு முன்பு ஊற்றி விட வேண்டும் அல்லது மாலை நான்கு மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு தான் ஊற்ற வேண்டும். ஏனெனில் வெயில் நேரத்தில் உள்ளிருக்கும் மண் ஈரப்பதமாக இருக்கும். ஆனால் மேல் இருக்கும் கற்கள் மிகவும் சூடாக இருக்கும் நீங்கள் தண்ணீர் ஊற்றும் போது கல்லில் பட்டு சூடாக தண்ணீர் தொட்டியில் இறங்கி வேர்கள் செத்து செடி வீணாகி விடும்.

இதையும் படிக்கலாமே: ஒரு ரூபாய் செலவில் ரோஜா செடிகளில் வரக் கூடிய அத்தனை நோய்களையும் சரி செய்து, ரோஜா பூக்களை கொத்து கொத்தாக பூக்க வைத்து விடலாம்.

செடி வளர்க்க விருப்பப்படுபவர்கள் இது போன்ற சின்ன சின்ன ஐடியாக்களை தெரிந்து கொண்டால் இன்னும் சுலபமாக அதே நேரத்தில் அதிக செடிகளையும் வளர்த்து விடலாம்.

- Advertisement -